வெள்ளி, 2 அக்டோபர், 2009

ஜோக்ஸ்.... ஜோக்ஸ்...






விலை ஏறினாலும் 


கொஞ்சம் சிரிக்கலாமே...





தங்கம் விலை 

13 ஆயிரத்தை தாண்டியது

- செய்தி






போலீஸ்காரர் 1 : நம்ம கபாலி, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்ன்னு கேட்டானாமே?

போலீஸ்காரர் 2 : இப்போ தங்கம் விக்கிற விலையில, தனது உயிருக்கு எந்த நேரமும் சேதாரம் வரலாம்ன்னு பயப்படுறானாம்!

******


அவர் : அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேன்னு தலையில் துண்டை போட்டவர் புலம்புராரே, ஏதுக்காம்?

இவர் : வரதட்சணையே வேண்டாம்ன்னு தன் மகனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சது தப்புன்னு இப்பத்தான் தெரியுதாம்.

******

போலீஸ்காரர் : என்னப்பா... இப்பெல்லாம் தொழிலுக்கு போகுறதே கிடையாதா? திருட்டு கேஸ் கொறைஞ்சுட்டே வருதே..?

திருடன் : முன்னாடி, நாலு வீட்டு பீரோவுல கைய வெச்சாத்தான் பொழப்பை நடத்த முடியும். இப்போ ஒரு வீட்ல நகையை அடிச்சாலை நிறைய காசு கிடைச்சிடுது. வேற ஏன் கஷ்டப்படனும்?

போலீஸ்காரர் : ?????!


******





அவள் : என்னடி... தங்கம்ன்னு இருந்த உன் பொண்ணோட பெயரை மாத்திட்டீயாமே?

இவள் : வெளியில போகும்போது, தங்கம்... தங்கம்ன்னு கூப்பிட்டா எங்கேயோ போகுற திருடன்கூட திரும்பிப் பார்க்குறான்டீ. அதான் மாத்திட்டேன்.


******


அவன் : அவர் நகைக்கடை வெச்சிருக்காருன்னு எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்ச?

ன் : ரொம்பவும் சந்தோஷமாக இருக்காறே, அத வெச்சுத்தான்!


******


அவர் : அந்த கல்யாண வீட்டுல, எங்கள் தங்கங்களே வருகன்னு பெருசா போர்டு வெச்சிருக்காங்களே, எதுக்காம்?

இவர் : இப்போதைக்கு இதுதான் காஸ்ட்லியான வரவேற்பாம்!


******




காஞ்சனா : என்னது... காதல் கத்தரிக்காய் எல்லாம் கூடாதுன்னு சொன்ன உங்க அப்பா லவ் பண்ணுன்னு சொல்றாரா?
திலகா : எந்த செலவுமே இல்லாம கல்யாணம் முடிஞ்சா நல்லதுதான்னு இப்போ நினைக்கிறாராம்.


******


அவள் : 54 கிலோ தங்கம் நீன்னு முன்பு அடிக்கடி கொஞ்சிய உன் புருஷன் இப்போ அப்படி சொல்ல மாட்டேங்குறாரா?

இவள் : அப்படிக் கொஞ்சப்போய் எந்த திருடனாவது என்னை அபேஸ் பண்ணிடப்போறான்னு பயப்படுறாராம்.



கமென்ட்...




இப்படி உள்ளாடையைக்கூட தங்கத்துல போட்டுட்டு வந்தா ஏன் தான் தங்கம் விலை ஏறாது...


தொகுப்பு : நெல்லை விவேக நந்தா.
Share: