ஆராய்ச்சி முடிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆராய்ச்சி முடிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மே, 2011

கண்டதும் காதல் நிஜமா?

இப்போதெல்லாம் நம் இளைஞர் - இளைஞிகளிடம் கண்டதும் பச்செக்கென்று காதல் ஒட்டிக்கொண்டு விடுகிறது. பீச்சிலோ, பஸ் ஸ்டாப்பிலோ ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டால் அவள் பின்னாடியே போய்விடும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன்... நம் தமிழ் காதல் சினிமாக்களும் இத்தகைய ஒரு படிப்பனையே பெரும்பாலும் ஏற்படுத்துகின்றன.


ஆராய்ச்சி
யாளர்களிடம், கண்டதும் காதல் கொள்வது என்பது உண்மையா? என்று கேட்டால், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அப்படியென்றால், அழகான ஒரு இளம்பெண்ணை கண்ட மாத்திரத்தில் ஒருவித கிறக்கம் ஒரு இளைஞனிடம் ஏற்படுகிறதே... அதன்பெயர் காதல் இல்லையா? என்று விரிவாக கேட்டால், அதுபற்றி பெரிய விளக்கமே கொடுக்கிறார்கள்.


ஒரு இளம் ஆண் அழகான இளம்பெண்ணை பார்க்கும்போதோ அல்லது ஒரு அழகான இளம்பெண் அழகான வாலிபன் ஒருவனைக் காணும்போதோ அவர்களது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று உணர்கிறார்கள். பெக் அடிக்காமலேயே ஒருவித கிக் நிலைக்கு ஆளாகிறார்கள்.


நிச்சயமாக இதற்கு பெயர் காதலே இல்லை. காமம்தான். ஆம்... தன் மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறையாகப் பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி காம மட்டுமே என்கிறார் லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர் டான்மாய் சர்மா.


இவர், கண்டதும் காதல் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்துள்ளார். 18 முதல் 50 வயது வரையிலான 80 பேர் இவரது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் ஆண், பெண்களை அருகருகே நெருக்கமாக அமர வைத்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர்களிடம் பலவித உணர்ச்சிகள் கொந்தளித்தன.


தனக்கு முன்னால் லோ நெக்கில் அமர்ந்திருந்த இளம்பெண்களைப் பார்த்த ஆண்களுக்கு அந்த பீலிங்கின் வேகம் தாறுமாறாக இருந்தது. ஒருசிலர் எதிர் பாலினரை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அசையாமல் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் நெளிந்தனர்.

சிறிதுநேரத்திற்கு பிறகு எதிர்பாலினரை பார்க்கும்போது எத்தகைய உணர்ச்சிகளுக்கு ஆளானார்கள் என்பது பற்றிய விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.


அப்போது பெரும்பாலானவர்கள், தனது அருகே இருந்த எதிர்பாலினர் மீது காமம் கொண்டதாக தெரிவித்தனர். ஒருசிலர், அடுத்த நிமிடமே தனக்கு எதிராக இருந்த எதிர்பாலினருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மோகம் ஏற்பட்டதாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டனர்.


தொடர்ந்து, டாக்டர் டான்மாய் சர்மாவின் ஆய்வு வேறு மாதிரியாக இருந்தது.     மூலம் ஆய்வு செய்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.


ஆய்வின் முடிவு குறித்து அவர் கூறியதாவது :


 இந்த ஆராய்ச்சி மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும், பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் காம  உணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமான அளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இந்த உணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்று தெரிவித்தார்.

Share:

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஆண் குழந்தை வேண்டுமா?


ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும்.

பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 

Share:

வியாழன், 7 அக்டோபர், 2010

பெண்களின் முத்த ஆர்வம்!



அன்பின் அடையாளம் முத்தம் - இதுதான் பரவலான கருத்து. முன்பெல்லாம் முத்தம் என்பது ஏடாகூடா ஒரு வார்த்தையாகவே இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்!

முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு ஆராய்ச்சியிலும் பல கிளுகிளுப்பான முடிவுகள் கிடைக்கும். அந்தவகையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :

1. பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான வாழ்க்கையில் முத்தத்தையும் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.

2. தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.

3. தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கும் அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமே முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

4. முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாம் வெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.


5. ஆண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாகவே முத்தத்தை கருதுகிறார்களாம்.


6. ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.

7. முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே... என்று ஒரு புறம் இருக்க... இந்த முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் பெண்கள்தான் டாப்.

8. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் ஆண்களுக்கு சலித்துப் போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.

9. செக்ஸ் உறவின்போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக்கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.

10. செக்ஸ் உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை அவள் பெறுகிறாளாம்.
- இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு.

ஆனா, நாம எப்படி?
Share: