வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஆண் குழந்தை வேண்டுமா?


ண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும்.

பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 

Share:

உடலை ஆரோ‌க்‌கியமாக்கும் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை


டலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌ கையாளு‌கிறோ‌ம்.

ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது. உடல் இளைப்பது, எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது எ‌ன்றா‌ல் அது தண்ணீர் ‌சி‌கி‌ச்சைதா‌ன்.

த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை எ‌ன்றா‌ல் ஏதோ பு‌திய ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்று எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதுதா‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை.

பலரு‌ம் சா‌ப்பாடு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ர் ப‌க்கமே போக மா‌ட்டா‌ர்க‌ள். அ‌ப்படியானவ‌ர்களது உட‌‌லி‌ல் எ‌ன்னெ‌ன்ன பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தா‌ல் அவ‌ர்களது நெ‌ஞ்சே ஒரு ‌நி‌மிட‌ம் ‌நி‌ன்று ‌விடு‌ம்.

‌த‌ண்‌ணீ‌ர் ந‌ம்மை பு‌த்‌துண‌ர்‌ச்‌சியாகவு‌ம், ஆரோ‌க்‌கியமாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌கிறது. த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதை ஒரு பழ‌க்கமாக‌க் கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். நாளொ‌ன்று‌க்கு 8 முத‌ல் 10 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம். கோடை கால‌த்‌தி‌ல் இ‌ன்னு‌ம் அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம்.

அ‌வ்வ‌ப்போது த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்தை மன‌தி‌ல் ப‌திய வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் குழ‌ந்தைகளையு‌ம் அடி‌க்கடி த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வையு‌ங்க‌ள். ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் குழ‌ந்தைக‌ள் பலரு‌ம் த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக அரு‌ந்த மா‌ட்டா‌ர்க‌ள். அத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் க‌‌ழிவறையை அடி‌க்கடி பய‌ன்படு‌த்த முடியாது எ‌ன்பதுதா‌ன்.

எனவே ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலைமையை சொ‌ல்‌லி‌ப் பு‌ரிய வையு‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கு‌ம் போதுமா‌ன ‌நீ‌ர் கொடு‌த்தனு‌ப்பு‌ங்க‌ள்.


உடலை இளை‌க்க வை‌க்கவு‌ம் கூட த‌ண்‌ணீ‌ர் பய‌ன்படு‌கிறது. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினாலு‌‌ம் குறையாத உடல் எடை, அ‌திக‌ப்படியான த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதா‌ல் குறைவதை‌க் க‌ண்கூடாக பா‌ர்‌க்கலா‌ம்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடி‌த்தா‌ல் வ‌யிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி‌க் கொ‌ண்டு கடைசியில் உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் தேவைய‌ற்ற ‌விஷய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ண்டு வெளியேறி விடுகிறது. 

எனவே அ‌திகமாக‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருபவ‌ர்களு‌க்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கு‌ம்.

Share: