வெள்ளி, 4 மார்ச், 2011

அய்யா வைகுண்டர் வரலாறு இப்போது புத்தகமாக...

 உங்கள் நெல்லை விவேகநந்தா எழுதிய அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு இப்போது நூலாக வெளி வந்துவிட்டது.

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றுடன், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அய்யா வழி மார்க்கத்தில் பயன்பாட்டில் உள்ள உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, கல்யாண வாழ்த்து, வாழப்படிப்பு போன்ற பக்திப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

வானதி பதிப்பகம் இந்த நூலை வெளியி
ட்டுள்ளது. நூலின் விலை ரூ.100. மொத்த பக்கங்கள் 233.

உங்களுக்கும் அய்யா வைகுண்டர் வரலாற்று நூல் வேண்டுமா?

கீழ்கண்ட
வானதி பதிப்பக முகவரி அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாங்கி படித்து, அய்யாவின் அருளைப் பெறுங்கள்.







முகவரி : 23, தீனதயாளு தெரு


தியாகராஜா நகர்


சென்னை - 600017


இந்தியா





தொலைபேசி இலக்கம் :  044 - 24342810





உரிமையாளர் : திருநாவுக்கரசு




இணையதளம் : www.vanathi.in





மின்-அஞ்சல் : vanathipathippagam@vsnl.net




*****

னது, "அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்" என்ற இந்த நூலுக்கு தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.எஸ்.ஆர்.ஜெயதுரை அவர்கள் வழங்கிய வாழ்த்துரை இங்கே...

வாழ்த்துரை

ய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும் என்ற இந்த நூலை வெளியிடும் தம்பி நெல்லை விவேகநந்தா, அய்யா வைகுண்டரின் அவதார நோக்கம் மற்றும் அவர் நிகழ்த்திய - நிகழ்த்திக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.

அய்யா வைகுண்டர் மனித உருவில் வாழ்ந்தபோதும் சரி, இப்போதும் சரி, அவரது அற்புதங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. திருமணம் ஆகாதவர்கள் அய்யாவின் அருளால் திருமணமாகியுள்ளனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அந்த பாக்கியம் பெற்றுள்ளனர். 
இதுமட்டுமின்றி, எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் தீராத நோய்களால் தவிப்போர், அந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்களை ஆதாரத்தோடு, அய்யா நிகழ்த்திய அற்புதங்களாக எழுதியுள்ளார் தம்பி நெல்லை விவேகநந்தா.

மேலும், 

தாழ்த்தப்பட்ட மக்களில் பெண்கள்... தோள் சீலை அணியக்கூடாது, பொதுக்கிணற்றில் குடிநீர் எடுக்கக்கூடாது, ஆண்கள்... மாடி வீடு கட்டக்கூடாது, துண்டை இடுப்பில்தான் கட்ட வேண்டும், மேல் ஜாதியினரிடம் பேசும்போது 36 அடி, 60 அடி என ஜாதியைப் பொறுத்து தூரமாக நின்று, தலை குனிந்து, வாய் பொத்தி பேச வேண்டும் - இப்படி அடிமைத்தனத்தோடு வாழ்ந்த மக்களுக்காக போராடி, அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்டவர் அய்யா வைகுண்டர். 

இன்றைக்கு அந்தப் பணியை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் செம்மையாக செய்து கொண்டிருக்கிறார்.

இன்றைய சில இந்து மத வழிபாட்டு முறைகளில் உயிரினங்களை பலியிடுதல் வழக்கத்தில் உள்ளது. ஆனால், அய்யா வழியில் இவற்றுக்கு இடம் கிடையாது. தேங்காய் உடைப்பதும், எலுமிச்சம்பழத்தை வெட்டுவதும் கூட அங்கே பலியிடுவதற்கு சமம் என்று கருதப்படுவதால், தேங்காயை உடைப்பதில்லை; எலுமிச்சம்பழத்தை வெட்டுவதில்லை. இந்த வழிபாட்டு முறைகளை வேறு எந்த மார்க்கத்திலும் காண முடியாது என்பதை அழகாக விவரிக்கிறது இந்த நூல்.

அய்யா வழி மக்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கு அய்யாவிடம் மன்னிப்பு வேண்டுவதும், தங்களது வியாபாரம் செழிக்க, நோய்&நொடிகள் இன்றி நல்வாழ்வு வாழ இறைஞ்சுவதும் வழக்கத்தில் உள்ளது. இதுபற்றியும் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.

இளம் வயதில் அய்யா வைகுண்டரின் வரலாற்றை வெளியிடும் தம்பி நெல்லை விவேகநந்தா, மேலும் பல நூல்கள் எழுத வேண்டும், அய்யாவின் புகழ் பரப்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மனிதன் எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த நூலை படித்து, அதை பின்பற்றுவோரும் சிறப்பான வாழ்வு பெறுவார்கள் என்று மனதார நம்புகிறேன்.

டாக்டர் எஸ்.ஆர்.ஜெயதுரை
பாராளுமன்ற உறுப்பினர்,
தூத்துக்குடி தொகுதி

Share:

0 கருத்துகள்: