லேடீஸ் ஸ்பெஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லேடீஸ் ஸ்பெஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 அக்டோபர், 2010

பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் சன் பாத்


 இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பெண்கள் எடுக்கும் சன் பாத் என்கிற சூரிய குளியல் நமக்கு செம ஹாட்! அந்த குளியலில் அவர்கள் அணிந்திருக்கும் டூ பீஸ் உடை பார்ப்பவர் கண்களை கூலாக்குவது என்னவோ உண்மைதான்.

இன்னும் சில கடற்கரைகளில் சிங்கிள் பீஸ் உடை மட்டும் அணிந்து கொண்டு, மார்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் சன் பாத் எடுத்து, மற்றவர்களை ரவுசு பண்ணும் இளசுகளையும் காணலாம்.

இப்படி, திறந்தவெளியில் ஓப்பனாக சன் பாத் எடுக்கும் பெண்கள் பற்றி அவர்களது கணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இங்கிலாந்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அடுத்தப் பெண்களைப் பார்த்து சந்தோஷிக்கும் ஆண்கள், தங்கள் மனைவியை அடுத்தவர்கள் ரசிப்பதை விரும்பவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது இந்த ஆய்வு.

ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான ஆண்கள், தங்களது மனைவி திறந்தவெளியில் டாப்லெஸ் ஆக சன் பாத் எடுப்பதை விரும்பவில்லை என்று ஓப்பன் டாக் கொடுத்தனர்.

அதேநேரம், தங்கள் மனைவி அல்லாத பெண்கள் டாப்லெஸ் ஆக சன் பாத் எடுப்பது தங்களுக்கு பிடிக்கும் என்று கூறி வழிந்தது, ஆய்வாளர்களை திடுக்கிட வைத்தது.

விடுமுறை நாட்களில் மனைவியுடன் பீச் பக்கம் சன் பாத் எடுக்க வரும் கணவர்களில் 56 சதவீதம் பேர், தங்கள் மனைவி டாப்லெஸ் ஆக மேலாடையை கழற்றினால், ‘அதெல்லாம் கூடாது... ஜட்டியும், பிராவும் கண்டிப்பாக போட்டுக்கொண்டுதான் சன் பாத் எடுக்க வேண்டும்’ என்று கண்டிஷன் போட்டதாக கருத்து தெரிவித்தனர்.

அதேநேரம், தங்களுக்கு அருகில், மனைவி அல்லாத பெண் மேலாடையை கழற்றினால், அது தங்களுக்கு பிடிக்கும் என்று ஓவராகவே வழிந்தனர்.

சன் பாத் எடுக்கும் தங்கள் மனைவியர் பற்றி ஆண்கள் இப்படி நினைக்க... அந்த பெண்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்று அவர்கள் முன்பு-ம் ஆஜரானார்கள் ஆய்வாளர்கள்.

கணவன்மார்களை அடிக்காத குறையாக எகிறினார்கள் அந்த பெண்கள். அதாவது, ஆய்வில் பங்கேற்ற சுமார் 2500 பெண்களில் 68 சதவீதம்பேர் மேலாடை இன்றி சன் பாத் எடுப்பது தங்களுக்கு பிடிக்கும் என்று மனம் திறந்தனர்.

அவ்வாறு தாங்கள் ஓப்பனாக சன் பாத் எடுக்கும்போது, தங்களை ரசிக்கும் பிற ஆண்களைப் பற்றி கவலை இல்லை என்று அவர்கள் வெளிப்படையாக கூறி, ஆய்வாளர்களை வியக்க வைத்தனர்.

ஆய்வின் முடிவில் மேலாடை இன்றி சன் பாத் எடுப்பது, சம்பந்தப்பட்ட பெண்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

நம்மவர்கள் சன் பாத் எடுப்பது எல்லாம் பெரும்பாலும் சாத்தியம் இல்லாத ஒன்று என்பதால், நாம் அதுபற்றி ரொம்பவும் யோசிக்க வேண்டாம்.
Share:

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

சைவ உணவுகளில் தாய்ப்பால் ரகசியம்

பிறந்த குழந்தைக்கு ஏற்ற உணவு தாய்ப்பால் தான். ஆனால் ஏனோ, இன்றைய தாய்மார்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள். தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை, அழகு கெட்டுப்போய்விடும் என்றெல்லாம் அதற்கு காரணம் சொல்கிறார்கள்.


குழந்தை பெற்ற தாய்மார்கள், தினமும் உண்ணும் உணவில் அத்தியாவசியமான சில பொருட்களை சேர்த்துக்கொண்டாலே போதும். தாய்ப்பால் தாராளமாக சுரக்க ஆரம்பித்துவிடும்.

இதற்கு என்ன செய்யலாம்?

கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் பச்சைக்காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதச்சத்தும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் உள்ளன. இவை, பெண்களின் புரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் உற்பத்தியை பெருக்கி, தாய்ப்பால் அதிகம் சுரக்க வழிவகை செய்கின்றன.

அதிக புரதச்சத்து கொண்ட உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் மற்றும் பால் வகை பொருட்கள், மீன் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பேரீச்சம்பழம், திராட்சை, கேழ்வரகு, அவல், கோதுமை, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

இவற்றுடன், தினமும் 5 முதல் 6 கப் வரையிலான பசும்பால் உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதில் சைவ உணவு வகைகள் தான் முதலிடம் பெறுகின்றன. அதனால், மேற்படி உணவு வகைகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிடலாம்.


Share:

அந்த விஷயத்தில் இவர்கள் கொஞ்சம் 'வீக்'


காண்டம் அணியும் விஷயத்தில் இன்றைய இளைஞர்கள் தடுமாடுகிறார்கள் என்று சொல்கிறது சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்று.

செக்ஸ் மற்றும் அதனால் ஏற்படுகிற பெண் கருத்தரித்தல் குறித்து ஆண்கள், பெண்கள் இடையே இந்த சர்வே நடத்தப்பட்டது. திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள், இளைஞிகள் இதில் பங்கேற்றனர்.

உடலுறவின்போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்? கருத்தடை சாதனம் பயன்படுத்தினீர்களா?

எச்.ஐ.வி. எப்படி தொற்றுகிறது என்று தெரியுமா? என்கிற விழிப்புணர்வு கேள்விகளுடன், அவர்களது திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் அனுபவங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் பற்றியும், அது தொற்றும் விதம் பற்றியும் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், எச்.ஐ.வி. தவிர்த்து பிற பால்வினை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் குறைவாகவே இருந்தது. 31 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களுமே அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தனர். மற்றவர்கள் தெரியாது என்று கைவிரித்துவிட்டனர்.

கருத்தடை சாதனங்கள் பற்றிய கேள்விகளுக்கு ஆர்வமாகவே பதில் அளித்தனர். ஆணுறை மூலம் பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்ளலாம், எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்ற விழிப்புணர்வை 77 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும் பெற்றிருந்தனர். வாய் வழியாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை பற்றிய விஷயத்தில் ஆண்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்விட்டனர். 20 சதவீத ஆண்கள் மட்டுமே அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்றனர். பெண்களில் 24 சதவீதம்பேர் கருத்தடை மாத்திரை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளதாக கூறினர்.

திருமணம் ஆனவர்களிடம், திருமணத்திற்கு முன்னர் இந்த விழிப்புணர்வு பற்றி தெரியுமா? என்று கேட்டபோது தெரியாது என்று கைவிரித்துவிட்டனர். அவர்களில் 22 சதவீத ஆண்களும், 6 சதவீத பெண்களும் செக்ஸ் மற்றும் கருத்தடை தொடர்பான விஷயங்களை கேள்விப்படவே இல்லை என்று அப்பாவியாகச் சொன்னபோது, இந்த காலத்திலும் இப்படி இருக்குதா? என்று மூக்கின் மேல் விரலை வைத்தனர் ஆய்வாளர்கள்.

ஆக, கூட்டிக் கழித்து கணக்குப் போட்ட அவர்கள், இந்திய ஆண்களும், பெண்களும் கருத்தடை சாதனங்கள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு பற்றி தெரியாமலேயே திருமண வாழ்க்கைக்குள் நுழைகின்றனர் என்ற முடிவுக்கு வந்தனர்.

திருமணத்திற்கு முன்னரான செக்ஸ் உறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்தவர்களில் ஆண்கள்தான் மெஜாரிட்டி. 74 சதவீத ஆண்கள் தங்களது காதலியோடு பழகியதாகவும், அவர்களில் நான்கில் ஒரு பகுதியினரே காதலியுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாகவும் வாய் திறந்தனர்.

பெண்களைப் பொறுத்தவரை ஐந்தில் 3 பேர் காதலன்களுடன் காதல் வளர்த்ததாக கூறினர். ஆனால், அவர்களில் 10 சதவீதம் பேரே உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

மேலும், திருமணத்திற்கு முன்பு காதலியுடனோ அல்லது விலை மாதுடனோ அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெண்ணுடனோ உறவு கொண்ட ஆண்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் பாதுகாப்பாற்ற உறவில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அதேபோல், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் விரும்பாமலேயே அந்த உறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஆக, எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது இந்த உறவு. இந்த விஷயத்தில் இன்றைய இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்பதையே மேற்படி ஆய்வு உணர்த்துகிறது.

Share:

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பிரா தரும் பாதுகாப்பு


பெண்களை எடுப்பான தோற்றத்தில் காண்பிப்பது அவர்களது மார்பகங்கள்தான். அதனால், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் எல்லா பெண்களுமே தங்களது மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

சிலர், தங்களது மார்பகத்தை பெரியதாக காண்பிக்க விசேஷ பிராக்களை அணிகிறார்கள். போதுமான மார்பக வளர்ச்சி உள்ள சில பெண்கள், எப் டி.வி.யில் கேட் வாக் வரும் பல மாடல்களைப்போல் பிராவே அணிவதில்லை.

இப்படி பிரா அணிவதை தவிர்ப்பது ஆபத்தில் கொண்டுபோய்விடும் என்று எச்சரிக்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு.

மார்பக வளர்ச்சி அதிகம் காணப்படும் டீன் ஏஜில் (13 முதல் 19 வயது வரை) மார்பகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது இந்த பிரா தானாம். அந்த காலக்கட்டத்தில் பிரா அணிவதை தவிர்த்தால் மார்பகங்களில் வடிவம் மாறிவிடும் என்றும், மேலும் அது தொய்வடைந்து விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதனால் டீன் ஏஜ் பெண்களே... பிரா அணிவதை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடாதீர்கள். அதுவும், சரியான சைஸ் பிராவாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Share:

எடுப்பான முன்னழகு வேண்டுமா?

சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின்பேரில் டயட்டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, அவர் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவரது உடல் மீண்டும் ஏறிவிடும்.

இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் அவர்கள்.

இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

* மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான ஷேப்பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.
* முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து வெந்நீரில் குளித்து வந்தால் மார்பகத் தசைகள் தொய்வடைந்து விடும். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். அதேநேரம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெந்நீரில் குளிக்கும்போது மார்பகத்தில் வெந்நீர் படாமல் குளிக்கலாம்.

Share:

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

முதல் நடிகைகள் யார்?


மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவளை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.

இதை புரிந்துகொண்ட பெண், ஆண்கள் எதிரில் எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி நடிக்க ஆரம்பித்தாள். சீனப் பெண்கள் ஒருபடி மேலேப்போய் தங்களுக்கு எழுதப் படிக்கக்கூட தெரியாது என்பதுபோல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல; பல நூற்றாண்டுகளாகவே அவ்வாறு நடித்தார்களாம். அப்போது, அவர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்த எழுத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆண்களுக்கு தெரியாமல் பெண்களே உருவாக்கி கற்ற அந்த எழுத்து வடிவத்தை நுசு என்கிறார்கள். நுசு என்றால் சீன மொழியில் பெண்ணின் எழுத்து என்று அர்த்தமாம்.
Share:

புதன், 14 ஏப்ரல், 2010

பெண்ணை பார்க்கும்போது கிளுகிளுப்பு ஏன்?


ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டிரோன். இதேபோல், பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன். உண்மையில், ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்ரோஸ்டிரோன் உருவானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணின் விந்தகப் பகுதி.

இந்த விந்தகத் திசு டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த திசுவை கொண்டவனை ஆணாக்கி விடுகிறது. அதாவது, ஒரு ஆணை உயரமாக, புஷ்டியாக, வீரம் உள்ளவனாக, கொஞ்சம் வழுக்கைத்தலை கொண்டவனாக, அதிக தசை வலிமை கொண்டவனாக, உடல் தோலில் ரோமங்களை கொண்டவனாக மாற்றுகிறது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது அந்த பெண் கொழுக்மொழுக் உடலை பெறுகிறாள். அவளது மார்பு பெரியதாகும், இடை சிறிதாக இருக்கும் அதேநேரத்தில் இடுப்பு அகலமாகிறது.

இந்த தோற்றத்தில் ஒரு பெண்ணை ஆண் ஆனவன் பார்க்கும்போது கிரங்கி, கிளுகிளுப்பு கொள்கிறான்.

மேலும், இதே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் ஒரு பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எந்த நோய்க்கிருமியும் அவளை நெருங்காமல் இருக்க ஒரு பாதுகாப்பு படலத்தை உடலில் ஏற்படுத்துகிறது.
அதனால் பெண்கள் இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும்.

Share:

சனி, 20 பிப்ரவரி, 2010

இனி நீங்களும் அழகி தான்...!


அழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது.
தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம். முடியை கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக்கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.

கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ‘ஜொள்’ளுபவர்களின் எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாக தெரிவீர்கள்.

ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக்கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவதுபோல் ஆடையை தேர்வு செய்யலாம்.

இப்படி ஆடையை தேர்வு செய்யும்போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.

குட்டையாகவும், சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.

கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது.
மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக்கூடாது.

அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம். இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பதுபோன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.

குண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக்கூடாது. அப்படி அணிந்தால் பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள்.

ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள் அல்லது மணி சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக்காட்டும். ஆடையும் அழகாக இருக்கும்.

ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்துவிட வேண்டும்.
பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.

மொத்தத்தில், என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிக்கான ஆடையை தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் செலக்ஷன் சரியாக இருந்தால், இனி நீங்களும் அழகி தான்...!
Share:

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாய்ப்பாலை சேமிக்கலாமா?

இன்றைய பெண்களில் பலர் வேலைக்கு செல்கிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும்கூட அவர்கள் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.

அவ்வாறு வேலைக்கு செல்லும்போது குழந்தையை இன்னொருவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
வேலைக்கு சென்று 8-10 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், குழந்தைக்கு அவசரம் அவசரமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.

இதற்கிடையில், தொடர்ந்து 8-10 மணி நேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால், அவர்களது மார்பில் பால் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் மார்பில் வலி எடுத்து அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும், தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இதுபோன்ற சிக்கலில் உள்ள வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை மிகவும் சுத்தமான பாத்திரத்தில் பிழிந்தெடுத்து சேகரித்து, அதை இறுக்கமாக மூடி விடுங்கள். பின்னர் அதை, பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் தாய்ப்பாலை  6-8 மணி நேரம் வரையே வைத்து பாதுகாப்பதுதான் உகந்தது. பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தினுள் தாய்ப்பால் கொண்ட பாத்திரத்தை வைக்கலாம்.

வீட்டில் குழந்தையை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்த தாய்ப்பாலை சுத்தமான கரண்டி மூலம் குழந்தைக்கு பசி எடுக்கும்போது ஊட்டிவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

Share:

தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு?

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது.

பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், தேவையான நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.
அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும் ஏற்படலாம்.

உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான்.
மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.
Share:

தாய்ப்பால் மகிமை

பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக டாக்டர்கள் பரிந்துரை செய்வது அதன் தாய்ப்பாலைத்தான். அதில் இல்லாத சத்துக்களே கிடையாது.

தாயிடம் இருந்து முதன் முதலாக கிடைக்கும் பாலை சீம்பால் என்கிறார்கள். பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், எளிதில் அந்த குழந்தையை எந்த நோயும் தாக்காது.

நீண்ட நாட்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று ஆராய்ச்சிகளே நிரூபித்துள்ளன.

இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும்போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது. இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது.
இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால், இன்றைய அவசர உலகில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே நேரம் இல்லை. அதனால் விரைவிலேயே புட்டிப்பாலுக்கு தாவி விடுகிறார்கள். அத்துடன், தாய்ப்பால் சுரப்பும் அவர்களிடம் குறைந்துபோய் விடுகிறது.

அவர்கள், மனதை அமைதியாக வைத்திருந்தால் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் சுரப்பில் பிரச்சினையே இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாய்ப்பால் சீராக சுரக்க வேண்டும் என்றால், அந்த தாய்க்கு முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும்.

அதன்பின், குழந்தையானது மார்புக் காம்பை சுவைக்கும்போது புரோலாக்டின், ஆக்ஸிடோஸின் ஆகிய இரு ஹார்மோன்கள் அவர்களது உடலில் சுரக்கின்றன. புரோலாக்டின் பால் சுரக்க உதவுகிறது. இதேபோல், ஆக்ஸிடோஸின் பால் சுரப்பித் திசுக்களில் இருந்து பாலை வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது.

பிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதை தவறாக எண்ணக்கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்ட தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர்போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும்.
வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற அவசரம் - பதட்டம், மனநெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே... உங்கள் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள்.

மேலும், ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ் :

1. தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

2. குழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பி பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பை தனது வாயால் சரியாக பற்றி இருக்கிறதா என்று சரிப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பி பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.

4. தாய்ப்பால் குடித்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக்கூடாது.

5. குழந்தையை படுக்க வைக்கும்போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக்கொள்ள வேண்டும்.

Share:

செக்ஸ் உணர்வுக்கு முன்னழகு அவசியமா?

எடுப்பான மார்பகங்கள்தான் ஒரு பெண்ணுக்கு அழகு-கவர்ச்சி என்ற எண்ணம் பலரிடம் ஆழமாக பதிந்துள்ளது. எடுப்பான மார்பகம் அமைந்தால்தான் பாலுறவில் கிளர்ச்சி-திருப்தி அடைய முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

அதன்காரணமாக, எல்லாப் பெண்களுமே தங்களது மார்பகம் அளவில் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால், இந்த ஆசை எல்லாப் பெண்களுக்கும் நிறைவேறி விடுவதில்லை. உண்ணக்கூடிய சத்தான உணவுகள், பரம்பரைத்தன்மை காரணமாக சில பெண்களுக்கு எடுப்பான பெரிய மார்பகம் அமைந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் அமைந்து விடுகிறது. மேலும் சிலருக்கோ சிறிய அளவிலேயே அமைகிறது.

பெரிய மார்பகம் கொண்ட பெண்கள், தாங்கள்தான் முழுமையான பெண்கள் என்று எண்ண, சிறிய மார்பகம் கொண்டவர்களோ தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களது உணர்வுகளை தாங்களே நசுக்கிக் கொள்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, மார்பகத்தின் அளவிற்கும், பாலுறவுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

எடுப்பான மார்பகங்கள்தான் பெண்மைக்கு அடையாளம் என்று சித்தரிப்பது தவறான ஒன்று. மார்பக காம்பின் நுனிப்பகுதியில் உணர்வை அதிகப்படுத்தும் உணர்வு நரம்புகள் பல இணைந்துள்ளன. இவைதான் ஒரு பெண்ணின் உணர்ச்சியை அதிகரிக்குமே தவிர, மார்பகங்களின் அளவுகள் அல்ல என்று கூறும் மருத்துவர்கள், பாலுறவின்போது மார்பகங்களை முரட்டுத்தனமாக அழுத்தாமல், அதன் நுனிப்பகுதியை வருடுவதுதான் சிறந்த தூண்டலாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உங்களுக்கு எடுப்பான முன்னழகு வேண்டும் என்றால், உங்கள் உணவு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே போதும்.

சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின்பேரில் டயட்டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்-போது, அவர் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவரது உடல் மீண்டும் ஏறிவிடும்.
இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்துவிடும்.

இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

1. மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான ஷேப்பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தின-மும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.

2. உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.

3. முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து வெந்நீரில் குளித்து வந்தால் மார்பகத் தசைகள் தொய்வடைந்து விடும். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். அதேநேரம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெந்நீரில் குளிக்கும்போது மார்பகத்தில் வெந்நீர் படாமல் குளிக்கலாம்.

- இப்படிச் செய்து வந்தால் உங்கள் முன்னழகும் மற்றவர்களை மயங்கவும், கிறங்கவும் வைக்கும்.
Share:

பிரா அணியும் பெண்ணே...

13 முதல் 19 வரை உள்ள எண்களை ஆங்கிலத்தில் அழைக்கும்போது கடைசி இரு எழுத்துக்கள் டீன் என்று முடியும். அதனல் அந்த வயதினரை டீன்-ஏஜ் வயதினர் என்று அழைக்கிறோம்.

இந்த வயதில் உள்ள பெண்கள், தங்கள் முன்னழகுக்கு - அதாவது மார்பக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விதவிதமான பிராவை தேர்வு செய்து தங்களை அழகு பார்ப்பதோடு, தங்கள் மார்பகத்தை எடுப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், இளம்பெண்களில் சிலருக்கு பிரா அணிவது எப்படி என்பதே தெரியவில்லை. தங்கள் மார்பக அளவுக்கு சரியான பிராவை அணியாமல், இறுக்கிப் பிடிக்கும் சிறிய பிராவையோ அல்லது தொள தொளவென்று இருக்கும் பெரிய சைஸ் பிராவையோ அணிந்து, தங்கள் அழகை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.

சரி... அப்படியென்றால், எப்படி பிராவை தேர்வு செய்து அணிவது?

சில டீன்-ஏஜ் பெண்கள், தங்கள் மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பதற்காக இறுக்கமான பிராவை தேர்வு செய்து அணிகிறார்கள். இது தவறு. இந்த டீன்-ஏஜில் மார்பகம் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், அதன் "ஷேப்" மாறிக்கொண்டே இருக்கும்.

சைஸ் குறைவான பிராவை அணிந்தால், அதன் கப் பகுதிக்குள் மார்பகம் அடங்காமல் வெளியில் பிதுங்கிக் கொண்டிருக்கும். தொடர்ந்து, அந்த "சைஸ்" குறைவான பிராவையே பயன்படுத்தி வந்தால் அவர்களது மார்பகம் பிதுங்கியது போன்ற நிலைக்கு மாறிவிடும். இதையெல்லாம், தடுக்க மார்பக வளர்ச்சிக்கு ஏற்ப பிராவின் அளவை அதிகரித்துக் கொண்டே வரவேண்டும்.

கனமான மார்பகம் கொண்டவர்களுக்கு, மார்பகம் சீக்கிரமே தொய்ந்து போக வாய்ப்புகள் அதிகம் உண்டு. அவர்கள் சரியான சைஸ் பிராவை தேர்வு செய்து அணியாவிட்டால் இந்த பிரச்சினை இன்னும் அதிகமாகிவிடும். அவர்களது கவர்ச்சியும் போய்விடும்.

இவர்கள் தேர்வு செய்யும் பிரா, கனமான மார்பகங்களை சற்று தூக்கித் தரும்படியும், மார்பகத்திற்குள் சரியாக பொருந்தும்படியும் இருக்க வேண்டும். அத்துடன், கொஞ்சம் இறுக்கமாகவும் இருக்க வேண்டும். மேலும், இவர்கள் இரவில் பிராவை கழற்றுவதை தவிர்த்துவிட வேண்டும். மீறி கழற்றி ப்ரியாக இருந்து வந்தால் மார்பகம் விரைவிலேயே தொய்ந்துபோய் விடும்.

மற்ற பெண்கள் இரவில் தாராளமாக பிரா அணிந்து கொள்ளலாம். அதேநேரம், அணியும் பிராவானது இறுக்கமாக இல்லாமல் இருப்பது நல்லது. இவர்களுக்கு, இரவில் பிரா அணிய விருப்பம் இல்லை என்றால் அதை தாராளமாக கழற்றி வைத்துவிட்டு படுக்கலாம். அதனால் எந்த ப்ராப்ளமும் இல்லை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். "எப் டி.வி."யில் "கேட் வாக்" வரும் பல மாடல்களைப்போல் பிராவே அணிவதில்லை.

இப்படி பிரா அணிவதை தவிர்ப்பது ஆபத்தில் கொண்டுபோய்விடும். அவர்கள் தங்கள் மார்பக அளவுக்கு ஏற்ப சரியான பிராவை தேர்வு செய்து அணிவது அவசியம்.
Share:

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சுகப்பிரசவத்திற்கு தியானம் செய்யுங்கள்

தியானத்தின் அவசியம் இப்போது உலகம் முழுவதும் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனப்பக்குவம் பெற்ற எல்லோருமே தியானம் செய்யலாம். கர்ப்பிணிகள் தியானம் செய்தால், குழந்தை பிறப்பு பற்றிய பயம் விலகும். பதற்றம் குறையும. மனநெருக்கடி விட்டுவிலகும். கத்தியின்றி, அதனால் ஏற்படும் ரத்தமின்றி சுகப்பிரசவம் நிகழும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெளிநாடுகளில், பிரசவிக்க தயாராக இருக்கும் பெண்களை தண்ணீருக்குள் அமரச் செய்து தியானச் சிகிச்சை அளிக்கிறார்கள். இதை மெடிடேசன் தெரபி என்கிறார்கள்.

இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் கர்ப்பிணிப் பெண்ணை, தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிக்குள் சாய்ந்து படுக்குமாறு செய்கிறார்கள். தொடர்ந்து, அந்த பெண்ணை, கண்ணை மூடும்படி கூறிவிட்டு, அவருக்கு லேசாக மசாஜ் செய்கிறார்கள்.

இதுபற்றி அந்த டாக்டர்கள் கூறும்போது, "இந்த மெடிடேசன் தெரபியால் கர்ப்பிணி பெண்களின், பிரசவம் பற்றிய பயம் விலகுகிறது. அந்த பிரசவத்தை சுகமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுகிறார்கள். மேலும், அதுபற்றிய டென்ஷனும் விலகிவிடுகிறது. அதனால், அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்புகள் மிகவும் அதிகரிக்கிறது. ஏன்... 100 சதவீதம் சுகப்பிரசவம் நிகழும் என்றுகூட கூறலாம்" என்கின்றனர்.

நம் நாட்டில் இந்த அளவுக்கு கர்ப்பிணிப் பெண்களுக்கான தியானம் பிரபலம் ஆகாவிட்டாலும்கூட, சம்பந்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே தியானம் செய்யலாம். தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. அந்த வாய்ப்பு இருந்தால், அதை பயன்படுத்திக் கொள்வதிலும் தவறில்லை.

மன அமைதி தரும் இடமாக இருந்தாலே, அந்த இடத்தை தியானம் செய்ய தேர்வு செய்யலாம். ஏன்... கடற்கரையில் அமர்ந்து, இயற்கையான சுத்தமான காற்றை சுவாசித்தபடி தியானம் செய்வதுகூட மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.

அதுசரி... தியானம் செய்வது எப்படி இன்று கேட்கிறீர்களா?

அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே கிளிக் செய்யுங்கள்....

தியானம் செய்யுங்கள்... சூப்பர் ஸ்டார் ஆகுங்கள்..

Share:

தியானம் செய்வது எப்படி?


அந்த மலைப் பகுதியில் இயற்கையின் செழிப்பு நிறையவே காணப்பட்டது. அத்தனை மரம், செடி, கொடிகளும் பசுமையாய் மலர்ந்திருந்தன.
நான்கு கால் விலங்குகளின் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட அந்த இடத்தில், சின்னச் சின்ன பறவைகள் நிறையவே நிறைந்திருந்தன. அவற்றின் கீச்சொலிகளே அதை உறுதிப்படுத்தின.

இப்படிப்பட்ட அந்த கானகத்தில், மலையடிவாரத்தின் ஒரு பகுதியில் இருந்தது அந்த குகை. அந்த இடத்திற்கு வந்த 3 ஞானிகள் அதை தியானம் செய்யும் இடத்திற்காக தேர்ந்தெடுத்தனர்.

குகையின் உள்ளே தகுதியான இடத்தை தேர்வு செய்து மூன்று பேரும் அமர்ந்தனர். கண்களை மூடி தியானத்தில் மூழ்கினர். உணவை, தூக்கத்தை மறந்தனர்.

குகையின் வெளிப்பகுதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டது. அந்த குதிரை ஒரு மனிதனின் பிடியில் இருப்பது 3 ஞானிகளுக்கும் தெரிந்தது.
அடுத்த ஓரிரு நொடிகளில் அந்த குதிரையோடு மனிதன் குகையை வேகமாக கடந்து சென்றான்.

மூன்று ஞானிகளும் எந்தவித சலனமும் இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

12 வருடங்கள் கழிந்தது...

3 ஞானிகளில் ஒருவர் சொன்னார்; "அந்த குதிரை வெள்ளை நிறம்" என்று நினைக்கிறேன்.

அதன்பிறகு அங்கே முழு அமைதி. பதிலுக்கு மற்ற இரு துறவிகள் வாயைத் திறக்கவில்லை.

மீண்டும் 12 வருடங்கள் கழிந்தது...

இரண்டாவது இருந்த ஞானி சொன்னார்; "இல்லை... இல்லை... அந்த குதிரை வெள்ளை நிறம் கொண்டது இல்லை. அது கருப்பு குதிரை!"

மீண்டும் அங்கே அமைதி. மற்ற துறவிகள் வாயைத் திறக்கவில்லை.

மறுபடியும் 12 வருடங்கள் வேகமாக ஓடின.

அப்போது மூன்றாவது ஞானி சொன்னார்; "இப்படி நீங்கள் இடைவிடாமல் பேசினீர்கள் என்றால் எப்படி தியானம் செய்ய முயும்? நான் இங்கே இருக்கவா அல்லது போய்விடவாவா?”

- கண்களை மூடினால் மாத்திரம் தியானம் வந்துவிடுவதில்லை. மனம் அமைதியாக இருந்தால்தான் தியானம் வரும் என்பதை அழகாக கூறுகிறது இந்த கதை.

மேற்படி சம்பவம் உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று நாம் கருதினாலும்கூட, மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் நம்மை மறக்கலாம்; மணிக்கணக்கில் பேரானந்தம் என்னும் இன்ப வெள்ளத்தில் மிதந்து திளைக்கலாம் என்பதை நாம் உணரலாம்.

வேதாத்திரி மகரிஷிகூட தியானம் எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி அழகாகச் சொல்கிறார்...

“தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு, ‘என்ன... எனக்கு இன்னும் தியானம் வரவில்லை..? தியானம் எப்படி இருக்கும்?‘ என்று தொடர்ந்து மனம் எண்ணிக் கொண்டிருந்தால் தியானம் வராது. தியானம் செய்ய அமரும்போதே, ‘நான் அடுத்த 10 அல்லது 20 நிமிடங்களுக்கு எதைப் பற்றியும் எண்ண மாட்டேன்‘ என்று மனதில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப்பட்ட எண்ணங்களை அவிழ்த்துவிடும். அப்போது ‘நாம் தியானத்தில் இருக்கிறோம்‘ என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்குதான் நமது விழிப்புணர்வு உதவுகிறது.

விழிப்புணர்வின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்களுக்கு எண்ணங்களை அவற்றுடன் ஒட்டாமல் விலகி நின்று பார்ப்பது எளிதாகிறது. அப்படி பார்க்க, பார்க்க... எண்ணங்கள் மெதுவாக தங்கள் வலுவை இழக்கின்றன. எண்ணங்கள் மெதுவாக அடங்குகின்றன. அப்படி எண்ணங்கள் அற்ற நிலையில் தான் தியானத் தன்மை உண்டாகிறது” என்கிறார் மகரிஷி.
ஆனால், நம்மில் பலருக்கு தியானம் செய்யவே நேரமில்லை.

பணம்... பணம்... பணம் மாத்திரமே என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், மனித சமுதாயம் அந்த பணத்தை தேடித்தான் பயணிக்கிறது. அதனால்தான், காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும்வரை டென்ஷன்... டென்ஷன்... என்று தவிக்கிறார்கள்.

அப்படி, வாழ்க்கையே டென்ஷனாகி, மன அமைதிக்கான வழி தெரியாதவர்கள் எங்கே அமைதி என்று கோவில் கோவிலாக அழைகிறார்கள். அங்கேயும் அமைதி கிடைக்கவில்லை என்றால், தியானம் செய்தால் அமைதி வந்துவிடும் என்று சொல்கிறார்களே... என்று கேட்டு, தியானம் கற்றுக்கொடுக்கும் இடங்களை நோக்கி படையெடுக்கிறார்கள்.

அதன்விளைவு... பணம் கொடுதத்து தியானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை.

மனதை ஒருமுகப்படுத்தினாலே தியானத்தை எளிதில் கற்றுக் கொள்ள லாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் மிகவும் அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தமான - மன அமைதியைத் தரக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும். பூஜையறையாகக்கூட இருக்கலாம்.

2. நீங்கள் அணிந்திருக்கும் ஆடையும் தியானத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. அணிந்திருக்கும் ஆடையானது மிகவும் இறுக்கமானதாக - குறிப்பாக ஜீன்ஸ் பேண்ட் - இருக்கக்கூடாது. சற்று தளர்வான ஆடையே இதற்கு பொருந்தும்.

3. தியானம் செய்வதற்கு ஏற்ற நேரத்தை தேர்வு செய்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரம் காலைப் பொழுதாகவோ அல்லது மாலை நேரமாகவோ இருப்பது மிகவும் நல்லது. அந்த நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்துவது எளிது.

4. அடுத்ததாக தியானம் செய்ய தேர்வு செய்த இடத்தில் அமர்ந்து விடுங்கள். தரையில் மென்மையான துணி விரிப்பை விரித்து, அதன்மீது அமருங்கள். மார்பை நிமிர்த்துக் கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு சவுகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

5. தொடர்ந்து, கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் உங்களது இஷ்ட தெய்வத்தை அல்லது இஷ்ட உருவத்தை நிறுத்துங்கள். அந்த உருவத்தையே உங்கள் மனக் கண்களால் உற்றுப்பாருங்கள். அந்த உருவத்தின் மீது மட்டும்தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தெரிந்தாலும், போகப்போக சரியாகிவிடும் என்பதால் பதற்றப்படாமல் இருங்கள். நேரம் செல்ல செல்ல அந்த உருவத்திற்குள்ளேயே தொலைந்து போங்கள். அதாவது, அந்த உருவத்திற்குள் நீங்கள் கலந்துவிட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அருகில் என்ன நடக்கிறது என்பதை கேட்கவோ, கவனிக்கவோ இடம் தர வேண்டாம்.

6. இப்போது நீங்கள் அந்த உருவத்திற்குள் தொலைந்து போய்விட்டீர்கள், அதாவது ஒன்றிப்போய்விட்டீர்கள். அப்போது, உங்களை அறியாமலேயே ஒரு பரவச நிலை ஏற்படும். மகான்கள் இதை சமாதி நிலை என்கிறார்கள். உதாரணம் : இரவில் உறங்கும்போது நம் மனம் எங்கேயெல்லாமோ சென்றுவிட்டு வருகிறதே, அதுபோன்ற உணர்வு நிலை இது. உங்கள் உடல் முழுவதும் ஆனந்த வெள்ளம் - பரவசம் பரவி ஓடும். எங்கோ பறப்பதுபோல் உணர்வீர்கள்.

7. உங்கள் மனம் அந்த பரவத்திலேயே தொடர்ந்து லயித்துப்போனால், நீங்கள் தியானம் செய்யும் அளவு அதிகமாகும். ஒரு மணி நேரத்தை கடந்தும்கூட தியானம் செய்து கொண்டிருப்பீர்கள். நேரம் சென்றதே உங்களுக்குத் தெரியாது.

8. குறிப்பிட்ட கால அளவுக்குள் உங்கள் தியானத்தை நிறைவு செய்யுங்கள். இப்போதும் உங்களுக்குள் அந்த பரவச உணர்வு இருப்பதை உணர்வீர்கள். சுறுசுறுப்பு அதிகமாக காணப்படும். சினிமா படங்களில் நடிகை சிநேகா சிரிப்பாங்களே, அதுபோன்ற புன்னகை உங்கள் முகத்தில் தவழும்.

9. அப்புறம் என்ன...? நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியில் முடியும்.

10. தியானத்தை ஒருவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் அவருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. எதையும் எதிர்கொள்ளும் திறன் வளர்கிறது. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுகிறது. இவை எல்லாம் கிடைத்துவிட்டால், வெற்றி மீது வெற்றி வந்து குவியத்தானே செய்யும்?

பின்குறிப்பு : மனப்பக்குவம் பெற்ற எல்லோருமே தியானம் செய்யலாம். கர்ப்பிணிகள் தியானம் செய்தால், குழந்தை பிறப்பு பற்றிய பயம் விலகும், பதற்றம் குறையும், மனநெருக்கடி விட்டுவிலகும், கத்தியின்றி - அதனால் ஏற்படும் ரத்தமின்றி சுகப்பிரசவம் நிகழும்.


அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே கிளிக் செய்யுங்கள்....

சுகப்பிரசவத்திற்கு தியானம் செய்யுங்கள்

Share: