பிறந்த குழந்தைக்கு ஏற்ற உணவு தாய்ப்பால் தான். ஆனால் ஏனோ, இன்றைய தாய்மார்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள். தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை, அழகு கெட்டுப்போய்விடும் என்றெல்லாம் அதற்கு காரணம் சொல்கிறார்கள்.
குழந்தை பெற்ற தாய்மார்கள், தினமும் உண்ணும் உணவில் அத்தியாவசியமான சில பொருட்களை சேர்த்துக்கொண்டாலே போதும். தாய்ப்பால் தாராளமாக சுரக்க ஆரம்பித்துவிடும்.
இதற்கு என்ன செய்யலாம்?
குழந்தை பெற்ற தாய்மார்கள், தினமும் உண்ணும் உணவில் அத்தியாவசியமான சில பொருட்களை சேர்த்துக்கொண்டாலே போதும். தாய்ப்பால் தாராளமாக சுரக்க ஆரம்பித்துவிடும்.
இதற்கு என்ன செய்யலாம்?
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதச்சத்தும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் உள்ளன. இவை, பெண்களின் புரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் உற்பத்தியை பெருக்கி, தாய்ப்பால் அதிகம் சுரக்க வழிவகை செய்கின்றன.
அதிக புரதச்சத்து கொண்ட உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் மற்றும் பால் வகை பொருட்கள், மீன் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பேரீச்சம்பழம், திராட்சை, கேழ்வரகு, அவல், கோதுமை, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
இவற்றுடன், தினமும் 5 முதல் 6 கப் வரையிலான பசும்பால் உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதில் சைவ உணவு வகைகள் தான் முதலிடம் பெறுகின்றன. அதனால், மேற்படி உணவு வகைகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிடலாம்.