வெள்ளி, 27 மே, 2011

காதலில் காமம் கலக்கலாமா?


திய வெயிலின் உக்கிரம் தணிந்து, மாலை வேளையின் ஆரம்பத்திற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து இருந்தது. எப்போதும் ஜே... ஜே... என்று காணப்படும் சென்னை மெரீனா பீச், வழக்கமான உற்சாகத்தால் பரபரத்துக் கொண்டிருந்தது. எப்போதும்போல் காதலர்களும் ஆங்காங்கே அமர்ந்து தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பூமியை முத்தமிட்டது மாலையை வரவேற்கும் வெயிலாக இருந்தாலும், அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விநோதமான குடை பிடித்திருந்தனர், மெரீனா பீச்சில் பூத்திருந்த காதலர்கள். ஆம்... பெரும்பாலான காதலிகளின் துப்பட்டாவே அவர்களுக்கு குடையாக மாறி நிழல் தந்தது.

காதலர்கள் இருவரும் தனிமையில் - மிக நெருக்கத்தில் இருந்ததால், அக்கம் - பக்கம் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் லவ்விக் கொண்டிருந்தனர்.

ஒருசில காதலர்கள் கடற்கரையோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கடலின் பால் நுரை அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.
அவர்களில் ஒருசிலர் ஆர்வ மிகுதியில் கடலுக்குள் இறங்கி குளிர்ந்த காற்றின் இதத்திற்கும், அலைகளின் இசைக்கும் ஏற்ப ஆட்டம் போட்டனர். அலை வேகமாக வந்து மோதும்போது காதலி காதலனை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அவனோ இதுதான் தக்க சமயம் என்று அவளை எசக்குபிசக்காக பிடித்து சிலிர்த்துக்கொண்டான். 


காதலனின் அந்த தீண்டல் காதலிக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அந்த தீண்டல் தந்த சுகத்தை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்தாள். இதற்காக, அலை வந்து மோதுவதற்கு முன்பே இவள் காதலன் மீது மோதி, அவனோடு அலையில் விழுந்து உருண்டு புரண்டாள்.


இதற்கிடையில், கடல் அலைகளோடு விளையாடி மூழ்காமல் காதல் முத்தெடுத்த ஜோடிகள் ஆங்காங்கே கிடைத்த நிழலில் ஒதுங்கி அமர்ந்து கொண்டனர். எவரது பார்வையும் தங்களை படமெடுக்காததால் விரலின் ஸ்பரிசங்களால் சிலிர்த்துக்கொண்டார்கள். காதலியின் அழகு பொங்கும் அங்கங்களில் அனுமதியின்றி இடம் பிடித்திருந்த கடல் மண்ணை, அவள் அனுமதியின்றியே அகற்றி, தனது இதயத்தின் லப்-டப் வேகத்தை ஏற்றிக்கொண்டான் காதலன். கூடவே, காதலியின் இதயத் துடிப்பும் தங்கத்தின் விலைபோல் சட்டென்று எகிறியது.


- இப்படியாக, மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க, முதன் முதலாக காதலை வெளிப்படுத்திய வேகத்தில் அங்கே காலடி எடுத்து வைத்தார்கள் ஆனந்தும், அமுதாவும்!


வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்ததால் கையோடு கொண்டு வந்திருந்த குடையை விரித்து பிடித்துக்கொண்டாள் அமுதா. அந்த சின்ன லேடீஸ் குடைக்குள் வெயிலுக்கு பயந்து அடைக்கலம் புகுந்து கொண்டான் ஆனந்த்.

அந்த சின்னக்குடை தந்த சிறிய நிழலில் கையோடு கை உரசிக்கொண்டு நடந்தார்கள் இருவரும். இதற்கு முன்பு இப்படி நெருங்கிய உரசலோடு இருவரும் சென்ற அனுபவம் கிடையாது என்பதால், அவர்கள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் மவுன போராட்டம் நடத்தின வார்த்தைகள்.


சிறிது தூரம்தான் நடந்திருப்பார்கள். காற்று வேகமாக வீசியதால் அமுதாவின் மென்மையான பிடியை விட்டு விலகி தனியாக பறந்தது குடை. அதை பிடிக்க இருவரும் ஓடினர். சிறிதுதூரம் ராக்கெட் வேகத்தில் பறந்த குடை, பயனற்று கிடந்த ஒரு படகின் மீது மோதிக்கொண்டு நின்றது. படகை தள்ளும் முயற்சியில் குடைக்கு தோல்வியே கிடைத்ததால், அமுதாவும், ஆனந்தும் அதை எளிதில் பிடித்துக்கொண்டனர்.


கை நழுவிப்போன குடையை எடுத்துவிட்டு அவர்கள் நிமிர்ந்தபோதுதான் படகுக்கு அடுத்த பக்கத்தில் அந்த காட்சியை கண்டார்கள். தனது மடியில் பூத்திருந்த காதலியை முதுகை வளைத்து தலையால் மூடி காதல் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான் காதலன்.


அதைப் பார்த்த மாத்திரத்தில் அமுதாவும், ஆனந்தும் பேச்சு வராமல் தவித்தனர். அந்த தவிப்புக்கு விடை கொடுக்க, அங்கே கிடந்த இன்னொரு படகின் சிறிய நிழலில் அமர்ந்து கொண்டனர். இருவரும் தோளோடு தோள் உரசி இருந்தனர்.


இருவரது மனதிலும், காதல் ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ஜோடியின் காட்சியே பலமாக பதிவாகி இருந்ததால், அவர்களது மனமும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது. அந்த குரங்கு மனதிற்கு அணைபோட வேகமாக ஓடி வந்து கரையை முத்தமிட்டுச் சென்ற கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டனர். 


ஆனாலும், அவர்களுக்குள் காதல் தீ பற்றி எரிந்தது. மெல்ல அமுதாவை திரும்பிப் பார்த்தான் ஆனந்த். துப்பட்டா இல்லாத அவளது டாப்சும், அமர்ந்ததால் இன்னும் இறுக்கமாகிப்போன அவளது டைட் ஜீன்ஸ் பேண்ட்டும் அவனை என்னமோ செய்தன. வெளியே வர போராடிக் கொண்டிருந்த அவளது பெரிய ‘மனசும்‘ அவனை உசுப்பேற்றிவிட்டது. அவள் மீது கணப்பொழுதில் மோகம் கொண்டவன், எதிர்பாராதவிதமாக அவளது உதட்டில் இச் மழை பொழிந்துவிட்டான்.

ஆனந்த் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்காத அமுதா சட்டென்று எழுந்துவிட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அடிக்க வருவதுபோல் கையை தூக்கினாள்.


“நீ இப்படி நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஐ லவ் யூ சொன்ன முதல் நாள்லயே நீ இப்படின்னா, நிச்சயம் நம் காதல் ஜெயிக்காது. இப்பவே, ஏன்... இந்த நிமிஷமே பிரிஞ்சுக்குவோம். இனி நீ யாரோ, நான் யாரோ...” என்று படபடவென்று வார்த்தைகளை வெடிக்க விட்டவள், அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன்னை அறியாமல் செய்த தவறுக்காக பரிதவித்து நின்றான் ஆனந்த்.


இப்போதைய பெரும்பாலான காதலர்கள் மோதிக்கொள்வது இந்த விஷயத்தில்தான். ‘என்னைப் பார்த்து அவன் காதலிக்கவில்லை... என் உடலைப் பார்த்துதான் காதலித்து இருக்கிறான்...’ என்று இந்த விஷயத்தில் காதலிகள் குற்றம்சாட்டினால், அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். காதல் என்பது அன்பும், காமமும் நிறைந்ததுதான்.


நெய் வேண்டும் என்றால் பாலை முதலில் நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு, அதை மோர் ஆக்க வேண்டும். அந்த மோரை கடைந்தால் வெண்ணெய் திரண்டு வரும். அந்த வெண்ணெயை உருக்கினால்தான் நாம் விரும்பும் நெய் கிடைக்கும்.


காமமும் அப்படியே! காதலி கிடைத்துவிட்டாள் என்பதற்காக அவள் மீது சட்டென்று மோகம் கொண்டுவிடக்கூடாது. பொறுமையாக காதலை வளர்த்து காதல் கைகூடி திருமணத்தில் முடிந்த பிறகுதான் அதை அரங்கேற்ற வேண்டும். அதுதான் உண்மைக் காதலுக்கு அழகு.


அதற்கு என்ன செய்யலாம்?


* காதல் மொழி பேசுவதில் முக்கிய இடம் கண்களுக்குத்தான். அந்த கண்களின் பார்வையில் திருமணம் கைகூடும் வரையில் ஆபாசம் வெளிப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதலி, அவளே விருப்பப்பட்டு சற்று கவர்ச்சியான ஆடை அணிந்து வந்தாலும்கூட, ‘வாட் எ பியூட்டி!‘ என்று பாராட்டி வியக்கலாமேத் தவிர, அந்த ஆடையில் ஆபாசத்தை கண்களால் தேடுவது நல்லது அல்ல.


* காதலியிடம் நேருக்கு நேராக நின்று பேசும்போது அவளது கண்களைப் பார்த்தே பேசப் பழகிக் கொள்ளுங்கள். அந்த ‘கண்ணோடு கண்ணான பார்வை‘ உங்கள் கண்ணியத்தை மேம்படுத்தும். 

காதலி அணிந்திருக்கும் உள்ளாடை கூட அப்பட்டமாக தெரிந்தால், அதை தவறு என்று சுட்டிக்காட்டாமல், ஆடை அணிந்து கொள்ளும் நேரத்தை அதிகரித்தால் இன்னும் அழகாக ஜொலிக்கலாமே... என்று அட்வைஸ் கொடுங்கள். அவள் உண்மையை புரிந்து கொள்வாள். உங்கள் மீதான நல்ல எண்ணமும் அவளிடம் அதிகரிக்கும்.

* ஒரு நிமிடம் பேசினாலும், மணிக்கணக்கில் ‘கடலை‘ போட்டாலும் காதலியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அப்போது, அவளை அழகாக வர்ணிக்கலாமேத் தவிர, ஆபாசமாக வர்ணிக்கக்கூடாது.

* காதலியுடன் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுக்குத் தெரியாமல் அவள் அழகை ரசிப்பது நாகரீகம் அல்ல. அதேநேரம், நீங்கள் ரசிப்பதை அவள் பார்த்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அளவோடு அந்த செயலை தொடரலாம். இதே செயல் உங்களுக்குள் தொடர்ந்தால், பின்னாளில் பிரச்சினை என்பது மட்டும் நிச்சயம். திருமணத்திற்கு பின்னர்கூட, ‘அன்றே நீ அப்படித்தானே...?‘ என்கிற ரீதியில் கூட பிரச்சினை ஏற்படலாம்.

* பார்க், பீச், ஹோட்டல்... என்று ஊர் சுற்றும் காதலர்கள் மனதில் திருமணத்திற்கு முன்னரே செக்ஸை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எழுந்துவிடக் கூடாது. இந்த எண்ணத்தை காதலன் காதலியிடம் மறைமுகமாக ஏற்படுத்தினால், அச்செயல் அவனை தவறானவனாகவே அடையாளம் காட்டும்.

* முக்கியமாக, காதலன்கள் மனதில் காமம் எழ சூழ்நிலைகள் மட்டுமின்றி காதலிகளும் மற்றொரு வகையில் காரணமாக அமைகின்றனர். அதற்கு, அவர்களது ஆடைதான் காரணம். அந்த ஆடையில் குடும்பப் பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எளிதில் எல்லை மீற மாட்டான்.
Share:

செவ்வாய், 17 மே, 2011

கண்டதும் காதல் நிஜமா?

ப்போதெல்லாம் நம் இளைஞர் - இளைஞிகளிடம் கண்டதும் பச்செக்கென்று காதல் ஒட்டிக்கொண்டு விடுகிறது. பீச்சிலோ, பஸ் ஸ்டாப்பிலோ ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டால் அவள் பின்னாடியே போய்விடும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன்... நம் தமிழ் காதல் சினிமாக்களும் இத்தகைய ஒரு படிப்பனையே பெரும்பாலும் ஏற்படுத்துகின்றன.


ஆராய்ச்சி
யாளர்களிடம், கண்டதும் காதல் கொள்வது என்பது உண்மையா? ன்று கேட்டால், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அப்படியென்றால், அழகான ஒரு இளம்பெண்ணை கண்ட மாத்திரத்தில் ஒருவித கிறக்கம் ஒரு இளைஞனிடம் ஏற்படுகிறதே... அதன்பெயர் காதல் இல்லையா? என்று விரிவாக கேட்டால், அதுபற்றி பெரிய விளக்கமே கொடுக்கிறார்கள்.


ஒரு இளம் ஆண் அழகான இளம்பெண்ணை பார்க்கும்போதோ அல்லது ஒரு அழகான இளம்பெண் அழகான வாலிபன் ஒருவனைக் காணும்போதோ அவர்களது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று உணர்கிறார்கள். பெக் அடிக்காமலேயே ஒருவித கிக் நிலைக்கு ஆளாகிறார்கள்.


நிச்சயமாக இதற்கு பெயர் காதலே இல்லை. காமம்தான். ஆம்... தன் மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறையாகப் பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி காம மட்டுமே என்கிறார் லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர் டான்மாய் சர்மா.


இவர், கண்டதும் காதல் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்துள்ளார். 18 முதல் 50 வயது வரையிலான 80 பேர் இவரது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் ஆண், பெண்களை அருகருகே நெருக்கமாக அமர வைத்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர்களிடம் பலவித உணர்ச்சிகள் கொந்தளித்தன.


தனக்கு முன்னால் லோ நெக்கில் அமர்ந்திருந்த இளம்பெண்களைப் பார்த்த ஆண்களுக்கு அந்த பீலிங்கின் வேகம் தாறுமாறாக இருந்தது. ஒருசிலர் எதிர் பாலினரை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அசையாமல் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் நெளிந்தனர்.

சிறிதுநேரத்திற்கு பிறகு எதிர்பாலினரை பார்க்கும்போது எத்தகைய உணர்ச்சிகளுக்கு ஆளானார்கள் என்பது பற்றிய விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.


அப்போது பெரும்பாலானவர்கள், தனது அருகே இருந்த எதிர்பாலினர் மீது காமம் கொண்டதாக தெரிவித்தனர். ஒருசிலர், அடுத்த நிமிடமே தனக்கு எதிராக இருந்த எதிர்பாலினருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மோகம் ஏற்பட்டதாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டனர்.


தொடர்ந்து, டாக்டர் டான்மாய் சர்மாவின் ஆய்வு வேறு மாதிரியாக இருந்தது.     மூலம் ஆய்வு செய்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.


ஆய்வின் முடிவு குறித்து அவர் கூறியதாவது :


 இந்த ஆராய்ச்சி மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும், பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் காம  உணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமான அளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இந்த உணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்று தெரிவித்தார்.

Share: