ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் குழந்தையாக வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிப்படுகிறது.
பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்-தணு 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை 24 மணி நேரம்தான் உயிருடன் இருக்கும்.
கருமுட்டை வெளியான 24 மணி நேரத்திற்குள், அதை ஆணின் உயிரணு சந்தித்து இணைந்து கொண்டால்தான் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும்.
இதனால், கரு முட்டை எப்போது வெளியாகிறது என்ற ஆர்வமான கேள்வி எழுகிறது. மாதவிலக்கு நின்ற 10 முதல் 20 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கருமுட்டை வெளிவரலாம்.
இந்த காலக்கணக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக