புதன், 5 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 1


1. உல்லாசப் பயணம்
  
- நெல்லை விவேகநந்தா -


மதியம் 1.30 மணி -சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். எப்பொழுதாவது அதிரடியாக பின்பற்றப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால் மெட்டல் டிடெக்டர் சோதனை வாயில் வழியாக செல்வதை அலட்சியப்படுத்திச் சென்று கொண்டிருந்தனர் அவசர கதியில் ஓடிய பயணிகள்.


ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே பளிச்சிட்ட பெரிய மானிட்டர்களில் எந்தெந்த ரெயில் எப்பொழுது புறப்படும் என்கிற விவரம் நின்று நிதானமாக ஓடிக்கொண்டிருந்தது.


பயணிகளின் கனிவான கவனத்திற்கு... என்று ஆரம்பிக்கும் ரெக்கார்டு செய்யப்பட்ட பெண்ணின் அழகான குரல், பயணிகளின் பலத்த ஓசைகளுக்கு மத்தியில் தேனிசையாக தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.


"மே ஐ ஹெல்ப் யூ" என்று பெரிதாக எழுதப்பட்டு இருந்த ரெயில்வே தகவல்களைப் பெறும் அறையில் ஒருசில பயணிகள் எதையோ விசாரித்துக் கொண்டு இருந்தார்கள்.


உலகம் முழுக்க தமிழர்களின் கைமணத்தை பரப்பிய சரவணபவனின் ரெயில்வே கிளை ஹோட்டலில் இருந்து வந்த கமகம வாசனை பெரும்பாலான பயணிகளை அந்த ஹோட்டலை நோக்கி ஒருகணம் திரும்ப வைத்தது. அந்த ஹோட்டலுக்குள் ஒரு டேபிளில் பரபரப்பாக அமர்ந்திருந்தான் ஆனந்த். அடிக்கடி ஹேண்ட் வாட்சை பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கு முன்பாக டேபிள் மீது வைத்திருந்த விலை உயர்ந்த நோக்யா மொபைலையும் அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டான்.


சிறிதுநேரத்தில் ஹோட்டல் சப்ளையர் அவன் ஆர்டர் செய்த காபியை கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு அவனைப் பார்த்தார்.


"ஸார்... உங்களுக்கு காபி மட்டும் போதுமா? வேறு ஏதாவது வேணுமா?"


"இப்போது சாப்பிட எதுவும் வேண்டாம். 2 செட் வடை மட்டும் பேக் செய்யுங்கள். இரண்டுக்கும் சேர்த்து பில் கொண்டு கொண்டு வாருங்கள்."


ஆனந்த் சொன்னதும் அங்கிருந்து அகன்றார் சப்ளையர்.


ஆவி பறந்து கொண்டிருந்த காபியை உதட்டுக்கு கொடுத்து சப்பத் துவங்கினான் ஆனந்த். அவன் காபி குடித்துக்கொண்டிருக்கும்போதே மொபைல் பளிச்சிட்டு சினுங்கியது. ஆர்வமாய் மொபைலை ஆன் செய்து பேசினான்.


"ஸார்... நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நாங்கள் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்துவிட்டோம்."


எதிர் முனையில் பேசிய ஆசாமி கூறினான்.


"நான் சரவணபவன் ஹோட்டலில் இருக்கிறேன். இதோ வெளியே வந்து விடுகிறேன். நீங்கள் ரெயில் நிலையத்திற்குள் வாருங்கள்."


"நான் ரெயில் நிலையத்திற்குள் வர முடியாது ஸார்."


"ஏன்?"


"நீங்கள் கோவைக்கு இரண்டு டிக்கெட்தானே ரிசர்வ் செய்து வைத்திருக்கிறீர்கள்?"


"ஆமாம்!"


"நான் உள்ளே வர வேண்டுமானால் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு வாருங்கள்."


"சரி... நீங்கள் அங்கே நில்லுங்கள். நான் ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன். ஆமாம்..." இதற்கு மேல் சொல்லும் போதுதான் பேச்சில் சற்று தடுமாறினான் ஆனந்த்.


"பயப்படாதீங்க ஸார். அந்த பொண்ணும் என்கூடத்தான் இருக்கு. நீங்க தாராளமா கூட்டிட்டு போகலாம்!"


"சரி... இதோ வந்துவிட்டேன்."


அவசரமாக மொபைல் இணைப்பை துண்டித்தவன், தான் குடித்துக் கொண்டிருந்த காபியைப் பார்த்தான். அது நன்றாக ஆறிப்போய் இருந்தது. அதனால் அதை அப்படியே வைத்துவிட்டான்.


அவன் ஆர்டர் செய்த இரண்டு செட் வடையும் பில்லோடு வந்துவிட்டதால், அதற்கான பணத்தை வேகமாக கொடுத்துவிட்டு, வடையை தனது பேக்கிற்குள் திணித்துக் கொண்டு ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதிக்கு ஓடினான்.


ஓடி வந்த வேகத்தில் எதிரே சற்று உயரத்தில் பளிச்சிட்ட மானிட்டரில் நேரத்தைப் பார்த்தான். மதியம் 2 மணி 10 நிமிடம் 7 நொடி என்பது பளிச்சிட்டது.


ரெயில் புறப்பட இன்னும் 20 நிமிடம்தான் இருக்கிறது என்கிற வேகத்தில் ஓடி வந்தவன், தன்னைத் தேடி வந்தவர்கள் எங்கே என்று பதற்றமாய் தேடினான்.


அப்போதுதான், நாம் தேடி வந்தவர்களை இதற்கு முன்பு நேரில் பார்த்தது கிடையாதே... வேறு எப்படி அவர்களை அடையாளம் காண்பது? என்று யோசித்து நின்றான்.


மொபைலில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவன் அருகில் ஒருவன் வந்து நின்றான்.


"ஸார்... நீங்கள்தானே ஆனந்த்?"


"ஆமாம். நீங்கள்...?"


"நான்தான் பிரகாஷ்."


"ஸாரி... நான் உங்கள் பெயரையே மறந்து போய்விட்டேன்."


"ரெயில் புறப்பட நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். நம்ம அக்ரிமென்ட்டை எந்த சூழ்நிலையிலும் மீறிவிட வேண்டாம். மீறி நடந்தால், நடக்கும் விபரீதங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பாக வேண்டும்."


"இன்னும் எந்த காரியமும் நடக்கவில்லையே... அதற்குள் ஏன் நடக்காததைப் பற்றி பேசுகிறீர்கள்?"


"இல்லை... ஒரு முன்னெச்சரிக்கைகாகத்தான் சொன்னேன்."


"சரி..." என்ற ஆனந்த், மறுபடியும் கண்களால் அந்தப் பெண்ணைத் தேடினான்.


"ஸார்... நீங்க ரொம்பவும் ஆர்வமாக இருக்குறீங்க. அந்தப் பெண் உங்களை ஏற்கனவே பார்த்துவிட்டாள். நீங்கள்தான் அவளை இன்னும் பார்க்கவில்லை."


"அப்படியானால் அவள் எங்கே?"


மறுபடியும் ஆனந்திடம் அதீத ஆர்வம் பளிச்சிட்டது.


"உங்களை மேலும் சோதிக்க விரும்பவில்லை. உங்களுக்கான அந்த இளம்பெண் உங்கள் ரிசர்வ் செய்த ரெயில் பெட்டியில் இந்நேரம் ஏறி உட்கார்ந்து இருப்பாள் என்று நினைக்கிறேன்."


"டிக்கெட் என்னிடம் அல்லவா இருக்கிறது? அவளுக்கு எப்படி பயணிக்க வேண்டிய கோச் தெரியும்?"


"என்ன ஸார் மறுபடியும் மறந்துட்டீங்களா? நீங்கள் தானே இன்னிக்கு காலையில் கோவை எக்ஸ்பிரஸில் பயணிக்க உள்ள கோச் மற்றும் சீட் நம்பர் பற்றி மெஸ்ஸேஜ் செய்தீர்கள்?"


"ஆமாம், மறந்துவிட்டேன்..." என்ற ஆனந்த் சற்று வழிந்து தொலைத்தான்.


"ஆனந்த் ஸார்... இதுக்கு மேலேயும் உங்களது பொறுமையை சோதிக்க நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கள் பாஸின் Ôஇன்டியன் பேங்க்Õ அக்கவுண்ட்டிற்கு அனுப்பிய பணம் 70 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆகிவிட்டது. ஸோ... என்ஜாய் யுவர் ஊட்டி ஜார்னி" என்று கை கொடுத்து வாழ்த்தி விட்டு திரும்பினான் பிரகாஷ்.


பதற்றத்தோடு கோவை செல்ல தயாராக நின்றிருந்த சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் நிற்கும் ஆறாவது பிளாட்பார்ம் நோக்கி வேகமாக ஓடினான் ஆனந்த்.


"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... அரக்கோணம், காட்பாடி, சேலம் வழியாக கோவை வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்" என்கிற தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியிலான அறிவிப்புகளால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் தனக்குரிய சீட் ஒதுக்கப்பட்டு இருந்த கோச்சான டி5-ஐ சென்றடைந்தான்.


அது சிட்டிங் ரெயில். அதாவது, அமர்ந்து மட்டுமே செல்லும் பயணிக்கும் பகல் நேர ரெயில் என்பதால் ஒவ்வொரு பயணிகளும் தங்களுக்குரிய இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். 42, 43 ஆகிய எண்கள் கொண்ட சீட்கள் ஆனந்த்துக்கும், அவனுடன் பயணிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தன.


தன்னுடன், தன்னுடைய எல்லா சேவையையும் பூர்த்தி செய்ய வரப்போகும் அந்த அழகி யார் என்பதை அறிய ஆவலாய் தன் இருக்கையைப் பார்த்தான். அங்கே அந்தப் பெண் இல்லை. பக்கத்தில் எங்கேயாவது நிற்கிறாளா என்பதை அறிய சுற்றும் முற்றும் பார்த்தான். ஆங்காங்கே பல இளம்பெண்கள் நின்றிருந்ததால், ஒரு வாரத்திற்கு மட்டும் தனக்குரியவளாக உடன் வாழப் போகும் அந்த பெண்ணை தேடினான்.


அடுத்த நிமிடமே, அந்த ரெயில் புறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனந்தின் பதற்றம் இன்னும் அதிகமாகியது.


'அந்த பெண்ணை இன்னும் காணவில்லை. 70 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்களா? நானும், அவர்களை நம்பி இப்படியொரு ஜென்டிமென் அக்ரிமென்ட் போட்டுக் கொண்டது முட்டாள்த்தனமானதா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அப்செட் ஆனான்.


தனது இருக்கையில் சோகத்தோடு அமர்ந்த அவன் எதார்த்தமாக நிமிர்ந்தான். அவனுக்கு எதிரில் 22 வயது மதிக்கத்தக்க அழகான இளம்பெண் உட்கார்ந்திருந்தாள்.


டைட்டாக ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்திருந்தாள். அவளது ஒட்டுமொத்த அழகையும் அந்த ஆடை பளிச்சென்று காட்டியது. அவளது லிப்ஸ்டிக் உதட்டில் திருநெல்வேலி அல்வாவின் இனிப்பு தெறித்தது.


நிச்சயம் அவள்தான் தனக்காக அனுப்பப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆனந்த், அவளுக்கு புன்னகையோடு ஒரு ஹாய் சொன்னான்.


நிமிர்ந்து பார்த்த அந்த பெண், லேசாக புன்னகைத்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள்.


தன்னை அவளிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் திணறினான் ஆனந்த்.


"மேடம்..."


"யெஸ். வாட் யூ வான்ட்?"


"ஐ ஆம் ஆனந்த். ஆர் யூ...?"


"ஐ ஆம் ஸ்வேதா."


தன் பெயரை மட்டும் சொன்ன அவள், அதற்கு மேல் பேச ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.


'இவளது பேச்சைப் பார்த்தால் நமக்காக அனுப்பப்பட்டவள் போன்று தெரியவில்லையே...' என்று திடீரென பதற்றமான ஆனந்த், சீட்டில் இருந்து அவசரமாக எழுந்தான். தனக்குரிய பெண்ணை அனுப்பி வைக்க ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வந்துவிட்டு போன பிரகாஷ் மொபைலை அவசரமாக தொடர்பு கொண்டான்.


தனது கைக்குழந்தை மொபைலை வெகுநேரம் சினுங்க விடவில்லை பிரகாஷ். உடனே ஆன் செய்தான்.


"என்ன பிரகாஷ் என்னை ஏமாற்ற பாக்குறீங்களா? ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு அந்த பெண்ணை கூட்டிட்டு வந்ததாக முதலில் சொன்னீர்கள். நான் அங்கே வந்தபோது ரெயிலில் ஏறி இருப்பாள் என்றீர்கள். இப்போது அந்த பெண் இங்கே வரவேயில்லை. என்னை சாதாரண ஆளுன்னு நினைச்சு ஏமாற்ற நினைக்காதீங்க. என்னுடைய க்ளோஸ் ப்ரெண்ட் இந்த சென்னையில்தான் ஜாயின்ட் கமிஷனரா இருக்கான். அவனுக்கு நான் ஒரு போன் பண்ணுனாலே போதும். நீங்க எல்லாம் கூண்டோடு உள்ளே இருப்பீங்க..."


"ஸார்... அவசரப்பட்டு கத்தாதீங்க. நீங்க யாரு, உங்க பேக்ரவுண்ட் என்ன என்று எல்லாவற்றையும் விசாரித்துதான் அந்த பெண்ணை உங்களோடு அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கும் தொழில் தருமம்னு ஒண்ணு இருக்கு. வாங்கின பணத்துக்கு நாங்க ஏமாத்த மாட்டோம். ரெயில் புறப்படும்போது அவள் உங்களோடு இருப்பாள். அதுக்குப் பிறகும் அவள் வரவில்லை என்றால் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்க. இப்போது மொபைலை கட் பண்ணுங்க..." என்று சொல்லிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்துவிட்டான் பிரகாஷ்.


"ச்சே..."


ஆனந்துக்கு மொபைலை வீசியெறிய வேண்டும் என்பது போல் இருந்தது. கோபத்துடனேயே தனது சீட்டில் உட்கார்ந்தான். அப்போதுதான் யாரோ ஒரு இளம்பெண் தன்னை உரசி இருப்பது போல் உணர... திரும்பிப் பார்த்தான்.-


அங்கே, நடிகை அனுஷ்கா சாயலில் அழகான இளம்பெண், அவனை ஒட்டி அமர்ந்திருந்தாள்.


ஆனந்த் பேசுவதற்கு முன்பாக அவளே தனது அழகான வாயைத் திறந்தாள்.


"நீங்கள் தானே ஆனந்த்?"


"ஆமாம்!"


"நான் ஷ்ரவ்யா. ஒரு வாரத்திற்கான உங்களது பார்ட்னர்."


புடவையில் ஹோம்லியாக வந்திருந்த ஷ்ரவ்யாவை பார்ப்பதற்கே ஆனந்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு அழகியா தனக்கு 'கம்பெனி' கொடுக்கப் போகிறாள் என்பதை அந்த நிமிடம் வரை அவனால் நம்ப முடியவில்லை.






(இன்னும் வருவாள்...)
Share:

சனி, 24 செப்டம்பர், 2011

ஜொள் விட வைக்கும் சுஷி (sushi)



சுஷி... (sushi) ஜப்பானியர்களை சப்பு கொட்ட வைக்கும் உணவு இது. பிளேட் வழியும் அளவுக்கு சாதம் வைத்து சகல கூட்டுப் பொரியல், குழம்பு வகைகளுடன் உட்கொள்ளும் நம்மூர் உணவைப் போன்றது அல்ல இது. முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கே முன்னுரிமை தரப்படும் ஸ்பெஷல் உணவுதான் இந்த சுஷி.


பொதுவாக ஜப்பானியர்கள் காய்கறிகள், இறைச்சி, மீன், கடல் பாசிகள் ஆகியவற்றை சம அளவில் உட்கொள்கிறார்கள். இதுதான் அவர்களது நீடித்த உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் காரணம். சுஷியும் இந்த ஆரோக்கிய வகையைச் சேர்ந்ததுதான்.


வினிகர் இட்டு சமைக்கப்பட்ட அரிசி சாதத்துடன் கடல் உணவு, இறைச்சி, காய்கறி, முட்டை ஆகியவை சேர்த்து உருளைகளாகவோ, வட்டமாகவோ தயாரி க்கப்படுகிறது சுஷி. அரிசி சாதத்துடன் சேர்க்கப்படும் இதர பொருட்கள் சமைக்கப்பட்டோ அல்லது சமைக்கப்படாமல் பச்சையாகவோ பரிமாறப்படும். பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் சுஷி, பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட அரிசி சாதம் கொண்டு செய்யப்படுகிறது.
 சுஷி என்றால் புளிப்பு அல்லது கரிப்புச் சுவை என்று பொருள். புளித்த அரிசி சாதத்தில் இருந்து பெறப்படும் வினிகர், பதப்படுத்தப்பட்ட மீனில் அமினோ அமிலங்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த சுரப்பு காரணமாக, உமாமி என்ற மிக முக்கியமான சுவை அந்த உணவுக்கு கிடைக்கிறது.


சுஷி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிசியின் தேர்வில் தனிக் கவனம் செலுத்துகிறார்கள் ஜப்பானியர்கள். அந்த அரிசியானது புதிதாக அறுவடை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதன் பிசுபிசுப்பு தன்மைதான் சுஷியின் கூடுதல் அல்லது குறைவான சுவைக்குக் காரணமாக அமைகிறது. இந்தியா போன்ற கீழை நாடுகளில் பயன்படுத்தப்படும் அரிசியைப் போல நீளமான அரிசி வகையாக இல்லாமல் தட்டையான மற்றும் குட்டையான அரிசியே சுஷி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இனிப்பு மற்றும் உவர்ப்பு - இவற்றில் விரும்பும் சுவையை கூட்டியோ குறைத்தோ பல வழிமுறைகளில் சுஷி செய்யப்படுகிறது. அந்த உணவானது நோரி எனப்படும் மெல்லிய கடல்பாசி தாள்களினால் சுருட்டப்படுகிறது. இந்தக் கடல் பாசி தாள்கள் பளபளப்பான, மெல்லிய, கரும் பச்சை வண்ணம் கெ £ண்டவை. இவ்வாறு மேல் சுருட்டாக மட்டும் அல்லாமல், தனியாக உண்ணப்படும் ஒரு தின்பண்டமாகவும் ஜப்பானில் நோரி பயன்படுகிறது. கடலில் வளர்க்கப்படும் பாசியைச் சுரண்டி, வெய்யிலில் காய வைத்து, மெல்லிய ஷீட்களாக விரித்து நோரி தயரிக்கப்படுகிறது.


சுஷியில் நிரப்ப பயன்படும் பொருட்களில் பெரும்பாலும் சமைக்கப்படாத மீன் உபயோகிக்கப்படுகிறது. சுவை, சுகாதாரம் கருதியும், வாடிக்கையாளர்களின் ப £ர்வைக்கு அழகாக இருப்பதற்காகவும் இந்த பச்சையான மீனானது உறை நிலையில் வைக்கப்பட்டு பின்பு உபயோகிக்கப்படுகிறது.


பாரம்பரிய முறையில் சுஷி தயாரிக்கும் சமையல் கலைஞர்கள் உறைந்த மீனைப் பார்த்தே அதன் சுவை, தரம், தன்மை ஆகியவற்றை தீர்மானித்துவிடும் திறன் பெற்றிருப்பார்கள். சாலமன், டுனா, ஜப்பனீஸ் யெல்லோ டெய்ல் ஆகிய மீன்கள் சுஷி தயாரிப்பில் அதிகம் பயன்படுகின்றன. நல்ல கொழுப்பு மிகுந்த இந்த மீன்களின் சுவை சுஷியின் தரத்தையும், -சுவையையும் மேலும் அதிகரிக்கிறது.


ஈல் மீன், நண்டு, இறால், கணவாய், நத்தை ஆகியவையும் சுஷியில் பயன்படுத்தப்படுகின்றன. முட்டை, முள்ளங்கி, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், வெள்ளரி போன்றவையும் சுவைக்கேற்ப அதில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. சோயா சாஸ், தேநீர், புளிக்க வைக்கப்பட்ட இஞ்சி ஆகியவற்றுடன் சேர்த்து சுஷி உண்ணப்படுகிறது.


தயாரிப்பு முறை, சுருட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேர்க்கப்படும் பிற உணவு பொருட்களால் சுஷி பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அவற்றில் முக்கியமானவை மகி சுஷி, நிகிரி சுஷி, குண்கண் மகிசுஷி.


மகி சுஷியானது, கடல் பாசியான நோரியில் சுருட்டப்பட்ட அரிசி சாதம் மற்றும் பிற சேர்ப்பு பொருட்களை கொண்டு உருளை வடிவில் இருக்கும்.


நிகிரி சுஷியானது, நீள் கூம்பு வடிவில் தயாரிக்கப்படும்.


குண்கன் மகிசுஷியானது, நோரியால் மேல் மூடி செய்யப்பட்டு, அடியில் அரிசி சாதமும், மேலே மீன், முட்டையும் இட்டு தயாரிக்கப்படுகிறது.


மிகுந்த புரதமும், வைட்டமின்களும், குறைவான கொழுப்புமாக சுஷி ஒரு சரிவிகித ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது. ஆனால், சில வேளைகளில் பச்சையாக உபயோகிக்கப்படும் மீன் மற்றும் கடல் உயிரினங்களில் நுண்ணுயிரிகள் வசிக்க வாய்ப்புள்ளதால் சரியான உறைநிலையில் இதை வைத்திருந்து உண்பது அவசியம்.


நேக்டு சுஷி

 
இப்படி ரொம்பவே மெனக்கெட்டு தயார் செய்யப்படும் சுஷியை அலங்காரமாக பரிமாறுவது ஜப்பானில் ஸ்பெஷல்! இதற்காக அதை பரிமாறுபவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார்கள். அந்த வகையில் ஒன்றுதான், அழகான இளம்பெண்களை உணவு உண்ணும் தட்டாக பயன்படுத்துவது.


அது எப்படி ஒரு பெண் தட்டாக மாற முடியும்?


முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் ஜப்பானியர்கள். அதாவது, நீண்ட மேஜையின் மீது ஜட்டியும், பிராவும் மட்டும் அணிந்த அழகான இளம்பெண் படுத்துக்கொள்வார். மல்லாக்க படுத்திருக்கும் அவர், தனது கைகளையும், கால்களையும் சற்று அகலமாக விரித்து வைத்துக்கொள்வார். அவரது உடலில் தலை தவிர்த்து அனைத்துப் பகுதியிலும் சுஷி உணவை வரிசையாக அடுக்கி அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும், அந்த டேபிளை ஆர்டர் செய்தவர்கள் குழுவாக வருவார்கள். அவர்களிடம் சாப்ஸ்டிக் என்று கூறப்படும் இரண்டு குச்சிகள் தரப்படும். அவர்கள், படுக்க வைக்கப்பட்ட பெண் மீது வைக்கப்பட்டுள்ள சுஷி உணவு வகைகளை குச்சியைக் கொண்டு எடுத்துச் சாப்பிட வேண்டும்.

 இந்த வகை உணவு பரிமாறும் முறைக்கு 'நேக்டு சுஷி' என்று பெயர். சிலநேரங்களில், இதில் பயன்படுத்தப்படும் பெண் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக இருப்பார். அந்த நிர்வாண உடல் மீதே சுஷி உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். உணவு உண்ண வரும் ஜொள்ளர்கள் இவர்களிடம் கிளுகிளுப்பாக நடந்து கொள்வதும் உண்டு. அதாவது, மேஜை மீது படுத்திருக்கும் இளம்பெண்ணின் மார்பகம், இடுப்புப் பகுதியில் உள்ள உணவை சாப்ஸ்டிக் குச்சிகளை கொண்டு எடுத்து சாப்பிட்டு விட்டு, அந்த பெண்ணை ஜொள் விட்டபடியே உணவை சாப்பிடுவார்கள். சிலநேரங்களில் சிலர் மேஜை மீது ப டுத்திருக்கும் பெண் மீது உள்ள உணவை சாப்ஸ்டிக் கொண்டு எடுக்காமல் தங்களது வாயால் கவ்வி எடுத்து சாப்பிடுவதும் உண்டு.


இவற்றை எல்லாம் சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதாலேயே நேக்டு சுஷி உணவு பார்ட்டியில் ப்ளேட் ஆக பயன்படுத்தப்படும் இளம் பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கணிசமான பணம் சம்பளமாக நாள்தோறும் கிடைப்பதால், இப்பணிக்கு அந்த பெண்கள் விரும்பியே வருகின்றனர். ப £ர்ட்டிக்கு வருபவர்கள் கொடுக்கும் சில்மிஷங்களையும் சமாளித்துக் கொள்கிறார்கள்.


நேக்டு சுஷி பார்ட்டியில் ப்ளேட் ஆக இருக்கும் பெண்ணுக்கு என்று சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, அந்தப் பெண், விருந்து நடைபெறும் இடத்தில் மேஜையின் மீது ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிர்வாண கோலத்தில் உடலை அசைக்காமல் இருக்கும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். அடுத்ததாக குளிர்ந்த உணவை நீண்ட நேரம் உடலில் தாங்கும் சக்தியும் பெற்றிருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, இந்த சேவை க்கு அவள் மனரீதியாக தயாராக வேண்டும். அதாவது, விருந்தில் அவள் கோபமாகவோ, டென்ஷனாகவோ, சோகமாகவோ காணப்பட்டால் விருந்துக்கு வ ந்தவர்கள் வெளியேறி விடுவார்கள். அதனால், விருந்துக்கு வந்தவர்கள் உணவை எடுக்கும் சாக்கில் தனது உடலை தொட்டாலோ, முத்தம் கொடுத்தாலோ கூட சிரிக்க மட்டுமே செய்ய வேண்டும்.


இந்த சேவைக்கு முன்பாக ஸ்பெஷல் நறுமணம் கொண்ட சோப்பை உடலின் அனைத்து பகுதியிலும் தேய்த்து குளித்து அந்த பெண் சுத்தமாக டைனிங் டேபிளுக்கு வர வேண்டும்.


சுஷி உணவை நிர்வாணக் கோலத்தில் படுத்துள்ள அழகான இளம்பெண்ணின் உடலில் இருந்து எடுத்து சாப்பிடும் விருந்துக்கு அதிக அளவில் கட்டணம் வசூல் செய்கிறார்கள். அதனால், கோடீஸ்வரர்கள் மத்தியிலேயே இந்த விருந்து பிரபலமாக இருந்து வருகிறது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஜப்பான் செல்லும் கோடீஸ்வர தொழிலதிபர்கள், கண்டிப்பாக நேக்டு சுஷி பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.


நேக்டு சுஷி பார்ட்டிக்கு அழகான இளம் பெண்களை மட்டுமின்றி, அழகான ஆணழகன்களையும் பயன்படுத்துகிறார்கள். இது மிக மிக குறைவு. பெண் வ £டிக்கையாளர்கள் கேட்டால் மாத்திரம் ஆண்களை பயன்படுத்துகிறார்கள்.


ஜப்பானில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே இந்த கிளுகிளுப்பான உணவு விருந்து நடக்கிறது. பல நாடுகளில் இந்த விருந்துக்கு தடை விதி க்கப்பட்டுள்ள அதேநேரத்தில், மேலும் சில நாடுகளில் அரசு அனுமதியுடன் இந்த விருந்துகள் கொண்டாடப்படுகின்றன. அரசியல்வாதிகள், பிரபலங்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விழாக்கள் நடத்தும்போது இத்தகைய விருந்துக்கும் ஏற்பாடு செய்து வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.


ஆபாசத்தை தூண்டுவதாக இந்த விருந்து உள்ளது என்று ஒரு தரப்பில் எதிர்ப்பு குரல் ஒலித்தாலும், சுஷி உணவு விருந்தில் பங்கேற்கும் அனைவரின், குறிப்பாக நிர்வாண கோலத்தில் படுத்திருக்கும் இளம்பெண்ணின் விருப்பத்துடனேயே இந்த விருந்து நடைபெறுவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதரவுக் குரல் கொடுப்போரும் இருக்கிறார்கள்.


நீங்கள் எப்படி?



Share:

வியாழன், 8 செப்டம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு தினமலர் பாராட்டு!



நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் -வரலாறும் அற்புதங்களும்' (வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை) நூலுக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய மேலான மதிப்புரை இங்கே உங்கள் பார்வைக்கும்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருமாலின் அருள்பெற்று, வைகுண்டர் என்ற பெயருடன் 42 ஆண்டுகள் வாழ்ந்த இறைமகனாரின் மகிமைகளை மிகவும் இனிமையாக இந்த நூல் விவரிக்கிறது.

ஆன்மிகத்தின் முடிந்த நிலையாக எதிர்கால முக்தியை வேண்டுவோர் பலர். ஆனால், நிகழ்கால கொடுமையாக நம்பூதிரி, நாயர், தம்புரான், ஐயர், பிள்ளைமார் ஆகிய ஆதிக்க உயர் ஜாதியினரின் அடிமையாக வாழ்ந்த பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட 18 ஜாதியினரையும் மீட்டு, அவர்கள் வாழ்வில் புது ஒளி பாய்ச்சியவர் அய்யா வைகுண்டர். தன் தெய்வ சக்தியால் பற்பல அதிசயங்கள் செய்தவர்.

தென்னை, பலா, வாழை, ரப்பர் மரங்களால் அழகுபெற்ற இன்றைய கேரளாதான் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம். இதன் ஒரு பகுதியாக விளங்கியது நாஞ்சில் நாடு. இன்றைய நாகர்கோவில் அருகில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிக்க ஜாதிகளில் அடிமைகளாக இருந்த 18 ஜாதியினர் உரிமை இழந்து வாடினர். பெண்களுக்கு கல்வி கூடாது, மார்பில் துணி கூடாது, குடங்களை இடுப்பில் தூக்கக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்து அவமானப்படுத்தினர்.

இந்த கொடுமைகள் தாங்காத சிலரை கிறிஸ்தவர்கள் மதம் மாற்றிக்கொண்டனர்.

சாமித்தோப்பில், 1809-ல் முத்துக்குட்டி என்ற பெயரில் தோன்றி, 20 வயதில் நோய்வாய்ப்பட்டு, பிறகு திருச்செந்தூர் கடலில் மறைந்து, மூன்றாம் நாள் வைகுண்டராக அவதாரம் எடுத்து வந்து, தனது அதி அற்புதங்களால் உருவம் அற்ற வழிபாட்டு முறையை உருவாக்கி, ஜாதிகளை கடந்த தெய்வ நிலையை மக்களுக்கு காட்டியதை இந்நூல் அற்புதமாக பேசுகிறது.

- முனைவர் மா.கி.ரமணன்.

நன்றி : தினமலர் 28.8.2011

Share:

சனி, 3 செப்டம்பர், 2011

அய்யா வைகுண்டர் நூலுக்கு தமிழக அரசின் இதழ் பாராட்டு!

நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' என்ற நூலுக்கு, தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் திருக்கோவில் மாத ஆன்மீக இதழ் பாராட்டு தெரிவித்து, சிறப்பு நூல் மதிப்புரை வழங்கியுள்ளது. டாக்டர் என்.ஸ்ரீதரன் நூலை ஆராய்ந்து மதிப்பீடு செய்துள்ளார். 

அவர், தமிழக அரசின் திருக்கோவில் மாத இதழில் கூறியிருப்பதாவது:

'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்', நெல்லை விவேகநந்தா, வானதி பதிப்பகம், தீன தயாளு தெரு, சென்னை-600 017, பக்கங்கள் : 232, விலை : ரூ.100.

'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' நூலின் ஆசிரியர் நெல்லை விவேகநந்தா எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளருமாவார்.


சுவாமி விவேகானந்தரைப் போலவே நாஞ்சில் நாட்டில் அய்யா வைகுண்டர் ஆன்மிகத்தையும், சமூக நீதியையும் இணைத்துப் பெரியதோர் இயக்கத்தை நிலை நாட்டியமை நூலாசிரியரைக் கவர்ந்த, அவரை இந்நூல் எழுதத் தூண்டியிருக்கிறது. எனவே, இந்நூலை சமூக வரலாற்றுப் பெட்டகம் என ஐயமின்றி கூறலாம்.


அய்யா வைகுண்டர் நாஞ்சில் நாட்டில் 1809-ல் உதித்த ஞான சூரியன். சம காலச் சமூக அவலங்களை பொசுக்க வந்த சீர்திருத்தப் பகலோன். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து, முதலில் முத்துக்குட்டி என்று பெயர் வைக்கப்பெற்று, பிறகு அய்யா வைகுண்டர் என்னும் திருப்பெயர் பெற்ற ஓர் இளைஞர், தலைமுறைகளாக வேரூன்றிவிட்ட சமூகக் கெடுமைகளை வேரறுத்த விதத்தையும், வலுவான ஓர் ஆன்மிக வழிமுறையை நிலை நாட்டியதையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இந்நூல் வர்ணிக்கிறது.


தமது அவதார நோக்கம் பூர்த்தியானதும் 2.6.1851 அன்று அவர் வைகுண்டம் ஏகினார். தம்முடைய வரலாற்றையும், கொள்கைகளையும் கனவின் மூலம் தமது சீடரான அரிகோபாலனுக்கு தெரிவித்தார். அவற்றின் தொகுப்பே அகிலத்திரட்டு என்னும் நூல். இதுவே அய்யா வழியைப் பின்பற்றுபவர்களின் வேத நூல்.


அய்யா வைகுண்டர் இந்நூலாசிரியரின் முதல் படைப்பு எனினம் தெளிவாகத் திட்டமிட்டுக் கட்டுக் கோப்பான முறையில் எழுதியுள்ளார். அய்யா வைகுண்டர் காலச் சமூகப் பின்னணி, அவரது வரலாறு, அவர் நடத்திய போராட்டங்கள், சாதனைகள், அவரது இயக்கத்தின் வளர்ச்சி, கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள், மறைவிற்குப் பின் நிகழ்த்திய அதிசயங்கள் என்று ஓர் ஓழுங்குமுறையை அமைத்துக் கொண்டு எழுதியுள்ள நூலாசிரியர் பாராட்டிற்குரியவர்.

ஏராளமான பொருத்தமான படங்களை சேர்த்துக் கலை உணர்வுடன் அச்சிடப்பட்டுள்ள இந்நூல் வானதி பதிப்பகத்திற்குப் புகழ் தேடி தரும் நூல் மட்டுமன்று, அய்யா வைகுண்டரின் ஆசிகளையும் பெற்றுத்தரும் நூலாகும்.


நன்றி : திருக்கோவில், ஆகஸ்ட் 2011

Share:

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

நாடி ஜோதிடம் உண்மையா? அல்லது ஏமாற்றுகிறதா?


நாடி ஜோதிடம்... நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்களை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கணித்துச் சொல்லும் ஒருவகை ஜோதிட முறை என்பது பலரது கருத்து. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது சிலரது தனிப்பட்ட கருத்து.

இவற்றில் எது உண்மை?

நாடி எங்கெல்லாம் பார்க்கிறார்களோ, அங்கெல்லாம் விசிட் ஒரு விசிட் அடித்தால், ஒருவேளை... நாடி ஜோதிடம் என்பது உண்மையாகத்தான் இருக்குமோ என்றுதான் என்னத் தோன்றுகிறது. ஆம்... நாடி பார்க்கப்படுகிற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் தங்களது எதிர்காலத்தை தெரிந்துகொள்ள தவம் கிடக்கிறது.

நாடி ஜோதிடம் என்பது என்ன? அது எப்படி வந்தது? அதை அறிமுகப்படுத்தியது யார்?

நாடி ஜோதிடம் என்பது ஒருவரது கைரேகையைக் கொண்டு, அவரைப் பற்றி ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து, அதிலுள்ள அவர் தொடர்பான தகவல்களை வாசித்து விளக்கி கூறுவதுதான். நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஏடுகளை புரட்டிப்பார்த்து பலன் சொல்கிறார்கள். ஆண்கள் என்றால் வலது கட்டைவிரல் (பெருவிரல்) கைரேகையும், பெண்கள் என்றால் இடது கட்டைவிரல் கைரேகையும் பெறப்படுகிறது.

நாடி என்று சொல்லப்படும் ஏடுகள் பனை ஓலையினால் ஆனவை. ஒரு காலத்தில் தமிழகத்தில் முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக திகழ்ந்தது இந்த பனை ஓலை ஏடுகள்தான். இதற்காக பனை ஓலையை சரியான முறையில் தயார் செய்து, அதில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். நாடி ஜோதிடம் கூறும் தகவல்களும் இதுபோன்ற பனை ஓலைகளிலேயே எழுதப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த ஓலையில் இடம்பெற்றுள்ள எழுத்துக்கள் பழந்தமிழ் வட்டெழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளன. இந்த ஓலைச் சுவடிகளை எழுதியது யர் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 2 ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தவை எனக் கருதப்படும் இந்த சுவடிகள் சப்த ரிஷிகளான அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஷ்டர் மற்றும் வால்மீகி ஆகியோரால் எழுதப்பட்டவை என்று நம்பப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலும் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஓலைகள் கிடைக்கின்றன. வாசிப்புகளும் அவர் பெயரிலேயே நடைபெறுகின்றன.

தமிழர்களைத் தேடி உலகம் முழுக்க இந்த நாடிகள் பயணப்பட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்கிற ஊரில்தான் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் நாடி ஜோதிடம் பார்க்க பயன்படுத்தப்படும் ஓலைச்சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றியபோது, இந்தியர்களின் பாரம்பரிய விஷயங்களை அறிந்து கொள்ள அதிக

அக்கறை காண்பித்தார்கள். ஓலைச்சுவடிகளில் மருத்துவ குறிப்புகள், எதிர்காலம் குறித்த குறிப்புகள், மூலிகைகள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்பட்டதால் அவற்றில் சிலவற்றை தங்களது நாட்டுக்கே எடுத்துச் சென்றுவிட்டனர்.

அதேநேரம், பழங்கால ஓலைச்சுவடிகளின் மகிமையை அறிந்த அக்கால தமிழகத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள், தங்களுக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து பத்திரப்படுத்திக் கொண்டனர். சில ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு வசதியின்றி கரையான்களுக்கு இரையாகிவிட்டன. சில இடங்களில் இந்த ஓலைச்சுவடிகள் ஏலம் விடப்பட்டு அதை வாங்கிச் சென்றவர்களும் உண்டு.

இப்படியாக சப்த ரிஷிகள் எழுதியதாக கருதப்படும் ஓலைச்சுவடிகள் உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்தன. இவையெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே நடைபெற்றன.

இன்று வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இந்த ஒலைச் சுவடிகளையே பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். பரம்பரையாக ஒருவர் பின் ஒருவராக இக்கலையை அவர்கள் அறிந்து வருகின்றனர்.

என்றாலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாடி ஜோதிடம் இங்கே பார்க்கப்படும் என்று விளம்பரப்படுத்தி பலர் உலாவி வருகின்றனர். இதை அவர்கள் ஒரு வியாபாரமாகவே செய்கிறார்கள். இவர்களில் சிலர் தங்களுக்கு என்று இணையதளத்தை துவக்கி, வெளிநாடு வாழ் தமிழர்களையும் கவர்ந்து வருகின்றனர். அதற்காக கணிசமான ஒரு தொகையை கறந்து விடுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடி பார்ப்பதற்கான செலவு 200 - 300 ரூபாயிலேயே முடிந்து விடுகிறது. பரிகாரம் என்றால் அதற்கு தனியாக பெரிய அளவில் செலவிட வேண்டியது இருக்கும். என்றாலும், ஆரம்பத்தில் நாடியில் சரியான பதில் வந்தால் மாத்திரமே பணம் வாங்குகிறார்கள். சரியான பதில் வரவில்லை என்றால் இன்னொரு நாள் வாருங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

நாடி ஜோதிடம் எப்படி பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக அறிய முடிவெடுத்தபோது வைத்தீஸ்வரன் கோவிலைவிட காஞ்சீபுரத்திலேயே நாடி ஜோதிடம் பார்க்கும் பிரபலங்கள் இருக்கிறார்கள் என்கிற தகவல் நமக்கு கிடைத்தது. உடனே காஞ்சீபுரத்திற்கு பயணித்தோம்.


காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அந்த 3 மாடி கட்டிடம் அமைந்திருந்தது. அந்த நகரின் பிரபல நாடி ஜோதிடர் ஒருவர் அங்கே நாடி பார்த்து வருகிறார்.

நம்முடன் வந்த ஒருவர் ஏற்கனவே அவரிடம் நாடி பார்த்து உள்ளார். சரியான தகவல் வராத காரணத்தால் அவரை மற்றொரு நாளில் வருமாறு கூறியிருக்கிறார். நாடி ஜோதிடர் குறிப்பிட்ட நாளில் நாமும் அவரோடு அங்கே சென்றோம்.

அந்த 3 மாடி கட்டிடத்தின் 3 தளத்திலுமே ஏகப்பட்ட கூட்டம். ஒருவேளை... இடம் மாறி வந்து விட்டோமா என்று நினைத்தபோது, நாடி பாக்கத்தானே வந்திருக்கீங்க... என்று ஒருவர் நம்மிடம் கேட்க, ஆமாம் என்றோம். அவரும் நமக்காக ஒரு டோக்கனை தந்துவிட்டு சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். ஒரு ஓரமாக நானும் உடன் வந்தவரும் அமர்ந்து கொண்டோம்.

நாடி பார்க்க வந்தவர்களை நோட்டமிட்டேன். அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். சில பெண்களும் இருந்தனர். யாருடைய முகத்திலும் பொங்கி வழியும் மகிழ்ச்சி இல்லை. நாடியில் நல்ல பதில் வரவேண்டும் என்கிற அவர்களது உள்ளத் தவிப்பு முகத்திலும் அப்பிக்கிடந்தது. அவர்களில் ஒருசிலருடன் வந்திருந்த குழந்தைகள்தான் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

முதன் முதலாக நாடி பார்க்க வருபவர்களிடம் என்ன கேட்கிறார்கள் என்ற கேள்வியை என்னுடன் வந்தவரிடம் கேட்டேன். அவரும், ஏற்கனவே இங்கே வந்த விஷயத்தை ஆர்வமாகச் சொன்னார்.

நான் பார்க்கும் வேலை நிரந்தரம் ஆகுமா? மும்பையில் என்னை பிரிந்து வசிக்கும் எனது மனைவி மீண்டும் என்னுடன் வாழ சென்னைக்கு வருவாரா? என்பதை அறிந்து கொள்வதற்காக அன்றைக்கு வந்திருந்தேன். நாடி ஜோதிடரிடம் சில நாடிக் கட்டுகள் இருந்தன. என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்டவர் அடுத்த நிமிடமே நாடிக்கட்டு ஒன்றில் இருந்து ஒரு ஓலைச்சுவடியை உருவி படித்தார்.

உங்களது பெயர் வேல் என்று முடியும் என்றார். நான் இல்லை என்றேன். அடுத்ததாக உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றார். நான் திருமணம் ஆகிவிட்டது என்றேன். அடுத்ததாக அவர், உங்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள் என்றார். நான், திருமணம் இப்போதுதான் நடந்தது. குழந்தை இல்லை என்றேன்.

உடனே, ஓலைச்சுவடியை எடுத்த நாடி ஜோதிடர், இன்றைக்கு உங்களுக்கான ஓலைச்சுவடி வரவில்லை என்று கூறி, இன்று வரச் சொன்னார். அன்றைக்கு எனக்கான நாடி கிடைக்காததால் கட்டணத்திற்குரிய பணம் வாங்கவில்லை என்று, அன்று நடந்ததைச் சொன்னார்.

உடன் வந்தவர் சொன்னதைப் பார்த்தால், ஒருவேளை போட்டு வாங்கி பதில் சொல்வது என்கிற பாலிசியை நாடி பார்க்கிறவர்கள் பின்பற்றுகிறார்களோ என்கிற சந்தேகம்தான் நமக்கு வந்தது.

அப்போது நாடி ஜோதிடரின் உதவியாளர் வேகமாக எங்களிடம் வந்து, அடுத்து நீங்கள்தான் நாடி பார்க்கச் செல்ல வேண்டும் என்றார். நாமும் ஆர்வமாக, உடன் வந்தவருடன் நாடி பார்ப்பவரின் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றோம்.

நெற்றி நிறைய விபூதியும், அதன் நடுவே குங்குமமும் பூசிக் கொண்டு ஒரு வெள்ளை தாடிக்காரர் அந்த ஏ.சி. அறையில் கம்பீரமாக இருந்தார். அவர்தான் நாடி ஜோதிடர்.

என்னை தனது குடும்ப நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உடன் வந்தவர் நாடி பார்க்க ஆரம்பித்தார்.

தனது மேஜையில் சில நாடிக் கட்டுகளை எடுத்து வைத்த அந்த நாடி ஜோதிடர், சட்டென்று கண்களை மூடி முனுமுனுத்தார். ஏதோ மந்திரத்தை ஜெபிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. நாம் நாடி ஜோதிடரின் செய்கைகளை உன்னிப்பாக கவனிக்க, உடன் வந்தவர் எதிர்காலம் நல்லபடியாக இருக்கும் என்ற வேண்டுதலோடு பயபக்தியாக அமர்ந்திருந்தார்.

மந்திரத்தை ஜெபித்து முடிந்ததும், நாடிக்கட்டுகளில் இருந்து ஒரு ஓலைச்சுவடியை உருவி எடுத்தார் நாடி பார்ப்பவர். அவர் கேள்வி கேட்க, உடன் வந்தவர் அதற்கான பதிலை கூறினார்.

'உங்களது தந்தையின் பெயர் வேல் என்று முடியும்.'

'ஆமாம். அவரது பெயர் சக்திவேல்.'

'உங்கள் பெயருக்கும், முருகப்பெருமானுக்கும் சம்பந்தம் உண்டு.'

'ஆமாம். எனது பெயர் பாலசுப்பிரமணி.'

'உங்களுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். நீங்கள் நான்காவது நபர்.'

'ஆமாம்.'

'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.'

'ஆமாம்.'

'ஆனால், மனைவியை பிரிந்து வாழ்கிறீர்கள்?'

'ஆமாம்.'

'அப்படியானால் உங்களுக்கான நாடி இதுதான்' என்று சொன்னார் நாடி ஜோதிடர்.

தொடர்ந்து, நாடி பார்க்கும் ஓலைச்சுவடியை வைத்தே நாடி பார்க்க வந்தவருக்கு ஜாதகம் கணித்தார். ராசி, நட்சத்திரம், பிறந்த வருடம் - தேதி எல்லாமே சரியாக இருந்தது. ஒன்றே ஒன்றுதான் இடித்தது. நாடி பார்க்க வந்தவர் பிறந்தது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி. நாடியிலோ சனிக்கிழமை பிறந்ததாக வந்தது.

அது எப்படி என்று நாம் கேட்க, ஜாதக கணிப்பின்படி சூரிய உதயம் தொடங்கி அடுத்த சூரிய உதயம் வரைதான் ஒருநாள். அதனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி என்பது ஜாதகரீதியான கணிப்பின்படி சனிக்கிழமைதான் வரும் என்று விளக்கம் கொடுத்தார் நாடி ஜோதிடர்.

தொடர்ந்து, நம்முடன் நாடி கேட்க வந்தவருக்கு ஒரு பரிகாரத்தைச் சொல்லி, அதை செய்தால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்றார். அவரும் சரி என்று தலையாட்டிவிட்டு, நாடி பார்த்ததற்கு 300 ரூபாய் கட்டணமாக கொடுத்துவிட்டு எழுந்தார்.

- ஆக, இப்படித்தான் நாடி பார்க்கப்படுகிறது.

பொதுவாக நாடி பார்க்கும் ஜோதிடர்கள் பரிகாரத்தையும் கூடவேச் சொல்கிறார்கள். அவர்களில் சிலர், தாங்களே அந்த பரிகாரத்தை செய்வதாகக் கூறி அதற்காக ஒரு தொகையையும் வாங்கி விடுகிறார்கள்.

கடந்த காலத்தை மிகத் துல்லியமாக கூறும் நாடிகள், எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பது இல்லை. அனுமான அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது என்பது நாடி பார்க்க வருபவர்களில் பலரது குற்றச்சாட்டு.

- நெல்லை விவேகநந்தா

Share:

வியாழன், 28 ஜூலை, 2011

ஹீரோயின் ஆன சிநேகாவும், என் பேனா எழுதிய உண்மையும்...




அது 2002-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். மதுரையில் நாளிதழ் ஒன்றில் நிருபராக பணியில் சேர்ந்திருந்தேன். மதுரையில் இயங்கும் அமுதசுரபி கலைமன்றம் அமைப்பின் நிறுவனர் தலைவரான திரு.பாலகிருஷ்ணன் எனக்கு நன்கு அறிமுகம் ஆகியிருந்தார்.


அப்போதெல்லாம் சிறந்த சினிமா நடிகர்-நடிகையர், அமைப்புகள், சமுக தொண்டுகள் செய்தவர்களுக்கு தனது அமைப்பின் மூலம் விருதுகள் வழங்கி வந்தார். 2001-ம் ஆண்டு அவரது அமைப்பு சார்பில் சிறந்த நடிகையாக அபிராமி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு செய்யப்பட்டு இருந்த சிநேகாவுக்கு புன்னகை இளவரசி என்கிற பட்டத்தையும் கூடுதலாக கொடுப்பதாக அறிவித்து இருந்தார்கள்.

மற்றும், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர்... என்று பல விருதுகளையும் கொடுப்பதாக அமுதசுரபி கலைமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.


நான் பணிபுரிந்த நாளிதழ் சார்பாக செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். பத்திரிகையாளர்களுக்கான வி.வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. முன் வரிசையில் எனக்கான சீட்டில் அமர்ந்திருந்தேன்.


மாலை 6.45 மணிக்குத்தான் நடிகர்-நடிகையர் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்களில் இருந்து, விழா நடைபெற்ற மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் உள்ள ராஜா முத்தையா மஹாலுக்கு வந்தனர்.


அவர்கள் வருவதாக மைக்கில் அறிவிப்பு வெளியிடப்பட ரசிகர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் சட்டென்று முண்டியடித்துக்கொண்டு முதல் வரிசைக்கு வந்துவிட்டனர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அவர்களது கூட்டத்தை தங்களால் முடிந்த மட்டும் தடுத்துக் கொண்டிருந்தனர்.


சீட்டில் இருந்து எழுந்தால் கீழே தள்ளி விட்டு விடுவார்கள் என்று பயந்து அப்படியே அமர்ந்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் மேடையில் அனைத்து நடிகர், நடிகைகளும் சீட்கள் போடப்படாததால் அவர்கள் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் முன் வரிசையின் முன்பு வந்து நின்றனர்.



விழாவுக்கு ஏற்பாடு செய்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன் வரிசையில் இருந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களை சற்று எழுந்து நின்று, நடிகர்-நடிகைகளுக்கு இடம் கொடுக்குமாறு கேட்டுக்காண்டார்கள். ஒவ்வொருவராக எழுந்தார்கள். எனக்கு மிக அருகில் நடிகைகள் அபிராமியும், சிநேகாவும் நின்றதால் என் சீட்டுக்கு பின்புறம் ரசிகர்கள் பலமாக கூச்சல் போட்டுக்கொண்டு, நடிகைகளோடு பேசவும் கை கொடுக்கவும் முயன்றனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளும் எழுந்தது.


அவர்களது ஆர்வ தள்ளுமுள்ளில் என்னால் சீட்டை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. முன் வரிசைக்கு முன்பு நின்று கொண்டிருந்த வி.ஐ.பி.கள் ஒவ்வொருவரும், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி. பார்வையாளர்கள் எழுந்துவிட்ட சீட்களில் அமர்ந்து கொண்டார்கள்.


எனக்கு நேர் எதிரே வந்து நின்ற சிநேகாவும் தான் அமர்வதற்கு சீட்டை தேடினார். இதற்கு மேலும் நாம் சீட்டில் இருப்பது மரியாதை இல்லை என்பதை புரிந்து கொண்டு சட்டென்று எழுந்துவிட்டேன். எனக்கு நன்றி சொல்லும் விதமாக தனது வெள்ளை முத்துப் பற்களால் சிரித்தார் சிநேகா. பதிலுக்கு நானும் சிரித்துக்கொண்டே வாசல் பகுதி நோக்கி சில அடிகள் எடுத்து வைத்தேன்.


அங்கேயும் வி.வி.ஐ.பி.க்கள் கூட்டம். சிநேகாவு அமர்வதற்கு நாம் அமர்ந்திருந்த சீட்டை விட்டு எழுந்து வந்து விட்டோமே... மறுபடியும் அமர்வதற்கு சீட் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு கூட்டம் குவிந்துவிட்டது.


சரி... சீட் கிடைக்கவில்லை என்றால் நின்று கொண்டாவது செய்தி சேகரித்துவிட்டு வெளியேறுவோம் என்று ஓரமாக ஒதுங்கி நின்றேன்.


அப்போதுதான் எனக்கு மிக அருகில் வேஷ்டி-சட்டையில் பளிச்சென்று ஒருவர் தெரிந்தார். அவரது முகத்தைப் பார்க்க... எனக்கும் திடீர் சந்தோஷம். சிரித்தவாரே அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.


அவர், ஜெயா டி.வி. பட்டிமன்ற நடுவர், பேராசிரியர், நடிகர் என பல முகம் கொண்ட கு.ஞானசம்பந்தன் அவர்கள்.



இதற்கு முன்பு அவரது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறேன். அப்போது, தீபாவளி மலருக்காக கு.ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவை கட்டுரை ஒன்று வேண்டும் என்று எங்களது நாளிதழின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்தார்.


கு.ஞானசம்பந்தன் எழுதிய புத்தகத்தில் இருந்து காப்பி அடிப்பதைவிட, அவர் பங்கேற்று பேசும் நிகழ்ச்சியில் இருந்தே நகைச்சுவை தகவல்களை சேகரித்துக்கொள்வோமே என்று அதில் பங்கேற்றேன். ராஜாமுத்தையா மஹாலுக்கு அருகில் உள்ள மடீட்சியா ஹாலில் மாடியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.


நான் சேகரித்த கு.ஞானசம்பந்தனின் நகைச்சுவை கட்டுரை அந்த ஆண்டுக்கான தீபாவளி மலரில் இடம் பெற்றிருந்தது. அவரது பேச்சை, கட்டுரைக்காக சேகரிக்கச் சென்றபோது, நிகழ்ச்சி முடிய நேரம் இரவு மணி 10ஐ தாண்டிவிட்டது. நிகழ்ச்சி முடிந்த பின்னரும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் அவருடன் பேசிக் கொண்டு இருந்ததால் அவரிடம் என்னால் நேரடியாக பேச முடியவில்லை.


அந்த வாய்ப்பு ஒரு சில மாதங்களுக்குப் பிறகு இப்போது நடிகர்&நடிகைகளுக்கான விருது வழங்கும் விழாவில் எனக்கு கிட்டியது. அந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக கு.ஞானசம்பந்தன் வந்திருந்தார்.


தீபாவளி மலரில் வந்த அவரது கட்டுரையை எழுதியது நான்தான் என்று நான் சொன்னபோது, ஓ... அது நீங்கள் தானா? நானும் உங்கள் ஆபீசிற்கு போன் போட்டு கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சிறப்பாகவே கட்டுரை இருந்தது என்று பாராட்டினார்.


அவரது குட்டி பாராட்டு மழையில் நனைந்து அவரிடம் விடைபெற்று, சற்று பின்னால் நகர்ந்தபோது இன்னொரு பட்டிமன்ற நடுவர் நின்று கொண்டிருந்தார்.



அவர்தான் திரு.சாலமன் பாப்பையா. அவரிடம் எனக்கு அறிமுகம் இல்லை. கு.ஞானசம்பந்தனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததை அவர் பார்த்து இருக்கிறார். அதனால்தான் என்னவோ நான் அவரை பார்த்த பாத்திரத்தில் அவருக்கே உரித்தான டிரேட் மார்க் சிரிப்பை பளிச்சென்று வெளிப்படுத்தினார். நானும் சிரித்தேன். அவ்வளவுதான்.


அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்த நேரத்தில், மேடையில் நடிகர்-நடிகைகள், சிறப்பு அழைப்பாளர்களுக்கான சீட்கள் போடப்பட்டுவிட... சாலமன் பாப்பையா மேடை நோக்கி நகர்ந்தார். சிநேகா, அபிராமி உள்ளிட்ட சினிமாக் கலைஞர்களும் மேடைக்கு சென்றனர்.

இதுதான் தக்க சமயம் என்று நினைத்த நான், முன்பு அமர்ந்திருந்த சீட்டில் போய் அமர்ந்து கொண்டேன். முதலில் நான் இருந்த சீட் அது. பின் அதில் சிநேகா இருக்க... மறுபடியும் இப்போதுநான்.

சிறிதுநேரத்தில் விழா துவங்கியது. புன்னகை இளவரசி பட்டம் பெற்ற சிநேகா, பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே வந்தார். ஒரு பள்ளி மாணவி, உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா அல்லது அரேஞ்டு திருமணமாக இருக்குமா என்று கேட்டார்.


அதற்கு பதில் அளிக்க பலமாக யோசித்த சிநேகா, அதுபற்றி எங்க அம்மாவிடம்தான் கேட்க வேண்டும் என்று தனக்கே உரிய சிரிப்பழகில் பதில் அளித்தார்.


அப்போதுதான் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணை கவனித்தேன். காலுக்கு மேல் கால் போட்டிருந்தார். நிறைய அலங்காரம் செய்திருந்தார். அவர் உதட்டில் போட்டிருந்த லிப் ஸ்டிக் தனியாக தெரிந்தது.


அவரிடம், அருகில் இருந்தவர், உங்கள் பொண்ணுதான் கேட்குறாங்களே... நீங்களே பதில் சொல்லிவிட வேண்டியதுதானே... என்றார்.


அதன் பிறகுதான், என்னருகில் சீட்டில் அமர்ந்திருப்பது சிநேகாவின் அம்மா என்பது தெரிந்தது. அவரிடம், பேசிய நபர் சினிமா பி.ஆர்.ஓ. மவுனம் ரவி என்பதும் தெரிந்தது.


சிநேகாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நானும் அதில் ஒருவன். அப்போது அவர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பிக்கவில்லை. பம்மல் கே.சம்பந்தம் படத்தில் சிம்ரனின் தோழியாக - அப்பாஸின் காதல் மனைவியாக வந்துவிட்டு போவார்.


ஆனாலும் அவருக்கு என்னுடைய செய்தியில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைத்தேன். நான் பணிபுரிந்த நாளிதழில் பிட் செய்தியாகவே மேற்படி விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை பிரசுரித்தார்கள்.


அதேநேரம், நான் பணியாற்றிய நாளிதழ் குடும்பத்தில் இருந்து வெளிவரும் மகளிர் மாத இதழில் சிநேகா, அபிராமியின் பேட்டியை அனுப்பி பிரசுரிக்க வைத்தேன். அதில், ஹீரோயினாக அப்போது வலம் வந்த அபிராமியைக் காட்டிலும் சிநேகாவுக்கே அதிக முக்கியத்துவம் தந்து எழுதி இருந்தேன், ஆர்வக் கோளாறில்!



தமிழ் சினிமா உலகில் நம்பர் 1 இடத்தை நோக்கி சிநேகா முன்னேறிக் கொண்டிருப்பதாக அந்தக் கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.


நான் அவ்வாறு எழுதிய அடுத்த ஆண்டே அவர் ஹீரோயின் ஆனார். நம்பர் 1 இடத்திற்கு போட்டிப் போட்டார். எனது பேனா எழுதியது உண்மையானது என்கிற மகிழ்ச்சி அப்போது மட்டுமல்ல, இப்போதும் உண்டு.
 
- நெல்லை விவேகநந்தா
 
அடுத்து கேப்டன் விஜயகாந்த்...

Share:

செவ்வாய், 26 ஜூலை, 2011

வேண்டும் இன்னொரு சுதந்திரம்!


 ஊழல்... ஊழல்... இந்தியாவில் எங்கும் எதிலும் ஊழல்! உலக மெகா ஊழல்களை எல்லாம் நம் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் நிகழ்த்தும்போது நாம் சுதந்திர நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம்கூட சாதாரண பாமரனுக்கும் வந்து விடுகிறது. 50 ரூபாய் பிக்பாக்கெட் அடித்தவனை அடி அடியென அடித்து விசாரித்து தண்டனைக் கொடுக்கும் இந்திய தண்டனைச் சட்டங்கள், ஒன்றரை லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று கோடிகளில் கொள்ளையடிக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கும் கொடுமை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் நிகழ வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 
நாட்டின் பிரதமராக இருந்தாலும் கூட ஊழல் செய்த எவரும் குற்றவாளிகள்தான் என்ற கருத்தில் லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சொல்வதை ஆட்சியாளர்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பது யாருக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும், அரசியல்வாதிகள் ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டுவர எதிராக இருக்கிறார்கள்.

 
ஆக, அரசியல் என்றாலே ஊழல்... ஊழல் என்றாலே அரசியல் என்றாகிவிட்டது. இந்திய சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தையும், இப்போதைய காலக்கட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழல் என்பது கடந்த இருபது ஆண்டுகளில்தான் ஏகபோகத்துக்கும் வளர்ந்துள்ளது.

 
எளிமையோடு தனக்கென, தன் குடும்பத்துக்கென வாழாமல் நாட்டுக்காகவே உழைத்த கர்மவீரர்&பெருந்தலைவர் காமராஜர், தன் இறப்பிற்கு பிறகு விட்டுச் சென்றது சில வேஷ்டியும், சட்டையும்தான்! அப்படிப்பட்டவரின் வாழ்க்கை முறையை பின்பற்றாவிட்டாலும், அவர் செய்த நல்ல விஷயங்களில் நூற்றில் ஒன்றிரண்டையாவது இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

 
ஆகஸ்ட் 15&ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இவ்வேளையில் நாட்டுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் காமராஜரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை இங்கே நாம் புரட்டுவோம்...

 
பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, தனது தாயார் சிவகாமி அம்மையாரின் செலவுக்காக மாதம்தோறும் 120 ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார். முதல்-அமைச்சரின் தாயார் என்பதால், விருதுநகரில் வசித்து வந்த சிவகாமி அம்மையாரைப் பார்க்க தினமும் வெளியூர்களில் இருந்து கட்சி சார்ந்தவர்கள், கட்சி சாராதவர்கள், உறவினர்கள்... என்று பலரும் வந்து செல்வார்கள். காமராஜர் மாதம்தோறும் அனுப்பிய 120 ரூபாய் கட்டுப்படியாகவில்லை. தன்னை வீடு தேடி பார்க்க வந்தவர்களுக்கு சோடா, கலர் என்று அவர் வாங்கிக் கொடுப்பதிலேயே அந்த பணத்தின் பெரும் பகுதி செலவானது.

 
அதனால், தனக்கு மேலும் 30 ரூபாய் சேர்த்து 150 ரூபாயாக மாதம்தோறும் அனுப்பி வைக்குமாறு காமராஜருக்கு தகவல் அனுப்பினார். நாம், நமது தாயார் இதுபோன்று பண உதவி கேட்டால், அவர் கேட்ட தொகைக்கு அதிகமாக கொடுக்க முடியாவிட்டாலும்கூட முடிந்த அளவாவது கொடுத்து விடுவோம்.

 
ஆனால், காமராஜர் அப்படிச் செய்யவில்லை.

 
"யார் யாரோ வீட்டுக்கு வருவார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். வந்தவர்கள் எல்லாம் எனக்கு சோடா வேண்டும், கலர் வேண்டும் என்றா கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமலேயே 120 ரூபாயை வைத்து செலவு செய்யலாமே... ஒருவேளை, அம்மா கேட்டபடி கூடுதலாக 30 ரூபாய் அனுப்பினால், அவரது கையில் கொஞ்சம் காசு சேர்ந்துவிடும். கோவில், குளம் என்று கிளம்பிவிடுவார். அது அவரது உடல்நிலைக்கு ஆகாது. அதனால், இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்" என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார் காமராஜர்.

 
இன்றைய ஆட்சியாளர்கள் இப்படிச் செய்யாவிட்டாலும் கூட மக்கள் பணத்தை கொள்ளையடிக்காமலாவது இருக்கலாம் இல்லையா?

 
ஒருமுறை காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப் பேரனான கனகவேல் என்ற இளைஞர் அவரைப் பார்க்க வந்தார். பேரனிடம் நலம் விசாரித்த காமராஜர், "என்ன விஷயமாக வந்து இருக்கிறாய்" என்று கேட்டார்.

 
அதற்கு அவர், "தாத்தா... நான் எம்.பி.பி.எஸ். படிக்க விண்ணப்பம் அனுப்பி இருந்தேன். இன்டர்வியூவும் நடந்து முடிந்துவிட்டது. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் இடம் கிடைத்துவிடும். எம்.பி.பி.எஸ். லிஸ்ட் தயாராவதற்குள் சொல்லிவிட்டால், நான் டாக்டர் ஆகிவிடுவேன்" என்றார்.

 
உடனே, அந்த இளைஞர் கையில் வைத்திருந்த விண்ணப்பப் படிவத்தை வாங்கிப் படித்துப் பார்த்தார். அந்த படிவத்தில், மே-/பா.காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப்பிள்ளை வீதி, சென்னை என்று முகவரி எழுதப்பட்டு இருந்தது.

 
சட்டென்று கோபமானார் காமராஜர். அந்த கோபத்துடனயே கேட்டார்.

 
"என் பெயரை ஏன் எழுதினாய்?"

 
"இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க. எனக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியை கொடுத்தேன்."

 
"சரி... நீ முகவரி கொடுத்தது இருக்கட்டும். இந்த டாக்டர் படிப்பு, என்ஜினீயர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவர்கள் தேர்வு செய்கிறவர்களுக்குத்தான் சீட் கிடைக்கும். இப்படி எல்லோருக்கும் பொதுவா ஒரு கமிட்டி அமைத்துவிட்டு, இவனுக்கு எப்படியாவது சீட் கொடு என்று சொன்னா, கமிட்டி அமைக்க வேண்டிய அவசியமே இல்லையே..."

 
"தாத்தா... நீங்க என்ன சொல்ல வர்றீங்க?"

 
"அதாம்பா... இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொல்லி இருந்தா உனக்கு கண்டிப்பாக இடம் கிடைக்கும். அப்படி கிடைக்கலேன்னா, கோவையில பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப்படி. அந்த படிப்புக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு. மற்றபடி, உனக்காக நான் சிபாரிசு எல்லாம் செய்ய முடியாது..." என்று ஒரேயடியாக கூறிவிட்டார் காமராஜர். கடைசியில் அந்த இளைஞருக்கு டாக்டருக்கு படிக்க சீட் கிடைக்கவில்லை.

 
தன் ஒரே தங்கை வழிப்பேரனாக இருந்தும்கூட சிபாரிசு செய்ய மறுத்துவிட்டார் காமராஜர். தனக்காக மட்டுமின்றி தன் குடும்பத்துக்காகவும் கூட குறுக்கு வழியில் உதவ மறுத்துவிட்டார்.

 
இன்று அப்படியா நடக்கிறது? எதற்கெடுத்தாலும் சிபாரிசு செய்யும் அரசியல்வாதிகள் அதற்காக பல லட்சங்களை மறைமுகமாக வாங்கி விடுகிறார்கள்.


 
என் காதுக்கு வந்த ஒரு உண்மைச் சம்பவம் இது. முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தி வரும் என்ஜினீயரிங் கல்லூரி அது. அங்கு படித்த ஒரு மாணவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் வந்ததாக அறிவிக்கப்பட்டது. பட்டமளிப்பு நாளன்று பல பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. இதில் உண்மை என்னவென்றால், அவர் கல்லூரிக்கு படிக்கவே வரவில்லை. தேர்வும் எழுதவில்லை. வே-று எப்படி பல்கலைக்கழக அளவில் முதலிடம் வந்தார்? காரணம், அவர் பெரிய இடத்துப் பிள்ளையாம்.

 
இப்போ, இப்படியெல்லாம் கூத்து நடக்குது. இந்த அநியாயங்களை எல்லாம் பார்க்கும்போது மறுபடியும் காமராஜர் பிறக்கக்கூடாதா, நல்லாட்சியைத் தரக்கூடாதா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

 
மேலும், இன்றைய அரசியல்வாதிகள் விளம்பரப் பிரியர்களாக இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மேடை போட்டு தங்களது சுயபுராணத்தை தம்பட்டம் அடிக்கிறார்கள்.

 
இந்த விஷயத்திலும் காமராஜர், காமராஜர்தான்!

 
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1953&56&ம் ஆண்டில் இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் தேர்வு கட்டணம் 300 ரூபாய் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். யாரிடம் உதவிக் கேட்கலாம் என்று அவர் எண்ணியபோது, அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் நினைவுக்கு வந்தார். உடனே அங்கே ஓடிச் சென்று நிலைமைக் கூறினார்.

 
தமிழக மக்களின் கல்விக் கண்ணை திறந்தவர் ஆயிற்றே காமராஜர். சட்டென்று அந்த மாணவருக்கு உதவினார். தன்னைப் பெற்றத் தாய் 30 ரூபாய் கூடுதலாக கேட்டதற்கு தர மறுத்த அதே காமராஜர், தனது உதவியாளர் வைரவன் மூலம் சொந்தப் பணத்தில் இருந்து 300 ரூபாயைக் கொடுத்தார்.

 
அந்த பணத்தை வாங்கிக் கொண்ட மாணவர், "ஸார்... தாங்கள் எனக்கு செய்த இந்த உதவியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தால், கல்லூரி மாணவருக்கு முதல்வர் உதவி சென்று செய்தி போடுவார்கள். நான் அதைச் செய்யட்டுமா?" என்று கேட்டார்.

 
சட்டென்று கோபமான காமராஜர், "இந்த மலிவுப் பிரச்சாரம் எல்லாம் வேண்டாம். நீ படிக்க வேண்டியவன். நன்றாக படித்து குடும்பத்தைக் காப்பாற்று..." என்று கூறி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். பின்னாளில், அதே மாணவர் அரசுத்துறையில் பெரிய அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இதுதான் காமராஜர்! அதனால்தான் அவரை பெருந்தலைவர் என்கிறோம்.

 
இன்றெல்லாம் அரசியல்வாதிகள் பதவியைத்தான் பெரிதாக நினைக்கிறார்கள். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். இந்த விஷயத்திலும் காமராஜர் மாறுபட்டே நிற்கிறார்.

 
1963&ல் காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் அதிகம் இருந்தது. இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமர் நேரு ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மாநில காங்கிரஸ் தலைவர்களும் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், காமராஜர் சொன்னதுதான் சட்டென்று எல்லோரையும் ஈர்த்தது. அவரது திட்டத்தை, 'கே பிளான்', அதாவது 'காமராஜர் திட்டம்' என்றே அழைத்தார்கள்.
 
அரசியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். வயதில் மூத்தவர்கள் பதவிகளில் இருந்து விலகி இளையோருக்கு வழிவிட வேண்டும். அதேநேரம், பதவி விலகியவர்கள் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் - இதுதான் கே பிளான்.

 
திட்டத்தை கூறிய காமராஜர், தானே அதற்கு முன்மாதிரியாக நடந்து கொண்டார். காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர், முழுநேர கட்சிப் பணியில் ஈடுபட்டார்.

 
அப்போது திடீர் திருப்பமாக நேரு மரணமடைந்துவிட... அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது, காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்ததால் அவரையே பலரும் பிரதமராக முன்மொழிந்தனர். கட்சிக்காக முதல்வர் பதவியையே துறந்தவரிடம், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றால் எப்படி?

 
பிரதமர் பதவியே ஏற்க மறுத்த காமராஜர், அந்த பதவிக்கு லால்பகதூர் சாஸ்திரி பெயரை முன்மொழிந்தார். அவரே பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 
1966&ம் ஆண்டு, பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும் இறந்துவிட... மறுபடியும் யார் பிரதமர் என்கிற கேள்வி எழுந்தது. மீண்டும் காமராஜர் பெயரே பலரால் சிபாரிசு செய்யப்பட்டது. வழக்கம்போல் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார் காமராஜர். நேருவின் மகளான இந்திராகாந்தியே பிரதமராக வரட்டும் என்று அறிவித்தார்.

 
இப்படி அரசியலிலும் பிறருக்கென வாழ்ந்த காமராஜர், மிக மிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். இன்றுள்ள அரசியல் தலைவர்கள் 24 மணி நேரமும் ஏசியிலேயே வலம் வருகிறார்கள். ஏசி அறையிலேயே தூங்குகிறார்கள். ஆனால், காமராஜர் அப்படி கிடையாது. படுக்கை அறையில் படுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மரத்தடியில் படுக்கவும் தயங்க மாட்டார்.

 
இதற்கு உதாரணமாக அவர் முதல்வராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்...

 
ஒருமுறை, முதல்வராக இருந்த காமராஜர் மதுரைக்குச் சென்றார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென்று கரன்ட் கட் ஆகிவிட மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால், கரன்ட் கட் சரி செய்ய நேரம் ஆனது. ஆனால், காமராஜரோ களைப்பால் அவதிப்பட்டார்.

 
உடனே தனது உதவியாளரைப் பார்த்தவர், "இப்போதைக்கு கரன்ட் வர்ற மாதிரி தெரியவில்லை. கட்டிலை மரத்தடியில் போடுங்கள். நான் அங்கேயே படுத்துக் கொள்கிறேன்..." என்றார்.

 
அடுத்த நிமிடமே ஒரு கட்டில் அங்கிருந்த வேப்பமரத்தின் அடியில் போடப்பட்டது. அதில் படுத்துக்கொண்டார் காமராஜர். அப்போது, அவருக்கு அருகில் போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புக்காக வந்து நின்றார்.

 
அவரைப் பார்த்த காமராஜர், "நீ ஏன் இங்கு வந்து நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்கள். நீ போய் தூங்கு..." என்று கூறி அவனை அனுப்பிய பிறகுதான் படுத்து தூங்கினார்.

 
இப்படி அநியாயத்துக்கும் எளிமையாக வாழ்ந்ததால்தான் அவர் தனக்கென சொத்துக்கள் சேர்க்க மறந்துவிட்டார். மறந்துவிட்டார் என்பதை விட மறுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 
 

காமராஜரின் வாழ்க்கைப் பாடத்தை இன்றைய அரசியல்வாதிகள் கொஞ்சமாவது புரட்டிப் பார்த்தால், இன்று கட்டவிழ்த்து விடப்பட்டு கிடக்கும் லஞ்சம், ஊழல்களுக்கு தானே விடிவு பிறந்துவிடும். அதற்கு தேவை இன்னொரு அரசியல் சுதந்திரம்! அதற்கு வேண்டும் இன்னொரு பெருந்தலைவர் காமராஜர்!

 
- நெல்லை விவேகநந்தா
 
Share:

வெள்ளி, 27 மே, 2011

காதலில் காமம் கலக்கலாமா?


மதிய வெயிலின் உக்கிரம் தணிந்து, மாலை வேளையின் ஆரம்பத்திற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து இருந்தது. எப்போதும் ஜே... ஜே... என்று காணப்படும் சென்னை மெரீனா பீச், வழக்கமான உற்சாகத்தால் பரபரத்துக் கொண்டிருந்தது. எப்போதும்போல் காதலர்களும் ஆங்காங்கே அமர்ந்து தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பூமியை முத்தமிட்டது மாலையை வரவேற்கும் வெயிலாக இருந்தாலும், அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விநோதமான குடை பிடித்திருந்தனர், மெரீனா பீச்சில் பூத்திருந்த காதலர்கள். ஆம்... பெரும்பாலான காதலிகளின் துப்பட்டாவே அவர்களுக்கு குடையாக மாறி நிழல் தந்தது.

காதலர்கள் இருவரும் தனிமையில் - மிக நெருக்கத்தில் இருந்ததால், அக்கம் - பக்கம் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் லவ்விக் கொண்டிருந்தனர்.

ஒருசில காதலர்கள் கடற்கரையோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கடலின் பால் நுரை அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.
அவர்களில் ஒருசிலர் ஆர்வ மிகுதியில் கடலுக்குள் இறங்கி குளிர்ந்த காற்றின் இதத்திற்கும், அலைகளின் இசைக்கும் ஏற்ப ஆட்டம் போட்டனர். அலை வேகமாக வந்து மோதும்போது காதலி காதலனை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அவனோ இதுதான் தக்க சமயம் என்று அவளை எசக்குபிசக்காக பிடித்து சிலிர்த்துக்கொண்டான். 


காதலனின் அந்த தீண்டல் காதலிக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அந்த தீண்டல் தந்த சுகத்தை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்தாள். இதற்காக, அலை வந்து மோதுவதற்கு முன்பே இவள் காதலன் மீது மோதி, அவனோடு அலையில் விழுந்து உருண்டு புரண்டாள்.


இதற்கிடையில், கடல் அலைகளோடு விளையாடி மூழ்காமல் காதல் முத்தெடுத்த ஜோடிகள் ஆங்காங்கே கிடைத்த நிழலில் ஒதுங்கி அமர்ந்து கொண்டனர். எவரது பார்வையும் தங்களை படமெடுக்காததால் விரலின் ஸ்பரிசங்களால் சிலிர்த்துக்கொண்டார்கள். காதலியின் அழகு பொங்கும் அங்கங்களில் அனுமதியின்றி இடம் பிடித்திருந்த கடல் மண்ணை, அவள் அனுமதியின்றியே அகற்றி, தனது இதயத்தின் லப்-டப் வேகத்தை ஏற்றிக்கொண்டான் காதலன். கூடவே, காதலியின் இதயத் துடிப்பும் தங்கத்தின் விலைபோல் சட்டென்று எகிறியது.


- இப்படியாக, மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க, முதன் முதலாக காதலை வெளிப்படுத்திய வேகத்தில் அங்கே காலடி எடுத்து வைத்தார்கள் ஆனந்தும், அமுதாவும்!


வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்ததால் கையோடு கொண்டு வந்திருந்த குடையை விரித்து பிடித்துக்கொண்டாள் அமுதா. அந்த சின்ன லேடீஸ் குடைக்குள் வெயிலுக்கு பயந்து அடைக்கலம் புகுந்து கொண்டான் ஆனந்த்.

அந்த சின்னக்குடை தந்த சிறிய நிழலில் கையோடு கை உரசிக்கொண்டு நடந்தார்கள் இருவரும். இதற்கு முன்பு இப்படி நெருங்கிய உரசலோடு இருவரும் சென்ற அனுபவம் கிடையாது என்பதால், அவர்கள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் மவுன போராட்டம் நடத்தின வார்த்தைகள்.


சிறிது தூரம்தான் நடந்திருப்பார்கள். காற்று வேகமாக வீசியதால் அமுதாவின் மென்மையான பிடியை விட்டு விலகி தனியாக பறந்தது குடை. அதை பிடிக்க இருவரும் ஓடினர். சிறிதுதூரம் ராக்கெட் வேகத்தில் பறந்த குடை, பயனற்று கிடந்த ஒரு படகின் மீது மோதிக்கொண்டு நின்றது. படகை தள்ளும் முயற்சியில் குடைக்கு தோல்வியே கிடைத்ததால், அமுதாவும், ஆனந்தும் அதை எளிதில் பிடித்துக்கொண்டனர்.


கை நழுவிப்போன குடையை எடுத்துவிட்டு அவர்கள் நிமிர்ந்தபோதுதான் படகுக்கு அடுத்த பக்கத்தில் அந்த காட்சியை கண்டார்கள். தனது மடியில் பூத்திருந்த காதலியை முதுகை வளைத்து தலையால் மூடி காதல் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான் காதலன்.


அதைப் பார்த்த மாத்திரத்தில் அமுதாவும், ஆனந்தும் பேச்சு வராமல் தவித்தனர். அந்த தவிப்புக்கு விடை கொடுக்க, அங்கே கிடந்த இன்னொரு படகின் சிறிய நிழலில் அமர்ந்து கொண்டனர். இருவரும் தோளோடு தோள் உரசி இருந்தனர்.


இருவரது மனதிலும், காதல் ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ஜோடியின் காட்சியே பலமாக பதிவாகி இருந்ததால், அவர்களது மனமும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது. அந்த குரங்கு மனதிற்கு அணைபோட வேகமாக ஓடி வந்து கரையை முத்தமிட்டுச் சென்ற கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டனர். 


ஆனாலும், அவர்களுக்குள் காதல் தீ பற்றி எரிந்தது. மெல்ல அமுதாவை திரும்பிப் பார்த்தான் ஆனந்த். துப்பட்டா இல்லாத அவளது டாப்சும், அமர்ந்ததால் இன்னும் இறுக்கமாகிப்போன அவளது டைட் ஜீன்ஸ் பேண்ட்டும் அவனை என்னமோ செய்தன. வெளியே வர போராடிக் கொண்டிருந்த அவளது பெரிய ‘மனசும்‘ அவனை உசுப்பேற்றிவிட்டது. அவள் மீது கணப்பொழுதில் மோகம் கொண்டவன், எதிர்பாராதவிதமாக அவளது உதட்டில் இச் மழை பொழிந்துவிட்டான்.

ஆனந்த் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்காத அமுதா சட்டென்று எழுந்துவிட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அடிக்க வருவதுபோல் கையை தூக்கினாள்.


“நீ இப்படி நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஐ லவ் யூ சொன்ன முதல் நாள்லயே நீ இப்படின்னா, நிச்சயம் நம் காதல் ஜெயிக்காது. இப்பவே, ஏன்... இந்த நிமிஷமே பிரிஞ்சுக்குவோம். இனி நீ யாரோ, நான் யாரோ...” என்று படபடவென்று வார்த்தைகளை வெடிக்க விட்டவள், அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன்னை அறியாமல் செய்த தவறுக்காக பரிதவித்து நின்றான் ஆனந்த்.


இப்போதைய பெரும்பாலான காதலர்கள் மோதிக்கொள்வது இந்த விஷயத்தில்தான். ‘என்னைப் பார்த்து அவன் காதலிக்கவில்லை... என் உடலைப் பார்த்துதான் காதலித்து இருக்கிறான்...’ என்று இந்த விஷயத்தில் காதலிகள் குற்றம்சாட்டினால், அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். காதல் என்பது அன்பும், காமமும் நிறைந்ததுதான்.


நெய் வேண்டும் என்றால் பாலை முதலில் நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு, அதை மோர் ஆக்க வேண்டும். அந்த மோரை கடைந்தால் வெண்ணெய் திரண்டு வரும். அந்த வெண்ணெயை உருக்கினால்தான் நாம் விரும்பும் நெய் கிடைக்கும்.


காமமும் அப்படியே! காதலி கிடைத்துவிட்டாள் என்பதற்காக அவள் மீது சட்டென்று மோகம் கொண்டுவிடக்கூடாது. பொறுமையாக காதலை வளர்த்து காதல் கைகூடி திருமணத்தில் முடிந்த பிறகுதான் அதை அரங்கேற்ற வேண்டும். அதுதான் உண்மைக் காதலுக்கு அழகு.


அதற்கு என்ன செய்யலாம்?


* காதல் மொழி பேசுவதில் முக்கிய இடம் கண்களுக்குத்தான். அந்த கண்களின் பார்வையில் திருமணம் கைகூடும் வரையில் ஆபாசம் வெளிப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதலி, அவளே விருப்பப்பட்டு சற்று கவர்ச்சியான ஆடை அணிந்து வந்தாலும்கூட, ‘வாட் எ பியூட்டி!‘ என்று பாராட்டி வியக்கலாமேத் தவிர, அந்த ஆடையில் ஆபாசத்தை கண்களால் தேடுவது நல்லது அல்ல.


* காதலியிடம் நேருக்கு நேராக நின்று பேசும்போது அவளது கண்களைப் பார்த்தே பேசப் பழகிக் கொள்ளுங்கள். அந்த ‘கண்ணோடு கண்ணான பார்வை‘ உங்கள் கண்ணியத்தை மேம்படுத்தும். 

*  காதலி அணிந்திருக்கும் உள்ளாடை கூட அப்பட்டமாக தெரிந்தால், அதை தவறு என்று சுட்டிக்காட்டாமல், ஆடை அணிந்து கொள்ளும் நேரத்தை அதிகரித்தால் இன்னும் அழகாக ஜொலிக்கலாமே... என்று அட்வைஸ் கொடுங்கள். அவள் உண்மையை புரிந்து கொள்வாள். உங்கள் மீதான நல்ல எண்ணமும் அவளிடம் அதிகரிக்கும்.

* ஒரு நிமிடம் பேசினாலும், மணிக்கணக்கில் ‘கடலை‘ போட்டாலும் காதலியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அப்போது, அவளை அழகாக வர்ணிக்கலாமேத் தவிர, ஆபாசமாக வர்ணிக்கக்கூடாது.

* காதலியுடன் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுக்குத் தெரியாமல் அவள் அழகை ரசிப்பது நாகரீகம் அல்ல. அதேநேரம், நீங்கள் ரசிப்பதை அவள் பார்த்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அளவோடு அந்த செயலை தொடரலாம். இதே செயல் உங்களுக்குள் தொடர்ந்தால், பின்னாளில் பிரச்சினை என்பது மட்டும் நிச்சயம். திருமணத்திற்கு பின்னர்கூட, ‘அன்றே நீ அப்படித்தானே...?‘ என்கிற ரீதியில் கூட பிரச்சினை ஏற்படலாம்.

* பார்க், பீச், ஹோட்டல்... என்று ஊர் சுற்றும் காதலர்கள் மனதில் திருமணத்திற்கு முன்னரே செக்ஸை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எழுந்துவிடக் கூடாது. இந்த எண்ணத்தை காதலன் காதலியிடம் மறைமுகமாக ஏற்படுத்தினால், அச்செயல் அவனை தவறானவனாகவே அடையாளம் காட்டும்.

* முக்கியமாக, காதலன்கள் மனதில் காமம் எழ சூழ்நிலைகள் மட்டுமின்றி காதலிகளும் மற்றொரு வகையில் காரணமாக அமைகின்றனர். அதற்கு, அவர்களது ஆடைதான் காரணம். அந்த ஆடையில் குடும்பப் பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எளிதில் எல்லை மீற மாட்டான்.
Share:

செவ்வாய், 17 மே, 2011

கண்டதும் காதல் நிஜமா?

இப்போதெல்லாம் நம் இளைஞர் - இளைஞிகளிடம் கண்டதும் பச்செக்கென்று காதல் ஒட்டிக்கொண்டு விடுகிறது. பீச்சிலோ, பஸ் ஸ்டாப்பிலோ ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டால் அவள் பின்னாடியே போய்விடும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன்... நம் தமிழ் காதல் சினிமாக்களும் இத்தகைய ஒரு படிப்பனையே பெரும்பாலும் ஏற்படுத்துகின்றன.


ஆராய்ச்சி
யாளர்களிடம், கண்டதும் காதல் கொள்வது என்பது உண்மையா? என்று கேட்டால், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அப்படியென்றால், அழகான ஒரு இளம்பெண்ணை கண்ட மாத்திரத்தில் ஒருவித கிறக்கம் ஒரு இளைஞனிடம் ஏற்படுகிறதே... அதன்பெயர் காதல் இல்லையா? என்று விரிவாக கேட்டால், அதுபற்றி பெரிய விளக்கமே கொடுக்கிறார்கள்.


ஒரு இளம் ஆண் அழகான இளம்பெண்ணை பார்க்கும்போதோ அல்லது ஒரு அழகான இளம்பெண் அழகான வாலிபன் ஒருவனைக் காணும்போதோ அவர்களது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று உணர்கிறார்கள். பெக் அடிக்காமலேயே ஒருவித கிக் நிலைக்கு ஆளாகிறார்கள்.


நிச்சயமாக இதற்கு பெயர் காதலே இல்லை. காமம்தான். ஆம்... தன் மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறையாகப் பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி காம மட்டுமே என்கிறார் லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர் டான்மாய் சர்மா.


இவர், கண்டதும் காதல் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்துள்ளார். 18 முதல் 50 வயது வரையிலான 80 பேர் இவரது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் ஆண், பெண்களை அருகருகே நெருக்கமாக அமர வைத்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர்களிடம் பலவித உணர்ச்சிகள் கொந்தளித்தன.


தனக்கு முன்னால் லோ நெக்கில் அமர்ந்திருந்த இளம்பெண்களைப் பார்த்த ஆண்களுக்கு அந்த பீலிங்கின் வேகம் தாறுமாறாக இருந்தது. ஒருசிலர் எதிர் பாலினரை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அசையாமல் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் நெளிந்தனர்.

சிறிதுநேரத்திற்கு பிறகு எதிர்பாலினரை பார்க்கும்போது எத்தகைய உணர்ச்சிகளுக்கு ஆளானார்கள் என்பது பற்றிய விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.


அப்போது பெரும்பாலானவர்கள், தனது அருகே இருந்த எதிர்பாலினர் மீது காமம் கொண்டதாக தெரிவித்தனர். ஒருசிலர், அடுத்த நிமிடமே தனக்கு எதிராக இருந்த எதிர்பாலினருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மோகம் ஏற்பட்டதாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டனர்.


தொடர்ந்து, டாக்டர் டான்மாய் சர்மாவின் ஆய்வு வேறு மாதிரியாக இருந்தது.     மூலம் ஆய்வு செய்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.


ஆய்வின் முடிவு குறித்து அவர் கூறியதாவது :


 இந்த ஆராய்ச்சி மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும், பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் காம  உணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமான அளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இந்த உணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்று தெரிவித்தார்.

Share:

சனி, 23 ஏப்ரல், 2011

சாய்பாபாவின் சரித்திரம்


மக்களை நல்வழிப்படுத்த மகான்கள் அவ்வபோது அவதரிப்பார்கள். அந்த வகையில், அவதாரம் எடுத்தவர் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா.

சாய்பாபாவின் சரித்திரம்: 


சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். 


தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, "என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். 

அதற்கு சாய்பாபா, "நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: 


பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு ¬முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

பொன் மொழிகள்

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.
* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.
* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.
* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.

பாபாவின் சேவைகள்...
* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்த வங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
Share: