திங்கள், 4 அக்டோபர், 2010

நோய்களை தீர்க்கும் மருந்து செக்ஸ்



ன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வைக்கிறார்களேத் தவிர, உண்மையான - பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.

செக்ஸ் வைத்துக்கொள்ளாத பிரம்மச்சாரிகளைவிட (இரு பாலரும் சேர்த்துதான்) குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியே செய்து நிரூபித்து இருக்கிறார்கள் என்பதை எல்லா தம்பதியரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த மனிதப் பிறவி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். சொத்து, பணத்துக்காகவே வாழ்வதற்கும், எதற்கெடுத்தாலும் ஈகோவால் கோபப்பட்டு ஆனந்தத்தை தொலைப்பதற்கும் யாரும் பிறவி எடுக்கவில்லை. முடிந்தவரை எல்லோரும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

தாம்பத்திய வாழ்க்கையில் ஆனந்தமாக இருந்தால், மற்ற எல்லாவித ஆனந்தங்களும் வந்து சேரும். இதையும்கூட ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.

ஆம்... எல்லா பிரச்சினைகளையும், நோய்களையும் தீர்க்கும் ஒரே மருந்து செக்ஸ்தான் என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடிக்கடி தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி வருகிறதா? அப்படியென்றால், மனைவியுடன் திருப்தியான செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூட அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறினார்கள். 

மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்கூட செக்ஸ் வைத்துக் கொள்வதால் தீர்ந்து விடுகிறதாம்.

அது எப்படி செக்சுக்கும், நோய்க்கும் தொடர்பு இருக்கும்?’ என்று கேட்பவர்களுக்காகவே அவர்கள் விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள்.

ஒருவர் குடும்ப வாழ்க்கையில் துணையுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளாத சூழ்நிலையில் இருந்தால், அவருக்கு மனஇறுக்கம் அதிகரிக்கும். மேலும், எதற்கெடுத்தாலும் கோபப்படுவார். இதற்கு காரணம் உடலுறவு கொள்ளாததால் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றம்தான் (ஆண் யானைக்கு மதம் பிடிக்கவும், அதை அதன் துணையிடம் இருந்து பிரித்து வைப்பதுதான் காரணம்).

உடலுறவின்போது இருவரது உடலுக்குள் ஏற்படும் ரசாயன மாற்றம், அவர்களுக்குள் வலி நிவாரணி போன்றே செயல்படுகிறது. இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அத்துடன், திருப்தியான செக்ஸ் தொடர்பு வைத்துக்கொள்வதால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும், நல்ல தூக்கமும் கிடைக்கும், அதன்தொடர்ச்சியாக மனஇறுக்கம் விடுபட்டு மனதில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி பிறக்கிறது...என்று நீண்ட விளக்கம் கொடுக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

செக்ஸ் காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக, கவலைகள் இல்லாமல், எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகாமல், நோய் இல்லாமல் வாழ்ந்தால் உங்கள் ஆயுள் கூடுவதோடு, மனதாலும், உடலாலும் உங்களது இளமையும் அப்படியே என்று 16 போல்இருக்கும்தானே?

அதனால், ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது வாழத்தான். செக்ஸ் என்பதும் திருப்தியாக அனுபவிக்கத்தான்! 

ஸோ... என்ஜாய்!
Share: