சனி, 10 டிசம்பர், 2011

விபரீத ஆசை


உன்
கொஞ்சலும்
கிச்சுகிச்சு மூட்டுகிறது

உன்
கெஞ்சலும்
சிலிர்க்க வைக்கிறது

எல்லாம்
சற்று தொலைவில்
நீ
பக்கத்து வீட்டு
குழந்தையை கொஞ்சும்போது...

எனக்கும்
ஓர் நப்பாசை;

அந்த சேயாய்
நான் மாற வேண்டும்
நீயும்
என் விருப்பப்படி
மாற வேண்டும்
காதலியாக அல்ல;
ஒரு தாயாக!

ஆம்...
நான்
இன்னொருமுறை
பிரசவமாக வேண்டும்
உன் சேயாக...

இது
நடக்காத பேராசை அல்ல;

காதலிக்கும்
இணையற்ற பாசமுண்டு என்று
என்
பெற்றோரிடம் நிரூபிக்க!

- கவிஞர் நெல்லை விவேகநந்தா
















Share:

செவ்வாய், 22 நவம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு நடிகர்-நடிகையர் பாராட்டு!


நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள 'பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்' வரலாற்று நாவல் இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. பாரம்பரியம் கொண்ட - கவிஞர் கண்ணதாசனுக்கு புகழ் பல பெற்றுத் தந்த வானதி பதிப்பகமே இந்நூலை வழக்கம்போல் அழகுற வெளியிடுகிறது.


இந்த நூலுக்கு நடிகர் கம் டைரக்டர் ரா.பார்த்திபன் வழங்கியுள்ள பாராட்டுரை...


அகப்படாததெல்லாம் அற்புதங்களே! அப்படியே அகப்பட்டா லும் அதை அதுவாய் பார்ப்பதில்லை நாம்! அதில் கொஞ்சம் மசாலா தூவி, உப்பிட்டு வேறொன்றுடன் ஒப்பிட்டே மகிழ்கிறோம்.


பெண்ணை பெண்ணாக மதிப்பதில் ஏதோ உள்குத்து நம் அனைவரிடமும் உள்ளது. ‘கிளி மாதிரி இருக்கா... கிளியோபாட்ரா மாதிரி இருக்கா’ன்னு உவமை/உதாரணம் சொல்வோம்.


எந்தக் கிளியையாவது ஒரு பொண்ணு மாதிரி அழகாயிருக்கு அதுன்னு ‘சைட்’ அடிச்சிருக்கோமா? அலகால இல்லாம, தன் அழகால நம்மை கொத்திகிட்டு போறப் பொண்ணை கிளின்னு விளிக்கலாம். சரி, அது யாரு கிளியோபாட்ரா?


கருப்பா? சிவப்பா? தொடும்வரை அழகா? உயிர் விடும்வரை அழகா? விட்டுப் பிரிந்து இத்துனை 365-களுக்குப் பிறகும் அழகுக்கு கிளியோபாட்ரா மட்டும் ஏன் உதாரணப் புருஷியாக விளங்குகிறாள்? என்ற என்னுடைய ஈர்ப்புடைய சந்தேகம் அனைத்திற்கும் ஏற்புடைய விளக்கமாகவும், விரும்பும்படியாகவும், எளிமையாகவும் இருக்கிறது நண்பர் நெல்லை விவேகநந்தா செதுக்கியுள்ள ‘கிளியோபாட்ரா’.


கல்லை செதுக்குபவரை சிற்பி என்போம்.    நெல்லை விவேகநந்தா ஒரு சிலையையே இன்னும் நேர்/சீர்/கூர் படுத்தி கலைநயத்தோடு செதுக்கியிருக்கிறார்.

வாழ்த்துக்கள்

+ ப்ரியமுடன்

ரா.பார்த்திபன்

இதேபோல், இதே நூலுக்கு நடிகை பூர்ணா தந்துள்ள வாழ்த்துரை...


வணக்கம். கிளியோபாட்ராவின் வரலாறு கூறும் இந்த நூலைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


உலகின் நிரந்தர அழகியான கிளியோபாட்ராவைப் பற்றிய இந்தப் புத்தகம் பல்வேறு விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்றுவரை கிளியோபாட்ராதான் பேரழகி என்று வர்ணிக்கப்படுகிறாள். அவள் எவ்வளவு திறமையானவளாக, அறிவு நிறைந்தவளாக இருந்தாள் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து தெரிய வருகிறது.


அழகு மட்டுமல்ல, அவளது மற்ற திறமைகளும் சேர்ந்துதான் உலகம் அவளைப் போற்ற காரணமாக இருந்தது என்று தெரிகிறது. மேலும், பண்டைய ரோமானிய, எகிப்திய அரசுகள் பற்றியும், ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி ஆகியோர் பற்றியும் மிகவும் விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது.


புத்தகத்தின் ஆசிரியர் திரு.நெல்லை விவேகநந்தா அவர்கள், இதற்காக பெரும் முயற்சி எடுத்து, ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு என் பாராட்டுக்கள்!


தமிழின் சிறந்த நூல்களுள் ஒன்றாக சாதனை படைக்க எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!


நடிகை பூர்ணா
Share:

ஞாயிறு, 13 நவம்பர், 2011

புத்தக வடிவில் கிளியோபாட்ரா வரலாற்று நாவல்!



பேரழகி கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவளைப் பற்றிக் கேட்டால், அவள் மிகவும் பேரழகி, கழுதைப்பாலில் குளித்து, தனது அழகை தக்க வைத்து வந்தாள் என்று சொல்வார்கள். இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள், அவள் எகிப்தை ஆண்ட பேரரசி. ரோமானிய மாவீரர்களான ஜூலியஸ் சீஸர், ஆண்டனி ஆகியோர் அவள் மடியில் மயங்கிக் கிடந்தார்கள் என்பார்கள்.


கிளியோபாட்ராவின் வரலாறு பெருங்கடல் என்றால், அதில் இந்த தகவல்கள் மிக மிக சொற்பமே. அவள் யாருக்கு பிறந்தாள், எப்படி ஆட்சிக்கு வந்தாள், ஏன் தம்பிகளை திருமணம் செய்து கொண்டாள், சீஸர் உடனான அவளது காதல் எப்படி போனது, சீஸருக்குப் பிறகு ஏன் ஆண்டனியை காதலித்தாள், ஆண்டனியை காதலிக்கப் போய் ரோமானிய சரித்திரம் எப்படி மாறியது, தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அளவுக்கு அவளுக்கு என்ன நேர்ந்தது... இப்படி யாரும் அறியாத வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டது கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு.


அவளது அந்த வரலாறு ஏ டூ இசட் வரையில் இப்போது புத்தக வடிவில் வந்து விட்டது. நெல்லை விவேகநந்தா எழுதிய "பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்" என்ற வரலாற்று நாவலில் நீங்கள் கிளியோபாட்ரா பற்றி தெரியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. நாவல் வடிவில், மிக மிக எளிய நடையில் உலகத் தரத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர்-டைரக்டர் ரா.பார்த்திபன், சின்ன அசின் என்று சினிமா உலகில் அழைக்கப்படும் நடிகை பூர்ணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.


இன்னும் சில தினங்களில் புத்தகம் வெளியாக இருக்கிறது. புத்தகத்தை, வழக்கம்போல் பதிப்புலகில் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள்.


324 பக்கங்களில் வெளியாகும் இந்த நூலுக்கு உங்களது ஆதரவு வழக்கம் போல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இந்த புத்தகம் எங்கெல்லாம் கிடைக்கும், என்ன விலை என்பன போன்ற விவரங்களுடன் விரைவில் சந்திக்கிறேன். நாளை... எனது நூலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர் - டைரக்டர் ரா.பார்த்திபன், நடிகை பூர்ணா எழுதிய வாழ்த்துரைகளை பார்க்கலாம்.


புத்தகம் பற்றிய ஆர்டர் மற்றும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க...

வானதி பதிப்பகம்

23, தீனதயாளு தெரு,

தி.நகர், சென்னை-17

போன் : 044 - 24342810, 24310769





நட்புடன்

நெல்லை விவேகநந்தா
Share:

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சாந்திமுகூர்த்த சாபம்


வர் ஒரு சிறந்த ஜோதிடர். ஆனால் குழந்தை இல்லை. பலவித விரதங்கள் மேற்கொண்டதன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்த தந்தையான ஜோதிடர் அதிர்ந்து போனார். சாந்திமுகூர்த்தம் அன்று அவளது கணவர் இறந்து போவான் என்று உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். இருந்தாலும், பாக்கியவதி என்று தனது மகளுக்கு பெயர் சூட்டினார்.


ஆண்டுகள் நகர்ந்தன. அந்த குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்தது. மகளை மணக்க விரும்புகிறவர்களிடம், சாந்திமுகூர்த்தம் அன்று மணமகன் இறந்து போவான் என்று உண்மையைச் சொல்வார் ஜோதிடர். வந்தவர்கள் வந்த வழியே சென்றுவிடுவார்கள். இப்படியே பலர் வந்து போனார்கள். பாக்கியவதிக்கு திருமணம் ஆகாமல் பல காலம் கழிந்தது.


ஒருநாள், அறிவில் சிறந்த, துணிச்சல் மிகுந்த இளைஞன் ஒருவன் ஜோதிடரை அணுகி, அவரது மகளை மணக்க விரும்புவதாக கூறினான். ஜோதிடரும் வழக்கம்போல், "நீ சாந்திமுகூர்த்தம் அன்று இறந்து போவாய்" என்றார். உடனே, அந்த இளைஞன், "நானும் சாஸ்திரங்களை கற்றறிந்தவன் தான். மரணத்திற்கு அஞ்சுபவன் கோழை. நான் வீரன்" என்று சூளுரைத்தான்.


ஒரு நல்ல நாளில் பாக்கியவதி, அந்த இளைஞன் திருமணம் நடந்தது. அன்று இரவு சாந்திமுகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்தார் ஜோதிடர். நாளை மருமகன் உயிரோடு இருக்க மாட்டான் என்று உறுதி செய்து கொண்டு, அவனது இறுதிச்சடங்குக்கும் கூடவே ஏற்பாடு செய்தார். பாக்கியவதி முதல் நாள் இரவில் தனிமையில் கணவனை சந்தித்தாள். தான் கற்றறிந்த வேதங்கள் பற்றி அவளுக்கு கூறினான்.


அப்போது, அவனுக்கு திடீரென்று வயிற்றுவலி உண்டானது. அன்றைய தினம் உணவு அதிகமாக சாப்பிட்டதால் அந்த நிலை ஏற்பட்டது. அருகில் உள்ள தோப்புக்கு சென்றான். வயிற்று உபாதை நீங்கியதும் பக்கத்தில் தண்ணீர் தேங்கி நின்ற சிறிய குட்டையில் கால் அலம்பச் சென்றான். அப்போது அவனது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது.


"மரணம் வரும் என்று எனக்கு முன்பே தெரியும். மரணத்தை கண்டு நான் அஞ்ச மாட்டேன். என்னை கொஞ்சம் விடு. எனது அன்பு மனைவியிடம் தகவல் கூறிவிட்டு மீண்டும் வருகிறேன்" என்றான். "நீ என்ன அரிச்சந்திரனா? உன்னை விட்டால் வரமாட்டாய். எனக்கு பசிக்கிறது. அதனால் நீ எனக்கு வேண்டும்" என்றது அந்த முதலை.


உடனே, அவன், "முதலையே! நான் சத்தியத்தை மதிப்பவன். என்னை நம்பு. உறுதியாக வருகிறேன்" என்றான்.


அதற்கு முதலை, "மனைவியிடம் தகவல் கூறிவிட்டு வராமல் போவேன் என்றால், சாப்பிடுகின்றபோது விளக்கு அணைந்த பின் எவன் உண்பானோ அவன் போகின்ற நரகம் போவேன் என்று சத்தியம் செய், விடுகிறேன்" என்றது. அதன்படி அவன் சத்தியம் செய்ய, முதலை அவனை விட்டது.


சாந்திமுகூர்த்தத்திற்காக காத்துக்கொண்டிருந்த மனைவியிடம் நடந்ததை கூறி, அவளை தழுவி விடைபெற்று முதலை இருக்கும் இடத்தை நோக்கி மீண்டும் வந்தான். பாக்கியவதி பெரிதும் வருந்தினாள். இறைவன் அருளாள் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கணவனுக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்தாள்.


அந்தநேரம் முதலை அருகில் வந்த அவளது கணவன், "முதலையே! நான் வந்து விட்டேன். என்னை உணவாக ஏற்றுக்கொள்" என்றான். முதலை ஆவலுடன் அவனது காலை பற்றிக்கொண்டது. அந்தநேரம், அவனை பின்தொடர்ந்து வந்த பாக்கியவதி, எரிகின்ற ஒரு விளக்கை காண்பித்து அணைத்துவிட்டாள். இதை கண்ட முதலை அவளது கணவனது தனது பிடியில் இருந்து விட்டுவிட்டது.


"உன்னை நான் உண்ணும் நேரத்தில் விளக்கு அணைந்து விட்டது. அதனால் உண்ண மாட்டேன். நீ போகலாம்" என்றபடி விலகிக்கொண்டது முதலை. திரும்பி பார்த்தான் அவன். அருகே மகாலட்சுமியைபோல் நிற்கும் மனைவி பாக்கியவதியை கண்டான். அவளது மதிநுட்பத்தை எண்ணி வியந்தான்.


ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பார்கள். இங்கே ஒரு கணவனின் அல்லல் அழிந்ததும் ஒரு பெண்ணாலே தான். இதை எல்லோரும் உணருங்கள்.


- இந்தக் கதையை சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார்.


Share:

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கெட்டிமேளம் கொட்ட வைக்கும் நித்ய கல்யாண பெருமாள்





ந்த கோவிலுக்குள் நுழைந்தபோது, இன்று முகூர்த்த நாளா என்று சந்தேகம் வந்துவிட்டது. காரணம், மாலையும், கழுத்துமாக ஏராளமான புதுமண ஜோடியினர் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தது தான். ஆனால், அன்று முகூர்த்த நாள் இல்லை.


வேறு ஏன் இவர்கள் இப்படி வலம் வருகிறார்கள்? என்று யோசித்தபடியே பார்வை இன்னொரு பக்கம் திருப்பியபோது, அங்கே தனியாக ஆண்களும், பெண்களும் கழுத்தில் மாலையுடன் பயபக்தியாக கூப்பிய கரங்களுடன் வலம் வந்து கொண்டிருந்தனர்.


ஏன் இப்படி மாலையும், கழுத்துமாக கோவிலை வலம் வருகிறார்கள் என்று அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டோம்.


"இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்வார்கள். அவர்கள் தான் இங்கே ஜோடிகளாக வலம் வருவது. தனியாக வருபவர்கள், திருமணம் உடனே நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள்" என்று விளக்கம் கொடுத்தார் அவர்.


இத்தகைய சிறப்புமிக்க கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் திருவிடந்தை என்ற இடத்தில் அமைந்துள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலாகும்.



வேண்டுதல் : திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த கோவிலுக்கு தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் வர வேண்டும். ஒரு பூ மாலையை வாங்கிக்கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும். சுவாமிக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் அந்த மாலையை கொடுப்பார்கள். அதை கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டும். வலம் வந்து முடித்ததும், கோவில் கொடிக்கம்பம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.


பிறகு, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு பூஜை அறையில் அந்த மாலையை வைத்துவிட வேண்டும். திருமணம் முடிந்ததும், தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும் (இதற்கென்று கோவில் பின்புறம் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் மாலையை கட்டி வைத்து விடுகிறார்கள்).


இந்த எளிய பரிகாரத்தை செய்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் ஏராளம்.


தல வரலாறு : முன்னொரு காலத்தில், 360 மகள்களுடன் வாழ்ந்து வந்த காலவ ரிஷியின் வேண்டுதலை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து, தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு, கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடப்பாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்தார் பெருமாள். அதனாலேயே இங்குள்ள பெருமாள் 'நித்ய கல்யாண பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார் என்கிறது இக்கோவில் தலபுராணம்.


அதனாலேயே திருமணத்தடை போக்கும் தலமாக இந்த கோவில் திகழ்கிறது. தினமும் மாலையும், கழுத்துமாக தம்பதியர் வலம் வருவதையும் காண முடிகிறது.


இங்குள்ள வராக தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்றும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதம் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் அகலும் என்றும் கூறுகிறார்கள். தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாளின் திருவடியை தாங்கும் திருக்கோலத்தில் இங்கு காட்சித் தருவதால் இத்தலத்தில் வழிபடுவோருக்கு ராகு, கேது தோஷங்களும் நீங்குகின்றன.


உற்சவர் நித்ய கல்யாண பெருமாளுக்கும், கோமளவல்லி தாயாருக்கும் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்துள்ளதால், இவர்களை மனம் உருகி வேண்டும்போது திருஷ்டிகளும் நீங்குகின்றன.


நடை திறப்பு :  காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.


திருவிழா :  ஆனி கருட சேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்ச கருடசேவை, நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை தீபம், தனுர் மாத பூஜை, மாசி மகம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.


அமைவிடம் : சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சென்னை, மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

உங்கள் இல்லத்திலும் கெட்டிமேளம் கொட்ட வேண்டுமா? வாழ்க்கையில் வசந்தக்காற்று வீச வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் தரிசிக்க வேண்டியது, நித்தமும் கல்யாணம் புரிந்த இந்த நித்ய கல்யாண பெருமாளைத் தான்!

Share:

சனி, 15 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 3


3. காதல் தந்த சோகம்

இதுவரை....

திருவள்ளூரைக் கடந்து அரக்கோணம் நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது சென்னை - கோவை எக்ஸ்பிரஸ். சேலையில் ஊட்டி ரோஜாவாய் மலர்ந்திருந்த ஷ்ரவ்யாவை வாயாரப் புகழ்ந்து கொண்டே வந்தான் ஆனந்த்.


"ஷ்ரவ்யா... இந்த ரோஸ் கலர் சாரியில் நீங்க ரொம்பவும் அழகா இருக்கீங்க."


"உண்மையாத்தான் சொல்றீங்களா? இல்ல... ஏதாவது பேசணுமேங்றதுக்காக இப்படிச் சொல்றீங்களா?"


"அப்படியெல்லாம் இல்லீங்க. என் மனசுல பட்டதத்தான் பேசுறேன்."


"மனசுல இருந்து பேசுறேன்னு சொல்றீங்க. அப்போ நான் உலக அழகியாகத்தான் இருக்க முடியும்."


"என்னங்க... நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னதுக்கு ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறீங்க... இதுதான் சந்து கேப்புல சிந்து பாடுறதுன்னு சொல்றதோ..."


"நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க. என்னைப் பொறுத்தவரை நான்தான் உலக அழகி. ஐஸ்வர்யாராய் எல்லாம் அதுக்கு அப்புறம்தான்."


"ஆமாம்... நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டீங்களே..."


"இல்லை... தாராளமா சொல்லுங்க."


"அழகு விஷயத்துல எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தானா?"


"ஏன்... இப்போ எல்லாப் பொம்பளைங்களையும் வம்புக்கு இழுக்குறீங்க?"


"வம்புக்கெல்லாம் இழுக்கல. நான் பார்த்து பழகின பொண்ணுங்கள்ல பெரும்பாலும் எல்லோருமே தான் மட்டும்தான் உலக அழகின்னு நினைச்சுக்கிட்டாங்க. இப்போ நீங்களும் அந்த லிஸ்ட்டுல வந்துட்டீங்க."


"இந்த அழகு விஷயத்தை இதோட நீங்க நிறுத்தலன்னா நானே உங்கள அடிப்பேன்..." என்று செல்லமாய் கோபத்தை வெளிப்படுத்திய ஷ்ரவ்யா, தனது அழகிய தோளால் ஆனந்தை அவன் பொறுக்கும் வேகத்தில் இடித்தாள்.


அவள் இடித்த வேகத்தில், பின் குத்தாத அவளது சேலை பட்டென்று விலகியது. இதை எதிர்பார்க்காத ஆனந்த், என்ன நினைத்தானோ சட்டென்று தன் கையால் விலகிய சேலையை இழுத்துப் போர்த்தி விட்டான். அவனை வியப்பாகப் பார்த்தாள் ஷ்ரவ்யா.


"நான் சந்திச்ச ஆண்கள்ல நீங்க மட்டும் வித்தியாசமாகத் தெரியுறீங்க ஆனந்த். எல்லா ஆண்களும் என் உடம்பைப் பார்க்கத்தான் வருவாங்க. ஆனா... நீங்கதான் எனக்கும் மத்த பொண்ணுங்களப் போல மானம்னு ஒண்ணு இருக்குன்னு இப்போ நிரூபிச்சி இருக்கீங்க..."


இதற்கு மேல் ஷ்ரவ்யாவால் பேச முடியவில்லை. இமைகளின் ஓரங்களில் நீர் கோர்க்கத் துவங்கியிருந்தது.


"அய்யோ... என்னாச்சு ஸ்ரவ்யா? இதுக்கெல்லாம் போய் ஏன் ஃபீல் பண்ணுறீங்க? நீங்க ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. பெரியப் பொண்ணு. முதல்ல அழுகையை நிறுத்துங்க."


ஆனந்த் சொன்ன பிறகுதான் அழுகையை நிறுத்தினாள்.


பக்கத்தில் இத்தனையும் நடந்து கொண்டிருக்க... எதிரே இருந்த மாடர்ன் கேர்ள் ஸ்வேதாவோ, யாரோ ஒரு ஆணிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்தாள். ரெயில், வில்லிவாக்கத்தை தாண்டிய பிறகுதான் அவள் ஹெட் போனை இரு காதுகளுக்குள்ளும் கொடுத்துப் பேச ஆரம்பித்து இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் கூட அவளது மொபைல் மட்டும் ஓய்வெடுக்கவில்லை. நிச்சயமாக அவள், தனது காதலனுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது ஆனந்த், ஷ்ரவ்யா இருவருக்கும் புரிந்தது.


சீட்டில் தலை சாய்த்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த ஸ்வேதாவுக்கு முதுகு வலித்ததோ என்னவோ திடீரென்று குனிந்தபடி மொபைல் பேச்சைத் தொடர்ந்தாள்.


அவள் அணிந்திருந்தது லோ நெக் டாப்ஸ் என்பதால், அவளது மார்பக அழகு பளீரென எலுமிச்சம் பழக் கலரில் பளிச்சிட்டது. அதை எதார்த்தமாக கவனித்து விட்டான் ஆனந்த். அடுத்த நொடியே இடது பக்கம் திரும்பிக் கொண்டான். ஷ்ரவ்யா அவனுக்கு மிக அருகில் இருந்தாள். அவளும், ஸ்வேதாவின் கவர்ச்சி தரிசனத்தைப் பார்த்த பிறகுதான், 'ஓ... இதற்கு வெட்கப்பட்டுதான் ஸார் இங்கே திரும்பி இருக்காரோ...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு கொஞ்சம் அமைதியாய் சிரித்தும் வைத்தாள்.


"ஆனந்த்... நீங்க அந்தப் பொண்ணைப் பாத்தீங்களா?"


"எந்தப் பொண்ணை?"


"எதிரே கவர்ச்சிக்கன்னியாக இருக்கிறாளே... அவளைத்தான்!"


"அவளைப் பார்த்த பிறகுதான் சமீபத்தில் படித்த ஒரு தகவல் என் நினைவுக்கு வந்தது."


"என்ன தகவல்?"


ஷ்ரவ்யாவின் கேள்வியில் அவ்வளவு ஆர்வம் தெரிந்தது. நிச்சயம் அந்த தகவல் கிளுகிளுப்பான ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, அதைக் கேட்க ஆவலாகத் தனது முகத்தை அவனுக்கு நேர் எதிராக வைத்துக் கொண்டாள்.


"ஷ்ரவ்யா... நான் சொல்லப் போகும் சம்பவத்தின்படி நீங்கள் ஒருவரை காதலிப்பதாக வைத்துக் கொள்வோம்."


"சரி..."


"அப்படி நீங்க ஒருவரை காதலிக்கும் போது அவருக்கு எத்தனை தடவை மொபைலில் பேசுவீங்க?"


"என்ன ஆனந்த், இதெல்லாம் ஒரு கேள்வியா? நீங்க வேறு எதையோ சொல்வீங்கன்னு ஆர்வமா நெனைச்சா..." அதற்கு மேல் ஷ்ரவ்யாவை அவன் பேச விடவில்லை.


"நீங்க எதிர்பார்க்குற விஷயம் இந்தக் கேள்வியிலேயும் இருக்கு. நான் கேக்குற கேள்விக்கு நீங்க சரியா பதில் சொல்லிட்டு வந்தா, நானும் சரியாச் சொல்லுவேன்."


"அப்படின்னா, பதில் சொல்றேன். என்ன... அதிகபட்சமாக ஒரு 20 அல்லது 30 தடவை பேசுவேன்" என்றாள் ஷ்ரவ்யா.


"அவ்வளவுதானா?" தான் எதிர்பார்த்த பதில் கிடைக்காதது போல் கேட்டான் ஆனந்த்.


"ஒருவேளை அந்தக் காதலன் நீங்களா இருந்தா 100 தடவை பேசியிருப்பேன்."


"எங்கேயோ சுத்தி, கடைசியில எங்கிட்டேயே வந்துட்டீங்களா? பரவாயில்ல... இப்போ நான் சொல்ற விஷயம் கொஞ்சம் ஷாக் தரக்கூடியதுதான். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய காதலனுக்கு தினமும் 178 தடவை மொபைலில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறாள். இந்த கணக்குப்படி பார்த்தா, போன வருடம் மட்டும் 65 ஆயிரம் தடவை அந்த பெண் மட்டுமே பேசி இருக்கிறாள்."


"ஏன்... அவங்க காதல் அவ்வளவு ஸ்ட்ராங்கா?"


"ஆரம்பத்துல ஸ்ட்ராங்க் மாதிரி தெரிஞ்சாலும், இப்படி ஓவரா அந்தப் பெண் பேசினதுனால அந்தக் காதலன் போலீஸ் வரைக்கும் போய்விட்டான்."


"அப்புறம்..."


"அப்பும் என்ன... வழக்கம்போல் கைதுதான்!"


"கைதா? யாரைக் கைது பண்ணினாங்க?"


"அந்தப் பெண்ணைதான்!"


"போன் பண்ணினது தப்பா-?"


"போன் பண்ணுறது தப்பு கிடையாது. அடுத்தவங்களை அளவுக்கு மீறி இம்சை பண்ணுறதுதான் தப்பு. இதை நான் சொல்லல. இங்கிலாந்து போலீஸ் சொல்லியிருக்கு."


"அது இருக்கட்டும் ஆனந்த். இப்போது எதுக்காக இந்த புள்ளிவிவரம்?"


"எதிரே பேசிட்டு இருக்குற பொண்ணைப் பார்த்ததும் அந்த புள்ளிவிவரம் ஞாபகத்துக்கு வந்துச்சு. உங்களுக்கும் இந்தத் தகவல் யூஸ்புல்லா இருக்கும்னு நெனைச்சேன், சொல்லிட்டேன்."


ஸ்ரவ்யா தனது ஞாபக சக்தியைப் பாராட்டுவாள் என்று எண்ணினான் ஆனந்த். ஆனால், அவளிடம் இருந்து எந்த பாராட்டும் வரவில்லை. அதனால் மறுபடியும் அவனே அவளது வாயை கிளறினான்.


"ஸ்ரவ்யா... உங்களுக்கு இன்னொன்னு தெரியுமா?"


"நீங்க சொன்னதான் தெரியும்..."


"ஆமால்ல.. நான் புள்ளிவிவரத்துல காதலனுக்கு மொபைல்ல மணிக்கணக்குல பேசி இம்சை பண்ணின காதலிக்கு எவ்ளோ வயசு இருக்கும்னு நெனைக்குறீங்க?"


"ஒரு பதினெட்டுல இருந்து இருபத்தைந்து வரைக்கும்..."


"அதுதான் இல்ல; அந்த பொண்ணோட வயது 42."


"அப்படின்னா, காதலன் வயது...?"


"62 வயதாம்!"


"இந்த வயசுலேயுமா லவ் பண்ணுவாங்க. உண்மையைச் சொல்லணும்னா கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவராத்தான் தெரியுது..." என்று கொஞ்சம் சலித்துக் கொண்டாள் ஸ்ரவ்யா.


"அப்படியெல்லாம் இல்ல ஸ்ரவ்யா... உண்மையான காதலுக்கு கெடைக்கிற சக்தி வேற எதுக்குமே இல்ல. உண்மையா காதலிச்சவங்க சூழ்நிலை காரணமாக பிரிஞ்சிட்டாலும் கூட அந்தக் காதல நெனைச்சு ஏங்கிக்கிட்டே இருப்பாங்க. தண்ணீர் மேல் எழுதுன எழுத்து இல்ல உண்மை காதல்."


ஆனந்தின் பேச்சு, அவனுக்குள் புதைந்து கிடந்த காதலை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஷ்ரவ்யாவுக்கு அவனது காதலைத் தெரிந்து கொள்ள ஆசை. அதைச் சட்டென்று கேட்டும் விட்டாள்.


"ஆனந்த்... உங்ளோட பேச்சைப் பார்த்தா நிச்சயமாக் காதலிச்சு இருக்கீங்க, அதுவும் உண்மையா! யாரு அந்தக் காதலி? இப்போ அவங்க எங்க இருக்காங்க? நீங்க அவங்கள எப்போ மேரேஜ் பண்ணப் போறீங்க?" கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.


ஆனந்திடம் மவுனம்தான் நிலவியது. அதுவரை காதல் பற்றிய புள்ளி விவரங்களைக் கூட அடுக்கிய அவனால், இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியவில்லை. அவனது முகத்திலும் லேசான சோக ரேகை தெரிந்தது. திடீரென்று நெஞ்சு பாரமானதால் எச்சிலை அவசரமாக விழுங்கி, அதை ஆசுவாசப்படுத்த முயன்றான்.


தனது கேள்வி ஆனந்திடம் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஷ்ரவ்யா சிறிதும் எதிர்பார்க்கவில்லை.


"தப்பா நெனைச்சுக்காதீங்க ஆனந்த். நான் கேட்டது தப்புன்னா என்ன மன்னிச்சிக்கோங்க."


ஷ்ரவ்யாவின் இந்த மன்னிப்புக் கோரிக்கை ஆனந்தை மறுபடியும் பேச வைத்தது.


"எல்லோரையும் போல நானும் காதலிச்சேன், உயிருக்கு உயிரா! ஆனா இன்னிக்கு அந்தக் காதல் உயிரோட இல்ல..."


இதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. வேகமாக வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றான். எதிரே இருப்பவர்கள் அதைக் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக கர்ச்சிப்பால் அவசரமாக முகத்தை மூடிக்கொண்டு கண்ணீரை வடிகட்டினான்.


ஆனந்தின் மனதைக் கஷ்டப்படுத்தி விட்டோமே... என்று ஷ்ரவ்யா வருந்த... இருக்கையில் இருந்து வேகமாக எழுந்த அவன் வாஷ் பேஷின் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தான். ரெயிலோடு சேர்ந்து அசைந்து கொண்டிருந்த கண்ணாடியில் கஷ்டப்பட்டு முகம் பார்த்து, அதில் வருத்தம் தெரிகிறதா என்று ஒருமுறைக்கு பலமுறை பார்த்து சோதித்துக் கொண்டான்.


அப்போதுதான் கண்ணாடியின் ஓரம் அந்தக் காட்சி அவனது பார்வையில் தெரிந்தது. ஒரு இளம் ஜோடி தங்களது இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடந்த புத்தம் புதிய மஞ்சள் கயிறு அதை அப்பட்டமாகக் காட்டியது. அந்த ஜோடிகள் மட்டுமே சிரித்துப் பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களுடன் வேறு யாரும் வரவில்லை. அவர்கள் ஹனிமூனுக்காக கோவை சென்று ஊட்டி செல்லலாம் என்று யூகித்துக் கொண்டான்.


திரும்பவும் கண்ணாடியில் முகத்தை பார்த்துவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினான். திரும்பும் வழியில் புதிதாய் திருமணம் ஆகியிருந்த ஜோடியைப் பார்த்தான். கணவன் பதவிக்கு வந்திருந்த இளைஞன் தனது புதுமனைவியை இருக்கமாக தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு சிரித்து சிரித்துப் பேசினான்.


அந்த இளம் ஜோடிகள் ஆனந்தின் கண்களுக்குள் ஆழமாக ஊடுருவி பதிந்து போனார்கள்.


'நானும் மனைவியோடு ஊட்டிக்கு இப்போது ஹனிமூன் சென்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் விதி... ஒரு கால் கேர்ளை அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்' என்று, மனதிற்குள் தன்னைத்தானே நொந்து கொண்டான்.


சிறிது நேரத்திற்குப் பிறகு இருக்கையில் வந்து அமர்ந்தவனை ஆதரவாகப் பார்த்தாள் ஷ்ரவ்யா.


"ஆனந்த்... நான் உங்ககிட்ட அப்படியொரு கேள்வி கேட்டது தப்பா? என்னன்னு தெரியல. உங்களைப் பார்த்தது முதலே நானும் கொஞ்சம் மாறிப் போய் விட்டேன். எத்தனையோ பேருக்கு பணத்துக்காக முந்தானை விரிச்சவதான் நான். இப்பவும் அந்த வகையிலதான் நான் உங்களோட வர்றேன். ஆனாலும், நான் தப்பான தொழிலுக்காக உங்களோட வர்றேனுங்குற ஃபீலிங் எங்கிட்ட சுத்தமா இல்ல. அதனாலதான் உங்க கிட்ட இவ்ளோ உரிமை எடுத்துப் பேசிட்டு வர்றேன். என்னோட பெர்ஷனல் விஷயங்கள் பற்றி கேட்காதன்னு நீங்க சொன்னா அதுபற்றி பேசவே மாட்டேன்..." என்று தன்னிலை விளக்கம் கொடுத்த ஷ்ரவ்யாவை வியப்பாகப் பார்த்தான் ஆனந்த்.


ஷ்ரவ்யாவிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அப்போது, திடீரென்று அவனது மொபைல் சினுங்கியது.


'புரோக்கர்' என்கிற ஆங்கில வார்த்தை மொபைலின் திரையில் பளிச்சிட்டது.


பச்சைப் பட்டனை ஆன் செய்து வலது காதில் வைத்தான்.


"ஸார்... நான்தான் பிரகாஷ். அந்தப் பொண்ணு உங்க கூடதானே இருக்கு?"


"ஆமா..."


"நீங்க ரெயில்ல ஏறுன உடனேயே பேசனும்னு நினைச்சேன். அதுக்குள்ள இன்னொரு கஸ்டமர் வந்துட்டார். அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு."


"பரவாயில்ல..."


"அப்போ நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க. நாங்க எப்படி உங்களுக்கு சேப்ட்டியோட பொண்ணை அனுப்பி வெச்சோமோ, அதே சேப்ட்டியோட எங்ககிட்ட திரும்பவும் ஒப்படைச்சிடுங்க. இன்னிக்கு மே 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. மே 8 ம் தேதி அவ எங்ககிட்ட இருக்கணும்..." என்று அக்ரிமென்ட் கன்டிஷனைச் சொன்ன பிரகாஷ், "சரி ஸார்... கொஞ்சம் சாந்தி கிட்ட மொபைலை கொடுங்க" என்றான்.


ஆனந்துக்கு ஒன்றும் புரியவில்லை.


"என்னது... சாந்தியா?" என்றான்.


அவன் சாந்தி என்று சொன்னதும் அருகில் இருந்த ஷ்ரவ்யா உஷார் ஆனாள்.


படைப்பு : நெல்லை விவேகநந்தா 



(தேனிலவு தொடரும்...)





Share:

வெள்ளி, 7 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 2


2. ஒரு மவுனத்தின் அழுகை

- நெல்லை விவேகநந்தா -


வுனமாக இருந்தாள் அமுதா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், அந்த கல்யாணக்களை மட்டும் ஏனோ மிஸ்ஸிங்.


"அம்மாடி... இப்படியே இங்கேயே பொறந்த வீட்டோட இருந்தரலாம்னு முடிவே பண்ணிட்டீயா?"


அமுதாவின் ஒரு வார மவுன விரதத்தைத் தானே முடித்து விடுவது போல் பேசினாள் அவளது அம்மா பாக்கியம்.


அமுதாவிடம் இருந்து மவுனமே பதிலாக வந்தது.


"ஆயிரத்தெட்டு பிரச்சனைங்க, மனஸ்தாபங்க இருந்தாலும் அதையெல்லாம் சமாளிச்சுதான் வாழணும். ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட பிறகு இப்படி குத்துக் கல்லாட்டம் பொறந்த வீட்டுல கெடக்குறது எந்தப் பொண்ணுக்கும் அழகே இல்ல. இத முதல்ல புரிஞ்சுக்க. எந்தவொரு தாய்க்கும் தன் பொண்ணு, புகுந்த வீட் டுல நல்லா வாழணும்னுதான் ஆசப்படுவா. ஆனா, உம் போக்கப் பாத்தா நீ அசைஞ்சு கொடுக்குற மாதிரியே தெரியலீயே... கூடப் பொறந்த அண்ணன் கல்யாணத்தை பார்த்தவதானே நீ? அவன் வெளிநாட்டுல சம்பாதிக்குறான். அவனோட பொண்டாட்டி, அதான் எம் மூத்த மருமக... இங்கே குடித்தனம் இருக்குற துப்பு இல்லாம பொறந்த வீட்டுல கிடக்குறா. என் வயித்துல பொறந்த உனக்குமா அவ புத்தி வரணும்?"


பாக்கியத்தின் அட்வைஸோடு சில அர்ச்சனைகளும் வேகமாக வந்து விழுந்தன.


ஆனால் அமுதாவின் முகத்தில் மறுபடியும் அதே மவுனம்.


அதைப் பார்த்த பாக்கியத்தின் முகம் இன்னும் வேகமாக சிவந்தது.


"உன்னோட வாழ்க்கை ஓஹோன்னு இருக்கனும்னு ஆசைப்பட்டேனே... நீ இப்படி பிடிவாதமா இருக்குறதப் பார்த்தா என்னோட ஆசையெல்லாம் பலிக்காமப் போயிடும் போலிருக்கே..." என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.


திடீரென்று எங்கிருந்து கோபம் வந்ததோ, அதுவரை மவுனம் காத்து வந்த அமுதா சட்டென்று ஆவேசமாகப் பேசினாள்.


"சும்மா புலம்பிட்டு இருக்காத. என்னோட கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கனும்ங்றதுல உன்னை விட எனக்கு நிறையவே அக்கறை இருக்கு. என்ன முடிவு எடுக்கணுங்றதும் எனக்கு நல்லாவே தெரியும்."


திடீரென்று வேகமாகப் பேசிய அமுதாவை வியப்பாகப் பார்த்தாள் பாக்கியம். மறுபடியும் அமுதாவே பேசினாள்.


"இப்போ உன் பேச்சையே கேட்குறேன். இன்னிக்கு அவரை வரச் சொல்லு. நான் என் புருஷன் வீட்டுக்கு கௌம்புறேன்."


அமுதாவின் இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் உற்சாகம் ஆனாள் பாக்கியம்.


அடுத்த நிமிடமே திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரையோரம் அமைந்திருந்த குட்டம் என்னும் கிராமத்தில் புதுமாப்பிள்ளை குணசீலனின் மொபைல் அலற ஆரம்பித்தது. சமீபத்தில் வெளியான சினிமாவின் குத்துப்பாட்டை மொபைலின் ரிங் டோனாக வைத்திருந்ததுதான் அதற்குக் காரணம்.


மொபைலின் பச்சைப் பட்டனை ஆன் செய்து காதில் வைத்த குணசீலன் பேச்சில் நிறையவே மரியாதை தெரிந்தது.


"யாரு... அத்தையா பேசுறீங்க?"


"ஆமாம் மாப்பிள்ளை. நான்தான் பாக்கியம்."


"சொல்லுங்க... அமுதா எதுவும் பேசினாளா? என்கிட்ட மனம் விட்டு பேச அவ தயங்கினதாலதான் அங்கே உங்க வீட்டுல விட்டுட்டு வந்தேன். மற்றபடி எ ந்த பிரச்சினையும் இல்லையே?"


"அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க இன்னிக்கே, இப்பவே இங்கே புறப்பட்டு வாங்க. மத்ததெல்லாம் நேரில் பேசிக்கலாம்."


"இதோ கிளம்பிடுறேன்..." தனது முடிவை உறுதியாகச் சொன்னான் குணசீலன்.


ஒற்றைப் பல்லை விடுக்கென்று நீட்டி அமைதியாய் சிரித்துக் கொண்டிருந்த லேண்ட் லைன் போனில் ரிசீவரை வைத்தாள் பாக்கியம்.


அக்கணமே அமுதாவை நோக்கி அவசரமாக சென்றாள்.


"நான் பெத்த மகளே... மருமகனை வரச் சொல்லிட்டேன். இப்போ அவரு கார்ல புறப்பட்டா இன்னும் ஒண்ணறை மணி நேரத்துல இங்கே வந்திருவாரு. மணி மூணு ஆகப்போகுது. காலையிலேயும் சாப்பிடல, இப்பவும் சாப்பிடல. வாய்க்கு ருசியா நானே ஆக்கி வெச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு தெம்பா இரு..." என்று எப்.எம். ரேடியோவை போன்று தொணதொணவென்று பேசிய அம்மா பாக்கியத்தை கோபத்தில் முறைத்தாள் அமுதா.


"போதும்மா. உனக்கு கல்யாணம் ஆகி புருஷனும் வந்துட்டார், கூடவே வாழ்றதுக்கு ஒரு குடும்பமும் வந்துட்டு. அங்கேயும் இப்படி முறைச்சிட்டு இருக்காத. பக்குவமாக நடந்தாதான் நல்ல மருமகள்னு சொல்லுவாங்க. இல்லேன்னே... எந்த சிறுக்கிக்கு பொறந்ததோ இங்கே வந்து உயிர வாங்குதுன்னு உன்ன மட் டுமில்ல, என்னையும் சேர்த்துதான் திட்டுவாங்க. இதுக்குமேல உன்கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்லை. நீதான் இந்த வீட்டுக்கு மூத்தப் பொண்ணு. குடும்பம்ன்னா என்னன்னு உனக்கு தெரியாதது இல்ல. புரிஞ்சு நடத்துக்க. இப்போ, பானையில சாப்பாடு இருக்குது. கிடாக்கறிதான் ஆக்கியிருக்கேன். போய் சாப்பிடு. மருமகனும் இங்கே வந்துட்டு இருக்கறதுனால, அவருக்கும் நல்ல கிடாக்கறியா கொஞ்சம் எடுத்து வெச்சுக்க. இல்லேன்னா உன்னோட தங்கச்சியே எல்லாத்தையும் சாப்பிட்டுக் காலி பண்ணிடுவா..." என்று பரபரத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.


இருந்த இடத்திலேயே ஒட்டிக்கொண்டு 24 மணி நேரமும் நிற்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள் அமுதா.


சரியாக பிற்பகல் 3 மணி ஆகியிருந்தது.


வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். காலையிலும் சாப்பிடாததால் ஒட்டிப்போய் இருந்தது. சோகமான முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிடலாம் என்று நினைத்தவள் எழுந்து நடந்தாள். மதிய வெயிலில் கொஞ்சம் சூடாகிப்போன நீரில் முகத்தை கழுவி, டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டு பெட்ரூமுக்குள் வந்தாள்.


ஆளுயர கண்ணாடி பொருத்தப்பட்டு இருந்த பீரோவின் முன்பு வந்து நின்றவள், முகத்தின் முன்பு விழுந்த முடிகளை இரு கைகளாலும் இரு காதுகளுக்கும் பின்புறம் கொண்டு சென்று சிறை வைத்தாள். பக்கத்தில் இருந்த இசட் பவுடர் டப்பாவை எடுத்து வலது கையால் அழுத்தினாள். அடுத்த நொடியே வாசனை நிரம்பிய பவுடர் அவளது இடது கையில் கொட்டியது. பவுடர் டப்பாவை கீழே வைத்தவள், இரு உள்ளங்கைகளிலும் பவுடரை சரியாக தேய்த்து முகத்தில் அப்பி எல்லா இடங்களிலும் லேசாக மசாஜ் செய்து படர விட்டாள். தொடர்ந்து, தனக்குப் பிடித்த சிறிய ரக மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டை தனது இரு புருவங்களுக்கும் மத்தியில் சரியாக அழுத்தி வைத்தாள்.


பவுர்ணமி நிலவுக்கு பொட்டு வைத்தால் எவ்வளவு அழகாக இருக்குமோ அது போன்று இருந்தது அவளது வட்ட முகம். தனது அழகை தானே பார்த்து பொறாமை கொண்டவள், அந்த ஆளுயரக் கண்ணாடியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தன்னை விசித்திரமாகப் பார்த்தாள்.


நன்கு சிவந்த தேகம்தான் அமுதாவுக்கு. ஆனால், உயரம்தான் சராசரியைவிட கொஞ்சம் குறைவு. 25 வயது ஆனாலும், கல்லூரியில் படிக்கும் மாணவி போலவே தெரிந்தாள். கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படிக்கா விட்டாலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி வழியில் பி.ஏ. வரலாறு படித்ததால், திருநெல்வேலியில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் நடைபெறும் மாதாந்திர வகுப்புகளில் மட்டும் பங்கேற்று இருக்கிறாள். அவளது கல்லூரி வாசனை அந்த அளவுக்கே! அவ்வாறு வெளியூர் சென்றால் மாத்திரம் சுடிதாருக்கு மாறிக்கொள்வாள். மற்றபடி, சேலை அல்லது நைட்டிதான் அவளது பிரதான ஆடை.


இப்போதும் அவள் மெரூன் கலரில் சேலை அணிந்திருந்தாள். அது அவளது அழகை இன்னும் மெருகூட்டிக் காண்பித்தது. உச்சந்தலையில் இருந்து கால்வரை பார்வையைப் படரவிட்டாள். இயற்கையாகவே அடர்ந்து வளர்ந்திருந்த கருமையான முடி இடுப்பு வரை நீண்டிருந்தது. பியூட்டி பார்லர் பக்கமே போகாமல் இயற்கை அழகில் ஒளிர்ந்தது அவளது முகம். கண் மை தீண்டாத கண் இமை முடிகள் பட்டாம்பூச்சாய் சிறகடித்தன. குவிந்த கன்னங்கள் ஆப்பிள் பழத்தை நினைவுபடுத்தின.


அளவான மூக்கு, அளவான கழுத்து. அதற்கு கீழேதான், அவளைப் படைத்த பிரம்மன் கொஞ்சம் நின்று யோசித்துவிட்டான் போலும். சராசரியை விடவும் கொஞ்சம் பெரியதாக, மற்றவர்களை ஜொள்விட வைத்தன அவளது மாதுளம் பழ மார்பகங்கள். அவள் மூக்கு வழியாக ஆக்சிஜனை உள்ளே இழுத்த போது, தானாக நிமிர்ந்த அந்த மார்பகங்கள் அவளையே அப்போது சிலிர்க்க வைத்தன.


அந்த மார்பகங்களுக்குக் கீழேப் பார்வையை நகர்த்தினாள். அங்கே விலகிப் போய் இருந்த சேலை அவளது குவிந்த இடுப்பு பிரதேசத்தையும், குழிந்த தொப்புளையும் அப்பட்டமாகக் காண்பித்தன. இலேசாக அந்த இடுப்புப் பகுதியை வருடிக் கொண்டாள் அமுதா.


"இவ்வளவு நேரமா அங்க என்னடி பண்ணிட்டு இருக்க?"


திடீரென்று பின்னால் இருந்து அம்மா பாக்கியத்தின் குரல் பலமாக ஒலித்ததால் அதிர்ந்து போனாள் அமுதா. சட்டென்று, இடுப்பில் விலகிப்போய் இருந்த சேலையை எடுத்து தொப்புளுக்கு மேலாகச் சொருகிக் கொண்டு பேசினாள்.


"பாத்தா தெரியல... கட்டுன சேலையை சரி செய்துட்டு இருக்கேன்."


"அது எனக்கும் தெரியுது. சீக்கிரம் போய் சாப்பிடு-. தட்டுல எல்லாத்தையும் எடுத்து வெச்சிருக்கேன்..."


பாக்கியம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளைக் கடந்து சென்று சமையல் அறைக்குள் புகுந்தாள் அமுதா.


வழக்கத்தைவிட சற்று கூடுதலாக சாப்பாட்டைத் தட்டில் போட்டு, பக்கத்தில் ஒரு கிண்ணம் நிறைய இறைச்சிக் கறியை வைத்திருந்தாள் பாக்கியம்.


'இவளுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? என்னை இந்த வீட்டுல இருந்து அனுப்புறதுலேயே குறியா இருக்குற மாதிரி தெரியுது...' என்று, அம்மாவை மனதிற்குள் லேசாக திட்டிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள்.


"வாணி... இங்கே வா..."


லிவ்விங் ரூமை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறந்த அவளது குரலுக்கு பதில் குரலும் அங்கிருந்து வந்தது.


"இதோ வந்துட்டேன் அக்கா..."


அடுத்த ஓரிரு நொடிகளில் அமுதா முன்பு வந்து ஆஜரானாள் அவளது கடைசி தங்கை வாணி.


அக்காவைப் போன்றே இவளது மேனியிலும் அழகு தாறுமாறாகக் கொட்டிக் கிடந்தது. 22 வயதான இவள் திருநெல்வேலியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். 'தங்கை நேரடி கல்லூரியில் நிறைய படிக்கணும், பட்டணத்துக்குப் போய் வேலை பார்க்கணும், கைநிறைய சம்பளம் வாங்கணும், மொத்தத்துல ஆண்களுக்கு நிகரா இருக்கணும்' என்கிற அமுதாவின் விருப்பம்தான் இவளது என்ஜினீயரிங் படிப்புக்குக் காரணம். அக்காவின் திருமணம் முடிந்த கையோடு, இவளது மாப்பிள்ளை பார்க்கும் படலத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறார்கள்.


"அமுதா... எதுக்கு என்ன கூப்பிட்ட?"


"கிச்சனுக்குப் போய் ஒரு தட்டு எடுத்துட்டு வா."


"சரிக்கா..." என்ற வாணி, அந்தத் தட்டை எடுத்து வந்து அமுதாவிடம் நீட்டினாள்.


அந்தத் தட்டில், தனக்குப் போட்டு வைத்திருந்த சாதத்தில் இருந்து பாதியை எடுத்து வைத்துவிட்டு சாப்பிடத் துவங்கினாள்.


அப்போது அவளது வீட்டு லேண்ட் லைன் போன் உதவி கேட்பது போல் வேகமாக கத்தியது. அந்த நிமிடமே அவளது அத்தைப் பையன் அசோக் நினைவும் அவளுக்கு வந்தது.


மதுரையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருந்தான் அவன். சிறு வயதில் எப்போதோ ஒருமுறை 'இவளுக்கு அவன், அவனுக்கு இவள்' என்று சொல்லியிருந்ததால் இருவரும் உரிமையோடு பழகினார்கள். அதுவே அவர்களுக்குள் காதலாகவும் அரும்பியது. அந்தக் காதல் மலர்வதற்குள் அந்த காதல் பூவையே கிள்ளி எறிந்து விட்டார்கள். ஆம்... அமுதாவை அவசரம் அவசரமாக இன்னொருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். அதனால்தான் இன்று சோகமாக இருக்கிறாள் அமுதா. சாப்பிடவும் அவளுக்கு பிடிக்கவில்லை.


உதவி கேட்டு கத்திய தொலைபேசியில் அசோக் அல்லாத வேறு யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருக்க... அமுதாவின் மனம் மட்டும் அவளையும் அறியாமல் அவனுக்காக அழுதது.


"என்னை இங்கே இப்படி தவிக்க விட்ட அந்த அசோக் மட்டும், நான் இல்லாமல் எப்படி சந்தோஷமாக வாழ்வான்?"



(இன்னும் வருவாள்...)


Share:

புதன், 5 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 1


1. உல்லாசப் பயணம்
  
- நெல்லை விவேகநந்தா -


தியம் 1.30 மணி -சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். எப்பொழுதாவது அதிரடியாக பின்பற்றப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால் மெட்டல் டிடெக்டர் சோதனை வாயில் வழியாக செல்வதை அலட்சியப்படுத்திச் சென்று கொண்டிருந்தனர் அவசர கதியில் ஓடிய பயணிகள்.


ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே பளிச்சிட்ட பெரிய மானிட்டர்களில் எந்தெந்த ரெயில் எப்பொழுது புறப்படும் என்கிற விவரம் நின்று நிதானமாக ஓடிக்கொண்டிருந்தது.


பயணிகளின் கனிவான கவனத்திற்கு... என்று ஆரம்பிக்கும் ரெக்கார்டு செய்யப்பட்ட பெண்ணின் அழகான குரல், பயணிகளின் பலத்த ஓசைகளுக்கு மத்தியில் தேனிசையாக தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.


"மே ஐ ஹெல்ப் யூ" என்று பெரிதாக எழுதப்பட்டு இருந்த ரெயில்வே தகவல்களைப் பெறும் அறையில் ஒருசில பயணிகள் எதையோ விசாரித்துக் கொண்டு இருந்தார்கள்.


உலகம் முழுக்க தமிழர்களின் கைமணத்தை பரப்பிய சரவணபவனின் ரெயில்வே கிளை ஹோட்டலில் இருந்து வந்த கமகம வாசனை பெரும்பாலான பயணிகளை அந்த ஹோட்டலை நோக்கி ஒருகணம் திரும்ப வைத்தது. அந்த ஹோட்டலுக்குள் ஒரு டேபிளில் பரபரப்பாக அமர்ந்திருந்தான் ஆனந்த். அடிக்கடி ஹேண்ட் வாட்சை பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கு முன்பாக டேபிள் மீது வைத்திருந்த விலை உயர்ந்த நோக்யா மொபைலையும் அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டான்.


சிறிதுநேரத்தில் ஹோட்டல் சப்ளையர் அவன் ஆர்டர் செய்த காபியை கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு அவனைப் பார்த்தார்.


"ஸார்... உங்களுக்கு காபி மட்டும் போதுமா? வேறு ஏதாவது வேணுமா?"


"இப்போது சாப்பிட எதுவும் வேண்டாம். 2 செட் வடை மட்டும் பேக் செய்யுங்கள். இரண்டுக்கும் சேர்த்து பில் கொண்டு கொண்டு வாருங்கள்."


ஆனந்த் சொன்னதும் அங்கிருந்து அகன்றார் சப்ளையர்.


ஆவி பறந்து கொண்டிருந்த காபியை உதட்டுக்கு கொடுத்து சப்பத் துவங்கினான் ஆனந்த். அவன் காபி குடித்துக்கொண்டிருக்கும்போதே மொபைல் பளிச்சிட்டு சினுங்கியது. ஆர்வமாய் மொபைலை ஆன் செய்து பேசினான்.


"ஸார்... நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நாங்கள் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்துவிட்டோம்."


எதிர் முனையில் பேசிய ஆசாமி கூறினான்.


"நான் சரவணபவன் ஹோட்டலில் இருக்கிறேன். இதோ வெளியே வந்து விடுகிறேன். நீங்கள் ரெயில் நிலையத்திற்குள் வாருங்கள்."


"நான் ரெயில் நிலையத்திற்குள் வர முடியாது ஸார்."


"ஏன்?"


"நீங்கள் கோவைக்கு இரண்டு டிக்கெட்தானே ரிசர்வ் செய்து வைத்திருக்கிறீர்கள்?"


"ஆமாம்!"


"நான் உள்ளே வர வேண்டுமானால் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு வாருங்கள்."


"சரி... நீங்கள் அங்கே நில்லுங்கள். நான் ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன். ஆமாம்..." இதற்கு மேல் சொல்லும் போதுதான் பேச்சில் சற்று தடுமாறினான் ஆனந்த்.


"பயப்படாதீங்க ஸார். அந்த பொண்ணும் என்கூடத்தான் இருக்கு. நீங்க தாராளமா கூட்டிட்டு போகலாம்!"


"சரி... இதோ வந்துவிட்டேன்."


அவசரமாக மொபைல் இணைப்பை துண்டித்தவன், தான் குடித்துக் கொண்டிருந்த காபியைப் பார்த்தான். அது நன்றாக ஆறிப்போய் இருந்தது. அதனால் அதை அப்படியே வைத்துவிட்டான்.


அவன் ஆர்டர் செய்த இரண்டு செட் வடையும் பில்லோடு வந்துவிட்டதால், அதற்கான பணத்தை வேகமாக கொடுத்துவிட்டு, வடையை தனது பேக்கிற்குள் திணித்துக் கொண்டு ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதிக்கு ஓடினான்.


ஓடி வந்த வேகத்தில் எதிரே சற்று உயரத்தில் பளிச்சிட்ட மானிட்டரில் நேரத்தைப் பார்த்தான். மதியம் 2 மணி 10 நிமிடம் 7 நொடி என்பது பளிச்சிட்டது.


ரெயில் புறப்பட இன்னும் 20 நிமிடம்தான் இருக்கிறது என்கிற வேகத்தில் ஓடி வந்தவன், தன்னைத் தேடி வந்தவர்கள் எங்கே என்று பதற்றமாய் தேடினான்.


அப்போதுதான், நாம் தேடி வந்தவர்களை இதற்கு முன்பு நேரில் பார்த்தது கிடையாதே... வேறு எப்படி அவர்களை அடையாளம் காண்பது? என்று யோசித்து நின்றான்.


மொபைலில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவன் அருகில் ஒருவன் வந்து நின்றான்.


"ஸார்... நீங்கள்தானே ஆனந்த்?"


"ஆமாம். நீங்கள்...?"


"நான்தான் பிரகாஷ்."


"ஸாரி... நான் உங்கள் பெயரையே மறந்து போய்விட்டேன்."


"ரெயில் புறப்பட நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். நம்ம அக்ரிமென்ட்டை எந்த சூழ்நிலையிலும் மீறிவிட வேண்டாம். மீறி நடந்தால், நடக்கும் விபரீதங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பாக வேண்டும்."


"இன்னும் எந்த காரியமும் நடக்கவில்லையே... அதற்குள் ஏன் நடக்காததைப் பற்றி பேசுகிறீர்கள்?"


"இல்லை... ஒரு முன்னெச்சரிக்கைகாகத்தான் சொன்னேன்."


"சரி..." என்ற ஆனந்த், மறுபடியும் கண்களால் அந்தப் பெண்ணைத் தேடினான்.


"ஸார்... நீங்க ரொம்பவும் ஆர்வமாக இருக்குறீங்க. அந்தப் பெண் உங்களை ஏற்கனவே பார்த்துவிட்டாள். நீங்கள்தான் அவளை இன்னும் பார்க்கவில்லை."


"அப்படியானால் அவள் எங்கே?"


மறுபடியும் ஆனந்திடம் அதீத ஆர்வம் பளிச்சிட்டது.


"உங்களை மேலும் சோதிக்க விரும்பவில்லை. உங்களுக்கான அந்த இளம்பெண் உங்கள் ரிசர்வ் செய்த ரெயில் பெட்டியில் இந்நேரம் ஏறி உட்கார்ந்து இருப்பாள் என்று நினைக்கிறேன்."


"டிக்கெட் என்னிடம் அல்லவா இருக்கிறது? அவளுக்கு எப்படி பயணிக்க வேண்டிய கோச் தெரியும்?"


"என்ன ஸார் மறுபடியும் மறந்துட்டீங்களா? நீங்கள் தானே இன்னிக்கு காலையில் கோவை எக்ஸ்பிரஸில் பயணிக்க உள்ள கோச் மற்றும் சீட் நம்பர் பற்றி மெஸ்ஸேஜ் செய்தீர்கள்?"


"ஆமாம், மறந்துவிட்டேன்..." என்ற ஆனந்த் சற்று வழிந்து தொலைத்தான்.


"ஆனந்த் ஸார்... இதுக்கு மேலேயும் உங்களது பொறுமையை சோதிக்க நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கள் பாஸின் Ôஇன்டியன் பேங்க்Õ அக்கவுண்ட்டிற்கு அனுப்பிய பணம் 70 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆகிவிட்டது. ஸோ... என்ஜாய் யுவர் ஊட்டி ஜார்னி" என்று கை கொடுத்து வாழ்த்தி விட்டு திரும்பினான் பிரகாஷ்.


பதற்றத்தோடு கோவை செல்ல தயாராக நின்றிருந்த சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் நிற்கும் ஆறாவது பிளாட்பார்ம் நோக்கி வேகமாக ஓடினான் ஆனந்த்.


"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... அரக்கோணம், காட்பாடி, சேலம் வழியாக கோவை வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்" என்கிற தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியிலான அறிவிப்புகளால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் தனக்குரிய சீட் ஒதுக்கப்பட்டு இருந்த கோச்சான டி5-ஐ சென்றடைந்தான்.


அது சிட்டிங் ரெயில். அதாவது, அமர்ந்து மட்டுமே செல்லும் பயணிக்கும் பகல் நேர ரெயில் என்பதால் ஒவ்வொரு பயணிகளும் தங்களுக்குரிய இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். 42, 43 ஆகிய எண்கள் கொண்ட சீட்கள் ஆனந்த்துக்கும், அவனுடன் பயணிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தன.


தன்னுடன், தன்னுடைய எல்லா சேவையையும் பூர்த்தி செய்ய வரப்போகும் அந்த அழகி யார் என்பதை அறிய ஆவலாய் தன் இருக்கையைப் பார்த்தான். அங்கே அந்தப் பெண் இல்லை. பக்கத்தில் எங்கேயாவது நிற்கிறாளா என்பதை அறிய சுற்றும் முற்றும் பார்த்தான். ஆங்காங்கே பல இளம்பெண்கள் நின்றிருந்ததால், ஒரு வாரத்திற்கு மட்டும் தனக்குரியவளாக உடன் வாழப் போகும் அந்த பெண்ணை தேடினான்.


அடுத்த நிமிடமே, அந்த ரெயில் புறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனந்தின் பதற்றம் இன்னும் அதிகமாகியது.


'அந்த பெண்ணை இன்னும் காணவில்லை. 70 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்களா? நானும், அவர்களை நம்பி இப்படியொரு ஜென்டிமென் அக்ரிமென்ட் போட்டுக் கொண்டது முட்டாள்த்தனமானதா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அப்செட் ஆனான்.


தனது இருக்கையில் சோகத்தோடு அமர்ந்த அவன் எதார்த்தமாக நிமிர்ந்தான். அவனுக்கு எதிரில் 22 வயது மதிக்கத்தக்க அழகான இளம்பெண் உட்கார்ந்திருந்தாள்.


டைட்டாக ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்திருந்தாள். அவளது ஒட்டுமொத்த அழகையும் அந்த ஆடை பளிச்சென்று காட்டியது. அவளது லிப்ஸ்டிக் உதட்டில் திருநெல்வேலி அல்வாவின் இனிப்பு தெறித்தது.


நிச்சயம் அவள்தான் தனக்காக அனுப்பப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆனந்த், அவளுக்கு புன்னகையோடு ஒரு ஹாய் சொன்னான்.


நிமிர்ந்து பார்த்த அந்த பெண், லேசாக புன்னகைத்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள்.


தன்னை அவளிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் திணறினான் ஆனந்த்.


"மேடம்..."


"யெஸ். வாட் யூ வான்ட்?"


"ஐ ஆம் ஆனந்த். ஆர் யூ...?"


"ஐ ஆம் ஸ்வேதா."


தன் பெயரை மட்டும் சொன்ன அவள், அதற்கு மேல் பேச ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.


'இவளது பேச்சைப் பார்த்தால் நமக்காக அனுப்பப்பட்டவள் போன்று தெரியவில்லையே...' என்று திடீரென பதற்றமான ஆனந்த், சீட்டில் இருந்து அவசரமாக எழுந்தான். தனக்குரிய பெண்ணை அனுப்பி வைக்க ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வந்துவிட்டு போன பிரகாஷ் மொபைலை அவசரமாக தொடர்பு கொண்டான்.


தனது கைக்குழந்தை மொபைலை வெகுநேரம் சினுங்க விடவில்லை பிரகாஷ். உடனே ஆன் செய்தான்.


"என்ன பிரகாஷ் என்னை ஏமாற்ற பாக்குறீங்களா? ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு அந்த பெண்ணை கூட்டிட்டு வந்ததாக முதலில் சொன்னீர்கள். நான் அங்கே வந்தபோது ரெயிலில் ஏறி இருப்பாள் என்றீர்கள். இப்போது அந்த பெண் இங்கே வரவேயில்லை. என்னை சாதாரண ஆளுன்னு நினைச்சு ஏமாற்ற நினைக்காதீங்க. என்னுடைய க்ளோஸ் ப்ரெண்ட் இந்த சென்னையில்தான் ஜாயின்ட் கமிஷனரா இருக்கான். அவனுக்கு நான் ஒரு போன் பண்ணுனாலே போதும். நீங்க எல்லாம் கூண்டோடு உள்ளே இருப்பீங்க..."


"ஸார்... அவசரப்பட்டு கத்தாதீங்க. நீங்க யாரு, உங்க பேக்ரவுண்ட் என்ன என்று எல்லாவற்றையும் விசாரித்துதான் அந்த பெண்ணை உங்களோடு அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கும் தொழில் தருமம்னு ஒண்ணு இருக்கு. வாங்கின பணத்துக்கு நாங்க ஏமாத்த மாட்டோம். ரெயில் புறப்படும்போது அவள் உங்களோடு இருப்பாள். அதுக்குப் பிறகும் அவள் வரவில்லை என்றால் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்க. இப்போது மொபைலை கட் பண்ணுங்க..." என்று சொல்லிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்துவிட்டான் பிரகாஷ்.


"ச்சே..."


ஆனந்துக்கு மொபைலை வீசியெறிய வேண்டும் என்பது போல் இருந்தது. கோபத்துடனேயே தனது சீட்டில் உட்கார்ந்தான். அப்போதுதான் யாரோ ஒரு இளம்பெண் தன்னை உரசி இருப்பது போல் உணர... திரும்பிப் பார்த்தான்.-


அங்கே, நடிகை அனுஷ்கா சாயலில் அழகான இளம்பெண், அவனை ஒட்டி அமர்ந்திருந்தாள்.


ஆனந்த் பேசுவதற்கு முன்பாக அவளே தனது அழகான வாயைத் திறந்தாள்.


"நீங்கள் தானே ஆனந்த்?"


"ஆமாம்!"


"நான் ஷ்ரவ்யா. ஒரு வாரத்திற்கான உங்களது பார்ட்னர்."


புடவையில் ஹோம்லியாக வந்திருந்த ஷ்ரவ்யாவை பார்ப்பதற்கே ஆனந்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு அழகியா தனக்கு 'கம்பெனி' கொடுக்கப் போகிறாள் என்பதை அந்த நிமிடம் வரை அவனால் நம்ப முடியவில்லை.






(இன்னும் வருவாள்...)
Share:

சனி, 24 செப்டம்பர், 2011

ஜொள் விட வைக்கும் சுஷி (sushi)



சுஷி... (sushi) ஜப்பானியர்களை சப்பு கொட்ட வைக்கும் உணவு இது. பிளேட் வழியும் அளவுக்கு சாதம் வைத்து சகல கூட்டுப் பொரியல், குழம்பு வகைகளுடன் உட்கொள்ளும் நம்மூர் உணவைப் போன்றது அல்ல இது. முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கே முன்னுரிமை தரப்படும் ஸ்பெஷல் உணவுதான் இந்த சுஷி.


பொதுவாக ஜப்பானியர்கள் காய்கறிகள், இறைச்சி, மீன், கடல் பாசிகள் ஆகியவற்றை சம அளவில் உட்கொள்கிறார்கள். இதுதான் அவர்களது நீடித்த உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் காரணம். சுஷியும் இந்த ஆரோக்கிய வகையைச் சேர்ந்ததுதான்.


வினிகர் இட்டு சமைக்கப்பட்ட அரிசி சாதத்துடன் கடல் உணவு, இறைச்சி, காய்கறி, முட்டை ஆகியவை சேர்த்து உருளைகளாகவோ, வட்டமாகவோ தயாரி க்கப்படுகிறது சுஷி. அரிசி சாதத்துடன் சேர்க்கப்படும் இதர பொருட்கள் சமைக்கப்பட்டோ அல்லது சமைக்கப்படாமல் பச்சையாகவோ பரிமாறப்படும். பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் சுஷி, பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட அரிசி சாதம் கொண்டு செய்யப்படுகிறது.
 சுஷி என்றால் புளிப்பு அல்லது கரிப்புச் சுவை என்று பொருள். புளித்த அரிசி சாதத்தில் இருந்து பெறப்படும் வினிகர், பதப்படுத்தப்பட்ட மீனில் அமினோ அமிலங்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த சுரப்பு காரணமாக, உமாமி என்ற மிக முக்கியமான சுவை அந்த உணவுக்கு கிடைக்கிறது.


சுஷி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிசியின் தேர்வில் தனிக் கவனம் செலுத்துகிறார்கள் ஜப்பானியர்கள். அந்த அரிசியானது புதிதாக அறுவடை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதன் பிசுபிசுப்பு தன்மைதான் சுஷியின் கூடுதல் அல்லது குறைவான சுவைக்குக் காரணமாக அமைகிறது. இந்தியா போன்ற கீழை நாடுகளில் பயன்படுத்தப்படும் அரிசியைப் போல நீளமான அரிசி வகையாக இல்லாமல் தட்டையான மற்றும் குட்டையான அரிசியே சுஷி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இனிப்பு மற்றும் உவர்ப்பு - இவற்றில் விரும்பும் சுவையை கூட்டியோ குறைத்தோ பல வழிமுறைகளில் சுஷி செய்யப்படுகிறது. அந்த உணவானது நோரி எனப்படும் மெல்லிய கடல்பாசி தாள்களினால் சுருட்டப்படுகிறது. இந்தக் கடல் பாசி தாள்கள் பளபளப்பான, மெல்லிய, கரும் பச்சை வண்ணம் கெ £ண்டவை. இவ்வாறு மேல் சுருட்டாக மட்டும் அல்லாமல், தனியாக உண்ணப்படும் ஒரு தின்பண்டமாகவும் ஜப்பானில் நோரி பயன்படுகிறது. கடலில் வளர்க்கப்படும் பாசியைச் சுரண்டி, வெய்யிலில் காய வைத்து, மெல்லிய ஷீட்களாக விரித்து நோரி தயரிக்கப்படுகிறது.


சுஷியில் நிரப்ப பயன்படும் பொருட்களில் பெரும்பாலும் சமைக்கப்படாத மீன் உபயோகிக்கப்படுகிறது. சுவை, சுகாதாரம் கருதியும், வாடிக்கையாளர்களின் ப £ர்வைக்கு அழகாக இருப்பதற்காகவும் இந்த பச்சையான மீனானது உறை நிலையில் வைக்கப்பட்டு பின்பு உபயோகிக்கப்படுகிறது.


பாரம்பரிய முறையில் சுஷி தயாரிக்கும் சமையல் கலைஞர்கள் உறைந்த மீனைப் பார்த்தே அதன் சுவை, தரம், தன்மை ஆகியவற்றை தீர்மானித்துவிடும் திறன் பெற்றிருப்பார்கள். சாலமன், டுனா, ஜப்பனீஸ் யெல்லோ டெய்ல் ஆகிய மீன்கள் சுஷி தயாரிப்பில் அதிகம் பயன்படுகின்றன. நல்ல கொழுப்பு மிகுந்த இந்த மீன்களின் சுவை சுஷியின் தரத்தையும், -சுவையையும் மேலும் அதிகரிக்கிறது.


ஈல் மீன், நண்டு, இறால், கணவாய், நத்தை ஆகியவையும் சுஷியில் பயன்படுத்தப்படுகின்றன. முட்டை, முள்ளங்கி, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், வெள்ளரி போன்றவையும் சுவைக்கேற்ப அதில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. சோயா சாஸ், தேநீர், புளிக்க வைக்கப்பட்ட இஞ்சி ஆகியவற்றுடன் சேர்த்து சுஷி உண்ணப்படுகிறது.


தயாரிப்பு முறை, சுருட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேர்க்கப்படும் பிற உணவு பொருட்களால் சுஷி பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அவற்றில் முக்கியமானவை மகி சுஷி, நிகிரி சுஷி, குண்கண் மகிசுஷி.


மகி சுஷியானது, கடல் பாசியான நோரியில் சுருட்டப்பட்ட அரிசி சாதம் மற்றும் பிற சேர்ப்பு பொருட்களை கொண்டு உருளை வடிவில் இருக்கும்.


நிகிரி சுஷியானது, நீள் கூம்பு வடிவில் தயாரிக்கப்படும்.


குண்கன் மகிசுஷியானது, நோரியால் மேல் மூடி செய்யப்பட்டு, அடியில் அரிசி சாதமும், மேலே மீன், முட்டையும் இட்டு தயாரிக்கப்படுகிறது.


மிகுந்த புரதமும், வைட்டமின்களும், குறைவான கொழுப்புமாக சுஷி ஒரு சரிவிகித ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது. ஆனால், சில வேளைகளில் பச்சையாக உபயோகிக்கப்படும் மீன் மற்றும் கடல் உயிரினங்களில் நுண்ணுயிரிகள் வசிக்க வாய்ப்புள்ளதால் சரியான உறைநிலையில் இதை வைத்திருந்து உண்பது அவசியம்.


நேக்டு சுஷி

 
இப்படி ரொம்பவே மெனக்கெட்டு தயார் செய்யப்படும் சுஷியை அலங்காரமாக பரிமாறுவது ஜப்பானில் ஸ்பெஷல்! இதற்காக அதை பரிமாறுபவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார்கள். அந்த வகையில் ஒன்றுதான், அழகான இளம்பெண்களை உணவு உண்ணும் தட்டாக பயன்படுத்துவது.


அது எப்படி ஒரு பெண் தட்டாக மாற முடியும்?


முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் ஜப்பானியர்கள். அதாவது, நீண்ட மேஜையின் மீது ஜட்டியும், பிராவும் மட்டும் அணிந்த அழகான இளம்பெண் படுத்துக்கொள்வார். மல்லாக்க படுத்திருக்கும் அவர், தனது கைகளையும், கால்களையும் சற்று அகலமாக விரித்து வைத்துக்கொள்வார். அவரது உடலில் தலை தவிர்த்து அனைத்துப் பகுதியிலும் சுஷி உணவை வரிசையாக அடுக்கி அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும், அந்த டேபிளை ஆர்டர் செய்தவர்கள் குழுவாக வருவார்கள். அவர்களிடம் சாப்ஸ்டிக் என்று கூறப்படும் இரண்டு குச்சிகள் தரப்படும். அவர்கள், படுக்க வைக்கப்பட்ட பெண் மீது வைக்கப்பட்டுள்ள சுஷி உணவு வகைகளை குச்சியைக் கொண்டு எடுத்துச் சாப்பிட வேண்டும்.

 இந்த வகை உணவு பரிமாறும் முறைக்கு 'நேக்டு சுஷி' என்று பெயர். சிலநேரங்களில், இதில் பயன்படுத்தப்படும் பெண் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக இருப்பார். அந்த நிர்வாண உடல் மீதே சுஷி உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். உணவு உண்ண வரும் ஜொள்ளர்கள் இவர்களிடம் கிளுகிளுப்பாக நடந்து கொள்வதும் உண்டு. அதாவது, மேஜை மீது படுத்திருக்கும் இளம்பெண்ணின் மார்பகம், இடுப்புப் பகுதியில் உள்ள உணவை சாப்ஸ்டிக் குச்சிகளை கொண்டு எடுத்து சாப்பிட்டு விட்டு, அந்த பெண்ணை ஜொள் விட்டபடியே உணவை சாப்பிடுவார்கள். சிலநேரங்களில் சிலர் மேஜை மீது ப டுத்திருக்கும் பெண் மீது உள்ள உணவை சாப்ஸ்டிக் கொண்டு எடுக்காமல் தங்களது வாயால் கவ்வி எடுத்து சாப்பிடுவதும் உண்டு.


இவற்றை எல்லாம் சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதாலேயே நேக்டு சுஷி உணவு பார்ட்டியில் ப்ளேட் ஆக பயன்படுத்தப்படும் இளம் பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கணிசமான பணம் சம்பளமாக நாள்தோறும் கிடைப்பதால், இப்பணிக்கு அந்த பெண்கள் விரும்பியே வருகின்றனர். ப £ர்ட்டிக்கு வருபவர்கள் கொடுக்கும் சில்மிஷங்களையும் சமாளித்துக் கொள்கிறார்கள்.


நேக்டு சுஷி பார்ட்டியில் ப்ளேட் ஆக இருக்கும் பெண்ணுக்கு என்று சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, அந்தப் பெண், விருந்து நடைபெறும் இடத்தில் மேஜையின் மீது ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிர்வாண கோலத்தில் உடலை அசைக்காமல் இருக்கும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். அடுத்ததாக குளிர்ந்த உணவை நீண்ட நேரம் உடலில் தாங்கும் சக்தியும் பெற்றிருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, இந்த சேவை க்கு அவள் மனரீதியாக தயாராக வேண்டும். அதாவது, விருந்தில் அவள் கோபமாகவோ, டென்ஷனாகவோ, சோகமாகவோ காணப்பட்டால் விருந்துக்கு வ ந்தவர்கள் வெளியேறி விடுவார்கள். அதனால், விருந்துக்கு வந்தவர்கள் உணவை எடுக்கும் சாக்கில் தனது உடலை தொட்டாலோ, முத்தம் கொடுத்தாலோ கூட சிரிக்க மட்டுமே செய்ய வேண்டும்.


இந்த சேவைக்கு முன்பாக ஸ்பெஷல் நறுமணம் கொண்ட சோப்பை உடலின் அனைத்து பகுதியிலும் தேய்த்து குளித்து அந்த பெண் சுத்தமாக டைனிங் டேபிளுக்கு வர வேண்டும்.


சுஷி உணவை நிர்வாணக் கோலத்தில் படுத்துள்ள அழகான இளம்பெண்ணின் உடலில் இருந்து எடுத்து சாப்பிடும் விருந்துக்கு அதிக அளவில் கட்டணம் வசூல் செய்கிறார்கள். அதனால், கோடீஸ்வரர்கள் மத்தியிலேயே இந்த விருந்து பிரபலமாக இருந்து வருகிறது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஜப்பான் செல்லும் கோடீஸ்வர தொழிலதிபர்கள், கண்டிப்பாக நேக்டு சுஷி பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.


நேக்டு சுஷி பார்ட்டிக்கு அழகான இளம் பெண்களை மட்டுமின்றி, அழகான ஆணழகன்களையும் பயன்படுத்துகிறார்கள். இது மிக மிக குறைவு. பெண் வ £டிக்கையாளர்கள் கேட்டால் மாத்திரம் ஆண்களை பயன்படுத்துகிறார்கள்.


ஜப்பானில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே இந்த கிளுகிளுப்பான உணவு விருந்து நடக்கிறது. பல நாடுகளில் இந்த விருந்துக்கு தடை விதி க்கப்பட்டுள்ள அதேநேரத்தில், மேலும் சில நாடுகளில் அரசு அனுமதியுடன் இந்த விருந்துகள் கொண்டாடப்படுகின்றன. அரசியல்வாதிகள், பிரபலங்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விழாக்கள் நடத்தும்போது இத்தகைய விருந்துக்கும் ஏற்பாடு செய்து வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.


ஆபாசத்தை தூண்டுவதாக இந்த விருந்து உள்ளது என்று ஒரு தரப்பில் எதிர்ப்பு குரல் ஒலித்தாலும், சுஷி உணவு விருந்தில் பங்கேற்கும் அனைவரின், குறிப்பாக நிர்வாண கோலத்தில் படுத்திருக்கும் இளம்பெண்ணின் விருப்பத்துடனேயே இந்த விருந்து நடைபெறுவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதரவுக் குரல் கொடுப்போரும் இருக்கிறார்கள்.


நீங்கள் எப்படி?



Share:

வியாழன், 8 செப்டம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு தினமலர் பாராட்டு!



நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் -வரலாறும் அற்புதங்களும்' (வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை) நூலுக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய மேலான மதிப்புரை இங்கே உங்கள் பார்வைக்கும்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருமாலின் அருள்பெற்று, வைகுண்டர் என்ற பெயருடன் 42 ஆண்டுகள் வாழ்ந்த இறைமகனாரின் மகிமைகளை மிகவும் இனிமையாக இந்த நூல் விவரிக்கிறது.

ஆன்மிகத்தின் முடிந்த நிலையாக எதிர்கால முக்தியை வேண்டுவோர் பலர். ஆனால், நிகழ்கால கொடுமையாக நம்பூதிரி, நாயர், தம்புரான், ஐயர், பிள்ளைமார் ஆகிய ஆதிக்க உயர் ஜாதியினரின் அடிமையாக வாழ்ந்த பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட 18 ஜாதியினரையும் மீட்டு, அவர்கள் வாழ்வில் புது ஒளி பாய்ச்சியவர் அய்யா வைகுண்டர். தன் தெய்வ சக்தியால் பற்பல அதிசயங்கள் செய்தவர்.

தென்னை, பலா, வாழை, ரப்பர் மரங்களால் அழகுபெற்ற இன்றைய கேரளாதான் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம். இதன் ஒரு பகுதியாக விளங்கியது நாஞ்சில் நாடு. இன்றைய நாகர்கோவில் அருகில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிக்க ஜாதிகளில் அடிமைகளாக இருந்த 18 ஜாதியினர் உரிமை இழந்து வாடினர். பெண்களுக்கு கல்வி கூடாது, மார்பில் துணி கூடாது, குடங்களை இடுப்பில் தூக்கக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்து அவமானப்படுத்தினர்.

இந்த கொடுமைகள் தாங்காத சிலரை கிறிஸ்தவர்கள் மதம் மாற்றிக்கொண்டனர்.

சாமித்தோப்பில், 1809-ல் முத்துக்குட்டி என்ற பெயரில் தோன்றி, 20 வயதில் நோய்வாய்ப்பட்டு, பிறகு திருச்செந்தூர் கடலில் மறைந்து, மூன்றாம் நாள் வைகுண்டராக அவதாரம் எடுத்து வந்து, தனது அதி அற்புதங்களால் உருவம் அற்ற வழிபாட்டு முறையை உருவாக்கி, ஜாதிகளை கடந்த தெய்வ நிலையை மக்களுக்கு காட்டியதை இந்நூல் அற்புதமாக பேசுகிறது.

- முனைவர் மா.கி.ரமணன்.

நன்றி : தினமலர் 28.8.2011

Share:

சனி, 3 செப்டம்பர், 2011

அய்யா வைகுண்டர் நூலுக்கு தமிழக அரசின் இதழ் பாராட்டு!

நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' என்ற நூலுக்கு, தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் திருக்கோவில் மாத ஆன்மீக இதழ் பாராட்டு தெரிவித்து, சிறப்பு நூல் மதிப்புரை வழங்கியுள்ளது. டாக்டர் என்.ஸ்ரீதரன் நூலை ஆராய்ந்து மதிப்பீடு செய்துள்ளார். 

அவர், தமிழக அரசின் திருக்கோவில் மாத இதழில் கூறியிருப்பதாவது:

'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்', நெல்லை விவேகநந்தா, வானதி பதிப்பகம், தீன தயாளு தெரு, சென்னை-600 017, பக்கங்கள் : 232, விலை : ரூ.100.

'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' நூலின் ஆசிரியர் நெல்லை விவேகநந்தா எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளருமாவார்.


சுவாமி விவேகானந்தரைப் போலவே நாஞ்சில் நாட்டில் அய்யா வைகுண்டர் ஆன்மிகத்தையும், சமூக நீதியையும் இணைத்துப் பெரியதோர் இயக்கத்தை நிலை நாட்டியமை நூலாசிரியரைக் கவர்ந்த, அவரை இந்நூல் எழுதத் தூண்டியிருக்கிறது. எனவே, இந்நூலை சமூக வரலாற்றுப் பெட்டகம் என ஐயமின்றி கூறலாம்.


அய்யா வைகுண்டர் நாஞ்சில் நாட்டில் 1809-ல் உதித்த ஞான சூரியன். சம காலச் சமூக அவலங்களை பொசுக்க வந்த சீர்திருத்தப் பகலோன். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து, முதலில் முத்துக்குட்டி என்று பெயர் வைக்கப்பெற்று, பிறகு அய்யா வைகுண்டர் என்னும் திருப்பெயர் பெற்ற ஓர் இளைஞர், தலைமுறைகளாக வேரூன்றிவிட்ட சமூகக் கெடுமைகளை வேரறுத்த விதத்தையும், வலுவான ஓர் ஆன்மிக வழிமுறையை நிலை நாட்டியதையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இந்நூல் வர்ணிக்கிறது.


தமது அவதார நோக்கம் பூர்த்தியானதும் 2.6.1851 அன்று அவர் வைகுண்டம் ஏகினார். தம்முடைய வரலாற்றையும், கொள்கைகளையும் கனவின் மூலம் தமது சீடரான அரிகோபாலனுக்கு தெரிவித்தார். அவற்றின் தொகுப்பே அகிலத்திரட்டு என்னும் நூல். இதுவே அய்யா வழியைப் பின்பற்றுபவர்களின் வேத நூல்.


அய்யா வைகுண்டர் இந்நூலாசிரியரின் முதல் படைப்பு எனினம் தெளிவாகத் திட்டமிட்டுக் கட்டுக் கோப்பான முறையில் எழுதியுள்ளார். அய்யா வைகுண்டர் காலச் சமூகப் பின்னணி, அவரது வரலாறு, அவர் நடத்திய போராட்டங்கள், சாதனைகள், அவரது இயக்கத்தின் வளர்ச்சி, கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள், மறைவிற்குப் பின் நிகழ்த்திய அதிசயங்கள் என்று ஓர் ஓழுங்குமுறையை அமைத்துக் கொண்டு எழுதியுள்ள நூலாசிரியர் பாராட்டிற்குரியவர்.

ஏராளமான பொருத்தமான படங்களை சேர்த்துக் கலை உணர்வுடன் அச்சிடப்பட்டுள்ள இந்நூல் வானதி பதிப்பகத்திற்குப் புகழ் தேடி தரும் நூல் மட்டுமன்று, அய்யா வைகுண்டரின் ஆசிகளையும் பெற்றுத்தரும் நூலாகும்.


நன்றி : திருக்கோவில், ஆகஸ்ட் 2011

Share:

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

நாடி ஜோதிடம் உண்மையா? அல்லது ஏமாற்றுகிறதா?


நாடி ஜோதிடம்... நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்களை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கணித்துச் சொல்லும் ஒருவகை ஜோதிட முறை என்பது பலரது கருத்து. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது சிலரது தனிப்பட்ட கருத்து.

இவற்றில் எது உண்மை?

நாடி எங்கெல்லாம் பார்க்கிறார்களோ, அங்கெல்லாம் விசிட் ஒரு விசிட் அடித்தால், ஒருவேளை... நாடி ஜோதிடம் என்பது உண்மையாகத்தான் இருக்குமோ என்றுதான் என்னத் தோன்றுகிறது. ஆம்... நாடி பார்க்கப்படுகிற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் தங்களது எதிர்காலத்தை தெரிந்துகொள்ள தவம் கிடக்கிறது.

நாடி ஜோதிடம் என்பது என்ன? அது எப்படி வந்தது? அதை அறிமுகப்படுத்தியது யார்?

நாடி ஜோதிடம் என்பது ஒருவரது கைரேகையைக் கொண்டு, அவரைப் பற்றி ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து, அதிலுள்ள அவர் தொடர்பான தகவல்களை வாசித்து விளக்கி கூறுவதுதான். நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஏடுகளை புரட்டிப்பார்த்து பலன் சொல்கிறார்கள். ஆண்கள் என்றால் வலது கட்டைவிரல் (பெருவிரல்) கைரேகையும், பெண்கள் என்றால் இடது கட்டைவிரல் கைரேகையும் பெறப்படுகிறது.

நாடி என்று சொல்லப்படும் ஏடுகள் பனை ஓலையினால் ஆனவை. ஒரு காலத்தில் தமிழகத்தில் முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக திகழ்ந்தது இந்த பனை ஓலை ஏடுகள்தான். இதற்காக பனை ஓலையை சரியான முறையில் தயார் செய்து, அதில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். நாடி ஜோதிடம் கூறும் தகவல்களும் இதுபோன்ற பனை ஓலைகளிலேயே எழுதப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த ஓலையில் இடம்பெற்றுள்ள எழுத்துக்கள் பழந்தமிழ் வட்டெழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளன. இந்த ஓலைச் சுவடிகளை எழுதியது யர் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 2 ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தவை எனக் கருதப்படும் இந்த சுவடிகள் சப்த ரிஷிகளான அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஷ்டர் மற்றும் வால்மீகி ஆகியோரால் எழுதப்பட்டவை என்று நம்பப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலும் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஓலைகள் கிடைக்கின்றன. வாசிப்புகளும் அவர் பெயரிலேயே நடைபெறுகின்றன.

தமிழர்களைத் தேடி உலகம் முழுக்க இந்த நாடிகள் பயணப்பட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்கிற ஊரில்தான் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் நாடி ஜோதிடம் பார்க்க பயன்படுத்தப்படும் ஓலைச்சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றியபோது, இந்தியர்களின் பாரம்பரிய விஷயங்களை அறிந்து கொள்ள அதிக

அக்கறை காண்பித்தார்கள். ஓலைச்சுவடிகளில் மருத்துவ குறிப்புகள், எதிர்காலம் குறித்த குறிப்புகள், மூலிகைகள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்பட்டதால் அவற்றில் சிலவற்றை தங்களது நாட்டுக்கே எடுத்துச் சென்றுவிட்டனர்.

அதேநேரம், பழங்கால ஓலைச்சுவடிகளின் மகிமையை அறிந்த அக்கால தமிழகத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள், தங்களுக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து பத்திரப்படுத்திக் கொண்டனர். சில ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு வசதியின்றி கரையான்களுக்கு இரையாகிவிட்டன. சில இடங்களில் இந்த ஓலைச்சுவடிகள் ஏலம் விடப்பட்டு அதை வாங்கிச் சென்றவர்களும் உண்டு.

இப்படியாக சப்த ரிஷிகள் எழுதியதாக கருதப்படும் ஓலைச்சுவடிகள் உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்தன. இவையெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே நடைபெற்றன.

இன்று வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இந்த ஒலைச் சுவடிகளையே பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். பரம்பரையாக ஒருவர் பின் ஒருவராக இக்கலையை அவர்கள் அறிந்து வருகின்றனர்.

என்றாலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாடி ஜோதிடம் இங்கே பார்க்கப்படும் என்று விளம்பரப்படுத்தி பலர் உலாவி வருகின்றனர். இதை அவர்கள் ஒரு வியாபாரமாகவே செய்கிறார்கள். இவர்களில் சிலர் தங்களுக்கு என்று இணையதளத்தை துவக்கி, வெளிநாடு வாழ் தமிழர்களையும் கவர்ந்து வருகின்றனர். அதற்காக கணிசமான ஒரு தொகையை கறந்து விடுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடி பார்ப்பதற்கான செலவு 200 - 300 ரூபாயிலேயே முடிந்து விடுகிறது. பரிகாரம் என்றால் அதற்கு தனியாக பெரிய அளவில் செலவிட வேண்டியது இருக்கும். என்றாலும், ஆரம்பத்தில் நாடியில் சரியான பதில் வந்தால் மாத்திரமே பணம் வாங்குகிறார்கள். சரியான பதில் வரவில்லை என்றால் இன்னொரு நாள் வாருங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

நாடி ஜோதிடம் எப்படி பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக அறிய முடிவெடுத்தபோது வைத்தீஸ்வரன் கோவிலைவிட காஞ்சீபுரத்திலேயே நாடி ஜோதிடம் பார்க்கும் பிரபலங்கள் இருக்கிறார்கள் என்கிற தகவல் நமக்கு கிடைத்தது. உடனே காஞ்சீபுரத்திற்கு பயணித்தோம்.


காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அந்த 3 மாடி கட்டிடம் அமைந்திருந்தது. அந்த நகரின் பிரபல நாடி ஜோதிடர் ஒருவர் அங்கே நாடி பார்த்து வருகிறார்.

நம்முடன் வந்த ஒருவர் ஏற்கனவே அவரிடம் நாடி பார்த்து உள்ளார். சரியான தகவல் வராத காரணத்தால் அவரை மற்றொரு நாளில் வருமாறு கூறியிருக்கிறார். நாடி ஜோதிடர் குறிப்பிட்ட நாளில் நாமும் அவரோடு அங்கே சென்றோம்.

அந்த 3 மாடி கட்டிடத்தின் 3 தளத்திலுமே ஏகப்பட்ட கூட்டம். ஒருவேளை... இடம் மாறி வந்து விட்டோமா என்று நினைத்தபோது, நாடி பாக்கத்தானே வந்திருக்கீங்க... என்று ஒருவர் நம்மிடம் கேட்க, ஆமாம் என்றோம். அவரும் நமக்காக ஒரு டோக்கனை தந்துவிட்டு சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். ஒரு ஓரமாக நானும் உடன் வந்தவரும் அமர்ந்து கொண்டோம்.

நாடி பார்க்க வந்தவர்களை நோட்டமிட்டேன். அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். சில பெண்களும் இருந்தனர். யாருடைய முகத்திலும் பொங்கி வழியும் மகிழ்ச்சி இல்லை. நாடியில் நல்ல பதில் வரவேண்டும் என்கிற அவர்களது உள்ளத் தவிப்பு முகத்திலும் அப்பிக்கிடந்தது. அவர்களில் ஒருசிலருடன் வந்திருந்த குழந்தைகள்தான் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

முதன் முதலாக நாடி பார்க்க வருபவர்களிடம் என்ன கேட்கிறார்கள் என்ற கேள்வியை என்னுடன் வந்தவரிடம் கேட்டேன். அவரும், ஏற்கனவே இங்கே வந்த விஷயத்தை ஆர்வமாகச் சொன்னார்.

நான் பார்க்கும் வேலை நிரந்தரம் ஆகுமா? மும்பையில் என்னை பிரிந்து வசிக்கும் எனது மனைவி மீண்டும் என்னுடன் வாழ சென்னைக்கு வருவாரா? என்பதை அறிந்து கொள்வதற்காக அன்றைக்கு வந்திருந்தேன். நாடி ஜோதிடரிடம் சில நாடிக் கட்டுகள் இருந்தன. என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்டவர் அடுத்த நிமிடமே நாடிக்கட்டு ஒன்றில் இருந்து ஒரு ஓலைச்சுவடியை உருவி படித்தார்.

உங்களது பெயர் வேல் என்று முடியும் என்றார். நான் இல்லை என்றேன். அடுத்ததாக உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றார். நான் திருமணம் ஆகிவிட்டது என்றேன். அடுத்ததாக அவர், உங்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள் என்றார். நான், திருமணம் இப்போதுதான் நடந்தது. குழந்தை இல்லை என்றேன்.

உடனே, ஓலைச்சுவடியை எடுத்த நாடி ஜோதிடர், இன்றைக்கு உங்களுக்கான ஓலைச்சுவடி வரவில்லை என்று கூறி, இன்று வரச் சொன்னார். அன்றைக்கு எனக்கான நாடி கிடைக்காததால் கட்டணத்திற்குரிய பணம் வாங்கவில்லை என்று, அன்று நடந்ததைச் சொன்னார்.

உடன் வந்தவர் சொன்னதைப் பார்த்தால், ஒருவேளை போட்டு வாங்கி பதில் சொல்வது என்கிற பாலிசியை நாடி பார்க்கிறவர்கள் பின்பற்றுகிறார்களோ என்கிற சந்தேகம்தான் நமக்கு வந்தது.

அப்போது நாடி ஜோதிடரின் உதவியாளர் வேகமாக எங்களிடம் வந்து, அடுத்து நீங்கள்தான் நாடி பார்க்கச் செல்ல வேண்டும் என்றார். நாமும் ஆர்வமாக, உடன் வந்தவருடன் நாடி பார்ப்பவரின் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றோம்.

நெற்றி நிறைய விபூதியும், அதன் நடுவே குங்குமமும் பூசிக் கொண்டு ஒரு வெள்ளை தாடிக்காரர் அந்த ஏ.சி. அறையில் கம்பீரமாக இருந்தார். அவர்தான் நாடி ஜோதிடர்.

என்னை தனது குடும்ப நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உடன் வந்தவர் நாடி பார்க்க ஆரம்பித்தார்.

தனது மேஜையில் சில நாடிக் கட்டுகளை எடுத்து வைத்த அந்த நாடி ஜோதிடர், சட்டென்று கண்களை மூடி முனுமுனுத்தார். ஏதோ மந்திரத்தை ஜெபிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. நாம் நாடி ஜோதிடரின் செய்கைகளை உன்னிப்பாக கவனிக்க, உடன் வந்தவர் எதிர்காலம் நல்லபடியாக இருக்கும் என்ற வேண்டுதலோடு பயபக்தியாக அமர்ந்திருந்தார்.

மந்திரத்தை ஜெபித்து முடிந்ததும், நாடிக்கட்டுகளில் இருந்து ஒரு ஓலைச்சுவடியை உருவி எடுத்தார் நாடி பார்ப்பவர். அவர் கேள்வி கேட்க, உடன் வந்தவர் அதற்கான பதிலை கூறினார்.

'உங்களது தந்தையின் பெயர் வேல் என்று முடியும்.'

'ஆமாம். அவரது பெயர் சக்திவேல்.'

'உங்கள் பெயருக்கும், முருகப்பெருமானுக்கும் சம்பந்தம் உண்டு.'

'ஆமாம். எனது பெயர் பாலசுப்பிரமணி.'

'உங்களுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். நீங்கள் நான்காவது நபர்.'

'ஆமாம்.'

'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.'

'ஆமாம்.'

'ஆனால், மனைவியை பிரிந்து வாழ்கிறீர்கள்?'

'ஆமாம்.'

'அப்படியானால் உங்களுக்கான நாடி இதுதான்' என்று சொன்னார் நாடி ஜோதிடர்.

தொடர்ந்து, நாடி பார்க்கும் ஓலைச்சுவடியை வைத்தே நாடி பார்க்க வந்தவருக்கு ஜாதகம் கணித்தார். ராசி, நட்சத்திரம், பிறந்த வருடம் - தேதி எல்லாமே சரியாக இருந்தது. ஒன்றே ஒன்றுதான் இடித்தது. நாடி பார்க்க வந்தவர் பிறந்தது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி. நாடியிலோ சனிக்கிழமை பிறந்ததாக வந்தது.

அது எப்படி என்று நாம் கேட்க, ஜாதக கணிப்பின்படி சூரிய உதயம் தொடங்கி அடுத்த சூரிய உதயம் வரைதான் ஒருநாள். அதனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி என்பது ஜாதகரீதியான கணிப்பின்படி சனிக்கிழமைதான் வரும் என்று விளக்கம் கொடுத்தார் நாடி ஜோதிடர்.

தொடர்ந்து, நம்முடன் நாடி கேட்க வந்தவருக்கு ஒரு பரிகாரத்தைச் சொல்லி, அதை செய்தால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்றார். அவரும் சரி என்று தலையாட்டிவிட்டு, நாடி பார்த்ததற்கு 300 ரூபாய் கட்டணமாக கொடுத்துவிட்டு எழுந்தார்.

- ஆக, இப்படித்தான் நாடி பார்க்கப்படுகிறது.

பொதுவாக நாடி பார்க்கும் ஜோதிடர்கள் பரிகாரத்தையும் கூடவேச் சொல்கிறார்கள். அவர்களில் சிலர், தாங்களே அந்த பரிகாரத்தை செய்வதாகக் கூறி அதற்காக ஒரு தொகையையும் வாங்கி விடுகிறார்கள்.

கடந்த காலத்தை மிகத் துல்லியமாக கூறும் நாடிகள், எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பது இல்லை. அனுமான அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது என்பது நாடி பார்க்க வருபவர்களில் பலரது குற்றச்சாட்டு.

- நெல்லை விவேகநந்தா

Share: