வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நீங்களும் செய்யலாம் விதவிதமான கொழுக்கட்டைகள்


விநாயகர் சதுர்த்தி அன்று மோதகம் மற்றும் கொழுக்கட்டை விநாயகருக்கு நைவேத்தியம் செய்வார்கள். நீங்களும் செய்து அசத்த சில கொழுக்கட்டை செய்வது தொடர்பான குறிப்புகள் :


எள் பூரண கொழுக்கட்டை

தேவையானவை :

வெல்லம் - 1/4 கிலோ
எள் - 50 கிராம்
பச்சரிசி - 2 ஆழாக்கு
ஏலக்காய் - 4
உப்பு, சர்க்கரை - சிறிதளவு

செய்முறை :

1. பச்சரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்துங்கள். அதை மெஷினிலோ, மிக்சியிலோ அரைத்து மாவாக்கி, அதை இட்லி தட்டில் வைத்து அவித்துக்கொள்ளுங்கள்.

2. அவித்த மாவை வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்த 2 டம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி அந்த மாவை பிசையுங்கள். மாவு பிசையும்போது ஊற்றக்கூடிய தண்ணீர் எக்காரணம் கொண்டு சூடு குறைந்துவிடக்கூடாது.

3. தொடர்ந்து, ஏலக்காயை சிறிது சர்க்கரை வைத்து பொடித்து, அதை அந்த மாவுடன் சேர்த்து பிசையுங்கள். மாவு தளதளவென்று வந்ததும், அதை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

4. தேர்ந்தெடுத்த வெல்லத்தை பொடித்து, அதனுடன் எள்ளையும் தூளாக்கிப் போடுங்கள்.

5. இப்போது கைகளில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பெரிய எலுமிச்சை பழம் அளவுக்கு மாவை எடுத்து, கையிலேயே அதை சிறு தோசை போன்று தட்டிக்கொள்ளுங்கள். அதனுள் சர்க்கரை, ஏலப்பொடி கலந்த பூரணத்தை வைத்து சோமாஸ் போல மூடிவிடுங்கள். இப்படியே மாவு அனைத்தையும் செய்யுங்கள்.

6. அவை அனைத்தையும் இட்லி தட்டில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும். மிகவும் ருசியான எள் பூரண கொழுக்கட்டை ரெடி!


மோதகம்

தேவையானவை :

வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் - ஒரு மூடி
கோதுமை மாவு - ஒரு கப்
எள் - 1/4 கப்
அரிசி மாவு - ஒரு கப்
எண்ணெய் - 250 கிராம்
ஏலக்காய் - 4
ஜாதிக்காய் - 2

செய்முறை :

1. எள்ளை சுத்தம் செய்து கொள்ளவும். வெல்லத்தை பொடித்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

2. தொடர்ந்து துருவிய தேங்காயில் சிறிது எடுத்து, அதை நெய்யில் வதக்கி பொடிக்கவும். வெல்லப்பொடியில் எள்ளை பொடித்தோ அல்லது முழுதாகவோ சேர்க்கவும். வறுத்த தேங்காயையும் அதனுடன் சேருங்கள். மேலும் அதனுடன், அரை ஸ்பூன் ஜாதிக்காய்த் தூள், ஏலக்காய்த் தூளை சேர்த்து கெட்டியாக பிசையவும். பிசைந்து முடித்ததும் எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.

3. பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டையை, தோசை மாவு பதத்தில் நீர்விட்டு தயார் செய்த கோதுமை&அரிசி மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் போட வேண்டும். அவற்றை பொன்னிற உருண்டைகளாக பொரித்து எடுத்து எண்ணெயை வடிய விடவும்.

4. இந்த உருண்டை ஒரு மாதம் வரை கூட கெடாமல் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் இதை விரும்புவார்கள்.

பின் குறிப்பு : வேறு முறையிலும் மோதகம் தயார் செய்யலாம். முதலில் பூரணம், கொழுக்கட்டை மாவை தயார் செய்து கொள்ள வேண்டும். கொழுக்கட்டை மாவில் கிண்ணம் போன்று செய்து, அதற்குள் பூரணத்தை வைத்து, முட்டை போல் பிடித்து நீராவியில் வேக வைத்தால் இந்த வகை மோதகம் ரெடி!


 காரக் கொழுக்கட்டை

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 400 கிராம்
பழுத்த மிளகாய் - 8
தேங்காய் துருவல் - 1/4 மூடி
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தளை - சிறிதளவு
உப்பு, கடுகு, உளுந்தம்பருப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். அந்த அரிசியையும், மிளகாயையும் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைக்கும்போது தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, கொழுக்கட்டை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

2. மாவை அரைத்த பின்னர், உப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தளை ஆகியவற்றை சேர்த்து, மீண்டும் லேசாக கிரைண்டரில் அரைத்து எடுக்கவும்.

3. பெரிய வாணலியில் நல்லெண்ணெய் கொண்டு கடுகு, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை தாளித்து, அதில் அரைத்த மாவையும் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும்.

4. தொடர்ந்து, அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி வேக வைப்பதுபோல் வேக வைக்க வேண்டும். புட்டுக்கு மாவு அவிப்பது போலவும் அவித்தெடுக்கலாம்.

5. நன்றாக வெந்ததும் இறக்கி விடுங்கள். சுவையான காரக் கொழுக்கட்டை ரெடி!

பின்குறிப்பு : இந்த காரக் கொழுக்கட்டைக்கு புதினா அல்லது கொத்தமல்லி சட்னியை தொட்டுக்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.


உப்பு கொழுக்கட்டை

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு, உப்பு, உளுந்து, எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
இவற்றுடன் கூடுதலாக ஒரு பிடி கடலை பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

1.அரிசி மற்றும் கடலை பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவிடவும்.

2. கடலை பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து, முன்பு அரைத்த கடலை பருப்பு மாவுடன் சேர்த்து, உப்பும் கலந்து கிளறிக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுந்து ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

4. பின்னர், அதில் காய்ந்த மிளகாய், ஒரு பிடி கடலை பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

5. கலவை நன்றாக வதங்கியதும், அதில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அரிசி, பருப்பு கலவையை கொட்டி கெட்டியாகும்வரை நன்கு கிளறவும்.

6. கெட்டியான பதம் வந்ததும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள்.

7. ஓரளவுக்கு ஆறிய பிறகு அந்த மாவு கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

8. சுவையான உப்பு கொழுக்கட்டை ரெடி!

பின்குறிப்பு : மாலைநேர டிபனாக இந்த கொழுக்கட்டையை செய்து பரிமாறி அசத்தலாம்.

தொகுப்பு : தேவிகா ஆனந்த்.

Share:

வியாழன், 9 செப்டம்பர், 2010

விநாயகருக்கு எலி வாகனம் ஆனது எப்படி?

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 
கந்தர்வ மன்னனான அவனது பெயர் கிரவுஞ்சன். விநாயகரின் பக்தனும் கூட! கந்தவர்கள், நினைத்த மாத்திரத்தில் ஆகாய மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் செல்பவர்கள்தானே?

அதன்படி ஒருநாள் இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன். திடீரென்று பூமியில் ஓரிடத்தில் ஏதோ ஒன்று தனது கண்களை வசீகரிக்க... அப்படியே நின்றான். பார்வையை அந்த இடத்தை நோக்கி செலுத்தினான்.

‘ஆஹா... என்னவொரு அழகு?’ என்று தன்னை அறியாமலேயே புகழ்ந்தான். ஆம்... அவன் பார்த்தது ஒரு அழகான இளம்பெண்ணை. அதுவும், ஒரு ரிஷி பத்தினியை!

அவள் பெயர் மனோரமை. சவுபரி என்ற முனிவரின் மனைவியான அவள் மிகவும் பேரழகி. எவ்வளவு பேரழகியாக இருந்தாலும், எளிமையாக இறைபக்தியோடு வாழ்ந்து வந்தாள் அவள்.

தனது குடிலில், செடியில் இருந்து பறித்த பூக்களை அவள் மாலையாக தொடுத்து கொண்டிருந்தபோதுதான் கிரவுஞ்சன் பார்வையில் சிக்கிவிட்டாள். அவளது அழகில் மயங்கிய அவன் அவளது குடிலுக்கு வந்தான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்துவிட்டாள் மனோரமை. எதிரில் வருவது யார்? என்பது தெரியாததால் குழப்பமான பார்வையை அவன் மீது வீசினாள். ஆனால், அவனோ போதை தலைக்கேறியவன்போல் அவளது அழகை ரசித்தபடியே நெருங்கினான்.

இப்போது அவளை மிகவும் அருகில் நெருங்கிவிட்டான். ரிஷி பத்தினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளே பேசினாள்.

“தாங்கள் யார் என்று தெரியவில்லை. என் கணவரும் இப்போது இங்கே இல்லை. தங்களுக்கு என்ன வேண்டும்?” - மனோரமை கேட்டாள்.

அவளிடம் பதில் சொல்லும் நிலைமையிலா இருந்தான் கிரவுஞ்சன்? அவளது அழகை பருகிய மாத்திரத்தில் போதையில் அல்லவா திளைத்துக் கொண்டிருந்தான்?

மனோரமை கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, பார்வையாலேயே தின்று விடுவதுபோல் அப்படியரு பார்வை பார்த்தான்.

கூனிக் குருகி, லேசாக தலை குனிந்து நின்றிருந்தாள் மனோரமை. பருவச் செழிப்பு அவளது மேனியில் நிறையவே கொட்டிக் கிடந்தது. அவளது மீனைப் போன்ற விழிகளும், சிவந்த கன்னங்களும், சிறுத்த இடுப்பும், வாழைத்தண்டு கால்களும் அவனை என்னமோ செய்தன.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, வேகமாக அவளது கையை பற்றினான். தன் மார்போடு இறுக அணைத்தான்.

இதை எதிர்பார்க்காத மனோரமை அவன் பிடியில் இருந்து விடுபட திமிறினாள். ‘உதவி... உதவி...’ என்று கத்தினாள்.

குடிலை நெருங்கிக் கொண்டிருந்த சவுபரி முனிவர், தனது பத்தினி மனைவியின் அலறல் கேட்டு அங்கே வேகமாக ஓடி வந்தார். தனது மனைவியை ஒரு கந்தர்வன் கவர முயன்று கொண்டிருப்பதைக் கண்ட அவர் கோபத்தில் பொங்கியெழுந்தார்.

“அடே கந்தர்வா...” என்று அவரது கொந்தளிப்பான குரலில் திடுக்கிட்டு நின்றான் கிரவுஞ்சன். அப்போதுதான் அவனுக்கு செய்த தவறு நினைவுக்கு வந்தது. மனோரமையை தனது பிடியில் இருந்து விட்டுவிட்டு முனிவர் பக்கம் திரும்பினான்.

முனிவரின் கண்கள் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. அடுத்த நொடியே அவனுக்கு சாபமிட்டார்.

“எந்த ஆடவனையும் ஏறெடுத்துப் பார்க்காத என் தர்ம பத்தினியின் கையை பிடித்து இழுத்து, அவளை அடைய முயன்ற உன்னை மன்னிக்கவே முடியாது. இப்போதே நீ, மண்ணைத் தோண்டி வளையில் ஒளியும் பெருச்சாளியாக மாறுவாயாக...” என்று சபித்தார் முனிவர்.

கிரவுஞ்சனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டினான்.

“என்னை மன்னித்து விடுங்கள் முனிவரே... தங்கள் தர்ம பத்தினியின் பேரழகு என் கண்களை மறைத்துவிட்டது. அவளது அழகில் மங்கி, இப்படியரு தவற்றை செய்ய துணிந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். சபித்து விடாதீர்கள்...” என்ற கிரவுஞ்சன் முனிவரின் காலில் கண்ணீர் விட்டு அழுதான்.

“தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனாலும், உன் மேல் எனக்கு இரக்கம் ஏற்படுகிறது. கொடுத்த சாபத்தை திரும்ப பெற முடியாது. நிச்சயம் நீ பெருச்சாளியாக மாறித்தான் ஆக வேண்டும்”.

“அப்படியென்றால், எனக்கு பாவ விமோசனமே கிடையாதா?”

“கண்டிப்பாக உண்டு. அந்த விநாயகப் பெருமான் உன்னை காப்பாற்றுவார்...” என்றார் சவுபரி முனிவர்.

அடுத்தநொடியே மிகப்பெரிய பெருச்சாளியாக மாறிய கிரவுஞ்சன், நேராக காட்டுக்குள் ஓடினான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.

புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருந்த ஒரு மகாராணிக்கு ஐங்கரனாக அவதாரம் பிறந்த விநாயகரும் அதே பகுதியில் அவதரித்தார்.

ஒருநாள் பெருத்த அட்டகாசத்தில் ஈடுபட்ட கிரவுஞ்ச பெருச்சாளி மீது தனது பாசக்கயிற்றை வீசினார் விநாயகர். அதில் சிக்கிக்கொண்ட பெருச்சாளியால் தப்பிக்க முடியவில்லை. அப்போதுதான் அதற்கு, தன் மீது பாசக்கயிற்றை வீசியது விநாயகர் என்பது புரிந்தது. தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது.

கருணையே வடிவான விநாயகர் கிரவுஞ்ச பெருச்சாளியை மன்னித்தார். அதை, தனது வாகனமாகவும் ஏற்றுக்கொண்டு அருள் வழங்கினார்.

இப்படித்தான் விநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது.
    


Share:

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு சந்திப்பு - பாகம் 2



ஜூ.வி., பொறுப்பாசிரியர் திரு.குள.சண்முகசுந்தரம் உடனான பேட்டியின்  தொடர்ச்சி...

கேள்வி : ஜூ.வி.,யில் விளம்பரம் அதிகம் வருவது இல்லையே... இடப்பற்றாக்குறையா? அல்லது சமூக அவலங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைபாடா?

பதில் : சமூக அவலங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். மற்றபடி, நாங்கள் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விளம்பரம் தேடி வந்தால் மாத்திரமே வாங்கிக்கொள்வோம். ஒரு செய்தியை பிரசுரிக்க ஒரு விளம்பரத்தை நிறுத்திதான் ஆகவேண்டும் என்றால், நிச்சயமாக அந்த விளம்பரத்தை நிறுத்திவிடுவோம். ஜூ.வி.யை பொறுத்தவரை செய்திகளுக்கே முதலிடம்!

கேள்வி : சமூக சேவையில் ஜூ.வி., தானே இறங்கியது உண்டா?

பதில் : நிறைய உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக விகடன் நிறுவனம் செய்துள்ளது. செய்தும் வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டு எலிக்கறியை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு ஆளான நரிமணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உதவி செய்தோம். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு மாதம்தோறும் 30 கிலோ அரிசி வழங்கினோம். எங்கள் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அனைவருமே இந்த சேவையில் இறங்கி ஈடுபட்டோம். இதுபோன்று பல உதவிகளை செய்துள்ளோம். தற்போதும் இது தொடர்கிறது.

கேள்வி : அரசியல், ஊழல், கற்பழிப்பு, கொலை போன்ற செய்திகளை வெளியிடும்போது கொலை மிரட்டல் அல்லது வேறுவிதமான பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?

பதில் : என்னை பொறுத்தவரை கொலை மிரட்டல் அதிகம் வருவதில்லை. ஆனால், மிரட்டல் நிறையவே வரும். செய்தி சேகரிக்க செல்லும் இடங்களில் அடி-உதை விழுந்ததும் உண்டு. நானும் இந்த வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பற்றிய ஒரு சிறிய பாக்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தோம். காலை 7 முதல் 10 மணி, மாலை 7 முதல் 10 மணி என அவரது தேர்தல் பிரச்சார நேரம் முரசொலி இதழில் வெளியாகி இருந்தது. அதை வைத்து, கிளப் நேரம் போக மற்ற நேரம் ஓட்டு கேட்கப் போகிறார் போலிருக்கு என்று அந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம். செய்தி வெளியானபோது அவர் இதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவர் வெற்றிபெற்ற பின்னர், வெற்றி குறித்து அவரிடம் கேட்க சென்றபோது, அவருடன் இருந்த சிலர் மேற்கண்ட செய்தி வெளியிட்டதற்காக என்னை தாக்கிவிட்டார்கள். உடனே போலீசுக்குச் சென்றோம். வழக்குப்பதிவு செய்யும்போது பி.டி.ஆர். உயிருடன் இல்லை. பெரிய செய்திதான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது இல்லை. சிறிய செய்தி கூட பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தலாம்.



கேள்வி : பிற புலனாய்வு இதழ்களுக்கும், ஜூ.வி.,க்கும் உள்ள வித்தியாசம்?

பதில் : ஒற்றுமை என்று எடுத்துக்கொண்டால் ஒரே பாணியைதான் பின்பற்றுகிறோம். எல்லோரும் என்பதைவிட முன்னணியில் உள்ள ஜூ.வி., குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். வேற்றுமை என்றால், எங்களது நடைமுறையைச் சொல்லலாம். அதாவது, சில நேரங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மறுப்பு கடிதம் வரும். அதை நாங்கள் உதாசீனப்படுத்தாமல், அதற்கு மரியாதை கொடுத்து, இன்ன இன்ன ஆதாரங்கள் செய்தி வெளியிட்டதற்கு இருக்கின்றன என்று பதில் கடிதம் எழுதுவோம். அதன்பின்னர் அவர்கள் அதுபற்றி மீண்டும் எதுவும் கேட்க மாட்டார்கள். சிலநேரங்களில் ஆதாரம் இல்லாவிட்டால் மறுப்பை பிரசுரம் செய்யவும் செய்கிறோம். விளக்கம் கேட்பவரை மதிக்கும் இந்த தன்மையை நாங்கள் பின்பற்றி வருவது, மற்ற புலனாய்வு இதழ்களில் இல்லாதது.

சந்திப்பு : நெல்லை விவேகநந்தா.

(பேட்டி நிறைவுற்றது)

Share:

புதன், 8 செப்டம்பர், 2010

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு பேட்டி...



மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முடித்த நான், ஜூனியர் விகடன் பற்றி ஆய்வு செய்து சமர்ப்பித்து தேர்வு பெற்றேன். சமூக அவல உண்மைகளை வெளியிடுவதில் ஜூனியர் விகடனின் பங்களிப்பு (ஜனவரி - ஜூன் 2007) என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன். 

சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நான் ஜூ.வி. பற்றி மேற்கொண்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, அந்த புலனாய்வு இதழின் பொறுப்பாசிரியர் நட்புக்குரிய குள.சண்முகசுந்தரம் அவர்களிடம் பேட்டி எடுத்தேன்.

இதழியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் இதழியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அந்த பேட்டி உபயோகமாக இருக்கும் என்பதால், இங்கே அதைத் தருகிறேன்.


கேள்வி : ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட ஆண்டு...

பதில் : 1982.

கேள்வி : ஜூ.வி. தொடங்கப்பட்ட காலத்தில் எடிட்டர் ஆக இருந்தவர்?

பதில் : பாலசுப்பிரமணியன்.

கேள்வி : ஜூ.வி. தொடங்கப்பட்ட காலத்தில் வரவேற்பு எப்படி இருந்தது?

பதில் : வரவேற்பு நன்றாகவே இருந்தது. அப்போது ஜூ.வி.யில் புது ஸ்டைல் கொண்டு வந்தோம். ஒரு செய்தி என்றால், அது நிகழ்ந்ததற்கான காரணத்தை அப்படியே சொன்னோம். ஒரு கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளி, அந்த கொலையை செய்ய ஏதேனும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். அந்த காரணம் அவனைப் பொறுத்தவரையில் நியாயமானதாக இருக்கும். அத்தகைய நேரங்களில் கொலையாளி சொன்னதையும் பேட்டி கண்டு ஜூ.வி.யில் பிரசுரித்தோம். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பாதிப்புக்கு காரணமானவர்கள் எந்த வகையில் அதற்கு காரணமாக அமைந்தார்கள் என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுகிறோம். இப்படி செய்யும்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கேள்வி : எந்தெந்த முறைகளில் மக்களிடம் செய்திகளை கொண்டு செல்கிறீர்கள்?

பதில் : முன்பு சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செய்திகளை கொடுத்தோம். இப்போது ஸ்டாண்டர்டு ஆக செய்தியை கொடுத்தாலும், மக்கள் எளிதில் அதை புரிந்து கொள்கிறார்கள். இதனால் மக்களிடம் ஒரு செய்தியை கொண்டு செல்வது மிகவும் எளிமையாகிவிட்டது.

கேள்வி : எப்படிப்பட்ட செய்திகள் ஜூ.வி.யில் வெளியாகின்றன?

பதில் : ஸ்டூடியோவுக்குள் (போட்டோ ஸ்டூடியோ அல்ல, சினிமா ஸ்டூடியோ) மட்டுமே இருந்த தமிழ் சினிமாவின் கேமரா எப்படி பாரதிராஜா மூலம் கிராமப்புறங்களை நோக்கி போனதோ, அதேபோல முதன் முதலில் கிராமப்புறங்களை நோக்கிச் சென்ற முதல் இதழ் ஜூ.வி.தான். இதுதான் ஜூ.வி.யின் வெற்றிக்கு காரணம். சென்னை, புதுடெல்லி மற்றும் வெளிநாடு என்று தமிழன் எங்கெல்லாம் இருக்கிறானோ, அவன் எந்த மாதிரியான செய்திகளை விரும்புகிறானோ அவற்றை நாங்கள் பிரசுரம் செய்கிறோம். குக்கிராமத்தில் கிடைக்கும் செய்தி வழியாகக்கூட எல்லாத் தமிழர்களையும் ஈர்க்கலாம். ஜூ.வி.யைப் பொறுத்தவரை பெரும்பாலும் சமூக அவலங்களை வெளிப்படுத்தும் செய்திகளை பிரசுரம் செய்கிறோம். உசிலம்பட்டி பெண் சிசு கொலை, வரதட்சணை கொடுமை போன்ற சமூக அவலங்களை உதாரணமாக கூறலாம். இப்போதெல்லாம் விதவிதமான சமூக அவலங்கள் அரங்கேறுகின்றன. மேலும், மக்களை அய்யோ... என்று பதற வைக்கிற விஷயங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கிறோம்.

கேள்வி : எந்த மாதிரியான செய்திகளை அதிக அளவில் பிரசுரம் செய்கிறீர்கள்?

பதில் : அரசியல், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட செய்திகளை அதிக அளவில் பிரசுரம் செய்கிறோம். இந்த அரசியல் சார்பான விஷயங்களை தெரிந்து கொள்ளத்தான் மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. சென்னையில் உள்ளவர்கள் மதுரையில் நிலவும் அரசியல் நிலவரங்களையும், மதுரையில் உள்ளவர்கள் சென்னையின் அரசியல் நிலவரங்களையும் அறிய ஆவல் உள்ளவர்களாக உள்ளனர். அதனால்தான் அரசியல் செய்திகளை ஜூ.வி.யில் அதிகம் காண முடிகிறது.

கேள்வி : எந்தெந்த வகைகளில் செய்திகளை பெறுகிறீர்கள்?

பதில் : வாசகர்கள் எழுதி அனுப்பும் செய்திகள்கூட பெரிய, பெரிய செய்திகளாக வெளிவந்துள்ளன. பல வாசகர்கள் இங்கே இப்படியரு செய்தி இருக்கு, இப்படியெல்லாம் சம்பவம் நடக்கிறது என்று போன் வழியாக தகவல் சொல்வார்கள். எங்களது நிருபர்களை வைத்து அந்த விஷயங்களை சேகரித்து செய்தியாக வெளியிடுவோம். அண்மையில், சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிறுவனை மாடியில் இருந்து அவனது முதலாளி கீழே தள்ளிவிட்டதாக அங்குள்ள வாசகர் ஒருவரே போனில் தகவல் சொன்னார். தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் நாங்கள் சிங்கப்பூரில் உள்ள எங்களது முன்னாள் செய்தியாளர், போட்டோகிராபர் ஆகியோரை தொடர்பு கொண்டு, அந்த செய்தியை சேகரித்து படத்துடன் வெளியிட்டோம். நாங்கள் நேரடியாக சென்று சேகரிப்பது மட்டுமல்ல, வாசகர்கள் கொடுக்கும், தெரிவிக்கும் தகவல்கள் கூட பெரிய அளவிலான செய்திகளாக வந்துவிடுவது உண்டு. அரசு அதிகாரிகள் கூட, தவறு நடப்பதாக செய்தியைச் சொல்வது உண்டு.

கேள்வி : கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களில் படம் எவ்வாறு பெறப்படுகிறது?

பதில் : இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அதை லைவ் ஆக படம் எடுக்க முடியாது. சம்பவம் நடந்த பின்னர்தான் எடுக்க முடியும். பெரிய நகரங்கள் என்றால் இதுபோன்ற சம்பவங்களில், சம்பவம் நடந்த சிறிதுநேரத்திற்கு பின்னர் அங்கே சென்று விடலாம். ஆனால், தொலைவில் உள்ள பகுதி என்றால் படம் எடுப்பது மட்டுமின்றி, செய்தி சேகரிப்பதும் சற்று கடினம்தான். சிறிய ஊர்களுக்குப் போக 2 மணி நேரம் கூட ஆகும் என்பதால் அந்த மாதிரியான நேரங்களில் போலீஸ் தரப்பிலும் எங்களுக்கு உதவுவார்கள்.

கேள்வி : ஜூ.வி.யில் எவ்வாறு செய்திகளை துல்லியமாக வெளியிட முடிகிறது?

பதில் : செய்தியாளர்களின் பங்களிப்பு, விசாரணை பாணிதான் செய்திகளை துல்லியமாக வெளியிட முக்கிய காரணம். நடந்த ஒரு சம்பவத்தை ஒருவர் மிகைப்படுத்திக்கூட கூறலாம். அதனால், தேவையில்லாததை நீக்கி, தேவையானவற்றை மட்டும் கொடுக்கிறோம். ஒரு செய்தியை ஒரே நோக்கில் மட்டும் நோக்காமல் நான்கு கோணத்திலும் விசாரித்து சேகரிக்கும்போது தான் துல்லியமான செய்தியை கொடுக்க முடியும். அதை நாங்கள் தவறாமல் பின்பற்றுகிறோம்.

கேள்வி : செய்திகளை, அவை உண்மைதானா? என்று சரிபார்த்த பின்னர்தான் வெளியிடுகிறீர்களா?

பதில் : செய்தி உண்மை என்று தெரிந்தால்தானே வெளியிட முடியும்? சிலநேரங்களில் புகார் கொடுத்தவர் கூட குற்றவாளி ஆகலாம். அதனால், செய்தியின் தன்மை பற்றி முழுமையாக விசாரிக்காமல் வெளியிட மாட்டோம். விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.

கேள்வி : கொலை, கொள்ளை, பெண் கொடுமை போன்ற செய்திகளை வெளியிடும் நீங்கள், நகைச்சுவையாக சமூகத்தின் பிற பகுதியையும் காண்பிக்க டயலாக் போன்ற பகுதிகள் வெளியிடுவது ஏன்?

பதில் : இதழை படிப்பவர்களுக்கு ஒரு ரிலாக்ஸ் வேண்டும். அதற்காக ஜாலியான தகவல் தெரிவிக்க வேண்டியது உள்ளது. இதனால்தான் பொதுஇடங்களில் மக்கள் பேசிக்கொள்வது போன்ற டயலாக் பகுதியை நகைச்சுவையாக வெளியிடுகிறோம். மேலும், சினிமா, ப்ளோ&அப் படம் போன்றவற்றையும் வெளியிடுகிறோம். இவ்வாறு செய்தால்தான் வாசகர்களை தக்க வைக்க முடியும்.

கேள்வி : மிஸ்டர் கழுகு பகுதியில் எப்படி துல்லியமாக, பின்னால் நடக்கப்போவதை ட முன்கூட்டியே எப்படி சரியாகச் சொல்ல முடிகிறது?

பதில் : எல்லாமே சோர்ஸ் (செய்தி மூலம்) மூலமாகத்தான். இந்த பகுதியை முன்பு ஒருவரே கவனித்து வந்தார். இப்போது எல்லோரும் கொடுக்கிற தகவல்களும் அதில் இடம்பெறுகின்றன. அதனால் ஒரு குக்கிராமத்தை பற்றிய விஷயம் கூட இந்த பகுதியில் வெளியிட முடிகிறது. கொலை நடந்தால் அதுபற்றி எப்படி விசாரணை நடத்துவோமோ, அதுபோல் தான் ஒரு யூகத்தின் அடிப்படையில் நடக்கலாம் என்கிற தகவலை சொல்கிறோம். இது பலநேரம் நடக்கவும் செய்யலாம். நடக்காமலும் போகலாம். இதில் தெரிவிக்கும் எதிர்கால கருத்துகள் யூகம் அடிப்படையானவைதான் என்றாலும், நம்பத் தகுந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களாகத்தான் அவை இருக்கும்.

கேள்வி : அட்டை படத்தை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?

பதில் : அந்த வாரத்திற்குரிய மிக மிக முக்கியமான செய்திக்கான படம்தான் அட்டை படமாக இடம்பெறும். பலநேரம் 2, 3 படங்கள் அட்டைப் படத்தில் இடம்பெறலாம். ஒருசில நேரம் சுனாமி தாக்கம் போன்ற மிகவும் பரபரப்பான செய்திகள் வரும்போது, ஒரே செய்திக்குரிய படம் - படங்களை அட்டை படமாக தேர்வு செய்கிறோம்.
(பேட்டி தொடரும்...)

Share:

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தோளுக்கு சீலை போராட்டம் - ஒரு பார்வை

தோளுக்குச் சீலை மறுக்கப்பட்ட காலத்தில் நடந்த அவல காட்சி...
ஒரு நடிகை சினிமாவில் மேலாடை இல்லாமல் நடித்தால், இன்றைய சமுதாயத்தில் சிலர் கொஞ்சம் ஓவராகவே பொங்கியெழுந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர், இன்னும் ஒருபடி மேலே போய், சம்பந்தப்பட்ட நடிகைக்கே சேலையை இலவசமாக அனுப்பி வைக்கும் போராட்டம் நடத்துகிறார்கள். காரணம் கேட்டால், 'ஒரு நடிகை மேலாடை இல்லாமல் நடித்தால், கலாச்சாரம், பண்பாடு சீர்கெட்டுப் போய்விடும்' என்கிறார்கள்.

ஆனால், கி.பி.1800களில் ஒரு நாட்டில் பெண்கள் மேலாடை அணியாமலேயே வாழ்ந்தார்கள் என்றால், அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த நாடு, எங்கோ எத்தியோப்பியாவிலோ, சோமாலியாவிலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ இல்லை. நம் தமிழ்நாட்டில்தான் இருந்தது. அதுதான் நாஞ்சில் நாடு.

வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் 'அக்மார்க்' அடையாளங்கள் நிறைய.

இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது.

இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதியும் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.

'நாங்கள் தோளில் சீலை அணிய உரிமை வேண்டும்...' என்று அவர்கள் போராடத் துவங்க... பல ஆண்டுகளுக்கு பிறகு அதில் வெற்றியும் கிடைத்தது. இந்த வெற்றிக்காக ரத்தம் சிந்திய, மானத்தை தியாகம் செய்த உயிர்கள் ஏராளம்... ஏராளம்...! தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற ஜாதியைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த கொடுமைகளை அனுபவித்தனர் - தாங்கிக்கொண்டனர்.

இவர்கள் எங்கு சென்றாலும், ஆதிக்க ஜாதியினருக்கு மரியாதை கொடுப்பதற்காக தங்கள் மேலாடையை அணியக்கூடாது என்பது, நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி ஆட்சி செய்த திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கண்டிப்பான உத்தரவு.

'சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பை திறந்து காட்டுவது என்பது, அந்த நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது' என்கிறார், 'திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை' என்ற நூலை எழுதிய ஆங்கிலேயரான சாமுவேல் மேட்டீர். அதை மீறி மேலாடை அணிந்தால் கொடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதற்கு பயந்தே, மேலாடை இன்றி நடமாடினர், ஒடுக்கப்பட்ட ஜாதியினர்.

இன்னொரு அவல காட்சி...

ஆனாலும், எத்தனை நாட்களுக்குத்தான் மேலாடை அணியாமல் இருப்பது? என்று மனம் புழுங்கிய அவர்களில் சிலர் போராடத் துவங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அய்யா வைகுண்டர் போன்றோர் குரல் கொடுத்தனர். அந்த தெம்பில் ஆங்காங்கே கலகங்களும் எழுந்து அடங்கின.

தோளுக்குச் சீலை உரிமை கேட்டு தாழ்த்தப்பட்டவர்கள் போராடுகிறார்கள் என்பதை அறிந்த சமஸ்தான மன்னன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ‘அவர்கள் அப்படித்தான் ஆடை அணியாமல் இருக்க வேண்டும்; மீறி அணிந்தால், அவர்கள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏன்... கொலை கூட செய்யலாம்...’ என்று அரக்கத்தனமாக வாய்மொழியாக உத்தரவிட்டான் மன்னன்.

அதன்விளைவு... மார்பை மறைக்க முயன்ற பெண்கள் ஆடை கிழித்து அவமானப்படுத்தப்பட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாஞ்சில் நாட்டில் உள்ள நெய்யாற்றின்கரை, நெய்யூர், கல்குளம், கோட்டாறு, இரணியல் போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது.

அய்யா வைகுண்டரும் இந்த போராட்டத்தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். தன்னை காண வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்கு சீலை அணிந்துதான் வரவேண்டும் ஆணையிட்டார். அன்றைய காலக்கட்டத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பு பெண்கள், தோளுக்கு சீலை அணியக்கூடாது என்று இருந்த வழக்கம் பற்றி தனது அகிலத்திரட்டிலும் பதிவு செய்திருக்கிறார் அவர்.

"பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப்
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா..." என்று குறிப்பிடும் அய்யா,
"என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா...." என்று, நாடார் குல பெண்கள் இடுப்பில் குடம் வைத்து செல்லக்கூடாது என்று ஆதிக்க ஜாதியினர் கூறியதையும் பதிவு செய்கிறார்.

இதற்கிடையில், மேலை நாட்டில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ பரப்பாளர்கள், நாஞ்சில் நாட்டில் நிலவிய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். கி.பி.1780களிலேயே அவர்கள் நாஞ்சில் நாட்டிற்குள் நுழைந்துவிட்டாலும், தோளுக்கு சீலை போராட்டம் தீவிரம் அடைந்தபோது, அதற்காக போராடியவர்களுக்காக தங்கள் சுயநல குரலை எழுப்பினர்.

சமஸ்தான உத்தரவை எதிர்த்து தோளுக்கு சீலை அணிந்த  பெண்கள்...

‘தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்? கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் உங்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும். திறந்த மார்போடு திரியாமல் தோளுக்கு சீலை அணிந்து கொள்ளலாம். மேலும், உங்களது பொருளாதார - கல்வி வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். உண்பதற்கு சுகாதாரமான - ஆரோக்கியமான உணவும் எங்கள் நிறுவனங்கள் சார்பில் தருகிறோம்...’ என்று கூறிய அவர்களது ஆசை வார்த்தைகள், தாழ்த்தப்பட்டோர் பலரது மனதை மாற்றியது. ஏராளமானபேர் தங்களை கிறிஸ்தவர்களாக்கிக் கொண்டார்கள். தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்தும் கொண்டனர். அவர்களை பின்பற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்த பிற பெண்களும் தோளுக்கு சீலை அணிய ஆரம்பித்தனர்.

இது, ஆதிக்க ஜாதியினருக்கு பிடிக்கவில்லை. ‘நீங்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் தாழ்த்தப்பட்டவர்கள்தான்...’ என்று கூறி, அவர்களை பொது இடங்களில் அவமானப்படுத்தினர். மதம் மாறிய பெண்கள் அணிந்த மேலாடையை கிழித்து எறிந்தனர்.

இந்த பிரச்சினை சென்னை மாகாண நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஆங்கிலேயர்கள் என்பதால் ஒரு சார்பாகவே தீர்ப்பு கூறப்பட்டது. 1847 மார்ச் 19-ம் தேதி ஒரு தீர்ப்பை அவர்கள் வெளியிட்டனர்.

‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது’ என்று தீர்ப்பு கூறியது சென்னையில் உள்ள ஆங்கிலேயே நீதிமன்றம்.
இந்த தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் கிளர்த்து எழச் செய்தது. ஆங்காங்கே கலகங்கள் நடந்தன.

சான்றோர் என்கிற நாடார் இனத்தில் உயர் வகுப்பினர் இருந்தனர். இவர்கள் நல்ல வசதியோடு வாழ்ந்ததால், இவர்களது பெண்கள் தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்துக் கொண்டனர். அதேநேரம், அந்த இனத்தில் மேலும் சில உட்பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவில் உள்ளவர்களே பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டனர் (இன்றும்கூட இந்த பாகுபாடு இந்த சமூகத்தில் உள்ளது. உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், சம அந்தஸ்தில் உள்ள குடும்பங்களில்தான் பெண் கொடுப்பதும், எடுப்பதுமாக உள்ளனர்). இந்த சமூகத்தில் அவர்களே சமஸ்தான கொடுமைகளுக்கு அதிகம் ஆளாக்கப்பட்டனர். இவர்களைப் போன்று, தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த பிற சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர்.

‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் மட்டும்தான் எங்கள் மானம் காக்கப்படுமா?’ என்று பொங்கியெழுந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அதுவரை போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த நாடார் இன உயர் வகுப்பினரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். இவர்கள் மெஜாரிட்டியாக இருந்த பகுதிகளில் ஆதிக்க ஜாதியினருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

நிலைமை மோசமானதால் சென்னை மாகாண கவர்னர் இந்த பிரச்சினையில் தலையிட்டார். அதைத்தொடர்ந்து, 1859 ஜூலை 26-ந் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘தோளுக்கு சீலை அணியாத பெண்கள் இனி அதை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், மேல் ஜாதிப் பெண்களைப் போன்று ஆடை அணியக்கூடாது...’ என்பதுதான் அந்த அறிவிப்பு.

இதைத்தொடர்ந்து தோளுக்கு சீலை போராட்டம் நிறைவுக்கு வந்தது. ஆனாலும், இந்த சுதந்திர உரிமையைப் பெற நாஞ்சில் நாட்டு வரலாற்றில் படிந்த ரத்தக்கறையை மட்டும் யாராலும் அகற்ற முடியாது.
- நெல்லை விவேகநந்தா
Share:

அன்னை பற்றி வைரமுத்து


ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன் பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத்தேவன் பெத்த
பொன்னே! குலமகனே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!

கதகதன்னு களி(க்)கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே...

தொண்டையில அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்கிதம்மா...

- கவிப்பேரரசு வைரமுத்து.

வைரமுத்து, தனது அன்னை பற்றி எழுதிய இந்த கவிதை, அவரது கொஞ்சம் தேநீர் நிறைய வானம் என்ற கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
Share:

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

விடுதலை கொடு அன்பே...


எனக்கு
ரொம்ப பிடிக்கும்
அன்றலர்ந்த தாமரையாய்
உந்தன் முகத்தில் பிரகாசிக்கும்
அந்த
வெள்ளி நீர்வீழ்ச்சிச் சிரிப்புகள்...

அதை காண
கண்கள் கோடி வேண்டும்...
வரம் அருள மாட்டாரா
அந்த பிரம்மன்?
எத்தனிக்கும்
எந்தன் ஆவல்களுக்கு
ஆறுதல் தேடுகிறேன் பல நேரம்!

உந்தன்
பொற்பாதத்தில் சிணுங்கும்
கொலுசொலியின் கீதத்தில்
என்னை எனக்குள்ளேயே
நானே தொலைத்த நாட்கள்
அனுதினமும் மலராதா?

மெல்லிய உரையாடலில்
ஏகத்துக்கும் எனை தழுவிய
உந்தன் ஞாபகங்களின் தாலாட்டில்
எந்தன் வாழ்க்கைக்கு - ஓர்
அர்த்தம் பெறுகிறேன்...

உந்தன்
சின்ன விரல்களின்
இனிய தீண்டலில்
முன்னுரையுடன் பயணமாகும்
எந்தன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க மாட்டாயா?

நான் - நான்தானா?
என்னுள் பலபரீட்சை
செய்வித்த நீ - உந்தன்
அழியா நினைவுகளுடன்
எந்தன் வாழ்வில்
அணைபோட மாட்டாயா?

உந்தன் விழி வலையில் சிக்கி
தூக்கத்தை தொலைத்த
எந்தன் கண்களுக்கு
விடுதலை கொடுத்துவிடு;
அப்படியே
என்னையும்
உனதாய் ஏற்றுவிடு...!
- கவிஞர் நெல்லை விவேகநந்தா.

Share:

கேப்டனுடன் ஒரு நாள்...


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், அவர் ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள்தான் இன்னும் கைகூடவில்லை. விரைவில் அந்த நாள் வரும் என்று நம்புகிறேன்.

ஒருமுறை அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதால் அப்போது நீண்ட நேரம் அவருடன் பேச முடிந்தது. காரைக்குடியில் உள்ள ஒரு செட்டிநாட்டு பங்களாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் பேசினேன்.

கேப்டன் அரசியலுக்கு வந்தது ஏன்? என்பதில் தொடங்கி, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்கிற - அவரது ஆழ்மனதில் புதைந்து கிடக்கிற பேராசை, லஞ்சம் ஒழிய வேண்டும் என்கிற அவரது கொந்தளிப்பான பேச்சு... என்று என்னை அப்போது அவரிடம் இருந்து கவர்ந்த விஷயங்கள் பல.

இந்த சந்திப்புக்கு முன்னதாகவே, கேப்டன் அரசியலுக்கு வந்த புதிதில் அவருக்காக ஒரு பாடல் எழுதி இருந்தேன். ஒருவேளை நான் சினிமா பாடலாசிரியராக இருந்தால் நிச்சயம் அந்த பாடல் அவரது ஒரு படத்தில் ஓப்பனிங் சாங் ஆக இடம் பெற்றிருக்கும். ஆனால், நான் சாதாரண பத்திரிக்கையாளன் தானே...

அதேநேரம், அந்த பாடலை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்ற எனது ஆசை வெகுநாட்களுக்கு பிறகு இப்போது எனது இந்த வலைப்பூ வழியாக நிறைவேறியுள்ளது. அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சி அடையும் அதேநேரத்தில், உங்களையும் எனது பாடல் ஈர்க்கும் என்று நம்புகிறேன்.

இதோ அந்த பாடல், சரணம் - பல்லவியுடன்...

பல்லவி
வர்றாரு... வர்றாரு... நம்ம தலைவரு வர்றாரு
நம் நாடு செழிக்கப் போகுது;
தரணி மகிழப் போகுது, சொல்றாரு - அத
செய்வாரு நம்ம தலைவரு!

இமயத்த விட உயர்ந்தவன்டா
ஏழைகள் மனச புரிஞ்சவன்டா
இப்படி ஒருவன் இந்த உலகில் யாரடா?
அதுதான் நம்ம தலைவரு,
சொல்றாங்க மக்கள் சொல்றாங்க (வர்றாரு...)

சரணம் - 1

கப்பலுக்கு தேவை ஒரு கேப்டன் - நம்ம
மக்களுக்கு தேவை இந்த கேப்டன்!
எதிரியும் இவருக்கு சிலர் இருந்ததுண்டு
மதியும் மறந்து அவர்கள் பேசியதுண்டு
பொறுத்தார் பூமியாள்வார் - சொன்னவர்
நம்ம தலைவரடா - இனி
அதை செய்பவரும் நம்ம தலைவரடா! (வர்றாரு...)

சரணம் - 2

வாரி கொடுப்பதில் தராதரம் தெரியாது இவனுக்கு
அவனுக்கு துரோகம் செய்தால்... - அவன்
பார்வை ஒன்றே போதுமே எதிரிக்கு!

கொடுத்து கொடுத்து கரம் சிவந்தவன் இவனடா
வாரி வழங்குவதில் இவனுக்கு ஈடு யாரடா? (வர்றாரு...)

சரணம் - 3

இவன் அகராதியில் அச்சத்திற்கு பொருளில்லை - அந்த
சிந்தைக்கும் இங்கே இடமில்லை!
இவன் பார்த்தால் எரிமலையும் அடங்கிவிடும்;
சீறும் அலை கடலும் இவன் காலடியில் பணிந்துவிடும்!

இவனுக்கோர் சிம்மாசனம் உள்ளதடா
இந்த மக்கள் மத்தியில் அது தெரியுதடா
இனி நாளும் நல்லநேரம்தான் - அது
உனக்கும் எனக்கும் தெரியும்தான்! (வர்றாரு...)

சரணம் - 4

தொடங்கட்டும் ஒரு புரட்சி
மலரட்டும் புதிய ஆட்சி
அதற்கு நாமே சாட்சி! (வர்றாரு...)

- கவிஞர் நெல்லை விவேகநந்தா.

Share:

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

தோழியான காதலி


கவிதை எழுத
காத்திருந்த நேரத்தில்
கவிதை வடிவாய் - என்
கற்பனையில் உதித்தவள்
நீ தான்!

வாழ்வின் அர்த்தங்களுக்கு
விடை தெரியாமல்
விழித்தபோது - அதை
விளங்க வைத்தவளும்
நீ தான்!

ஏன்...
என் வாழ்வே
திசைமாறியபோது
வழிகாட்டியானவளும்
நீயே தான்!

அன்று -
உன் காந்த விழிப் பார்வையில்
நின் வசமான நான்
இன்று
நீ காட்டிய பாசத்திலே
கட்டுண்டு விட்டேன்...

காதலிக்க - உனை
உயிராய் நேசித்தவனுக்கு
காதலிக்கவே
கற்றுக்கொடுத்தாய் அன்பை;
ஒரு தோழியாக...

என் மீது படர்ந்த
உன் பாசத்திற்கு - ஓர்
விளக்க வுரையையே
அறிந்துவிட்டேன்
நின் நன்னடத்தையில்...

காதலியை
கற்பனையில் உன்னுள் செதுக்கி
அவளை விடவும்
நின் அன்பையே
நான் ஏற்றுவிட்டேன்
இப்போது!

இதுபோதும் எனக்கு;
நாம் சந்தித்த நிகழ்வுகள்
வசந்த நாட்களாகும்
என் வாழ்வில்
இனி வரும் நாட்களில்...

ஆனாலும்
என் இதயத்தில்
எங்கோ வலிக்கிறது
நாளும் உனை நினைத்து...

- கவிஞர் நெல்லை விவேகநந்தா

Share:

சனி, 14 ஆகஸ்ட், 2010

மெரீனாவில் ஒரு மாலை நேரம்...



மெரீனா பீச் என்று சொன்னாலே, காதலர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் ஒருவித கிளுகிளுப்பு தொற்றிக்கொள்கிறது. காரணம், இன்றைய நவீன காதலர்களின் உல்லாசபுரி அது. 

 உலகின் மிக நீளமான கடற்கரைகளுள் ஒன்றான இது 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

ஒரு மாலைநேரம் நாமும் அங்கே ஒரு விசிட் அடித்தோம், காதலர்கள் எப்படி தங்களது காதலை வளர்க்கிறார்கள் என்பதை அறிய.

வழக்கமாக மதிய வெயிலையே பொருட்படுத்தாமல் காதல் வளர்க்கும் காதல் ஜோடியினர், நாம் சென்ற நேரம் அதிக அளவிலேயே குவிந்திருந்தார்கள்.

சிலர் பாதுகாப்புக்காக காதலியின் துப்பட்டாவை குடை பிடித்திருந்ததால், காதலன்கள் காதலியின் மடியில் படுத்து, இரவுநேர கற்பனைக் கவிதைகளுக்கு உயிர் மூட்டிக்கொண்டிருந்தனர்.

ஒருசில காதலர்கள் கடற்கரையோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் வெயிலுக்கு பயந்து கடலின் பால் நுரை அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.

அவர்களில் ஒருசிலர் ஆர்வ மிகுதியில் கடலுக்குள் இறங்கி குளிர்ந்த காற்றின் இதத்திற்கும், அலைகளின் இசைக்கும் ஏற்ப ஆட்டம் போட்டனர். அலை வேகமாக வந்து மோதும்போது காதலி காதலனை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அவனோ இதுதான் சமயம் என்று அவளை எசக்குபிசக்காக பிடித்து சிலிர்த்துக்கொண்டான்.

காதலனின் அந்த தீண்டல் காதலிக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அந்த தீண்டல் தந்த சுகத்தை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்தாள். இதற்காக, அலை வந்து மோதுவதற்கு முன்பே இவள் காதலன் மீது மோதி, அவனோடு அலையில் விழுந்து உருண்டு புரண்டாள்.

இதற்கிடையில், கடல் அலைகளோடு விளையாடி மூழ்காமல் காதல் முத்தெடுத்த ஜோடிகள் ஆங்காங்கே கிடைத்த நிழலில் ஒதுங்கி அமர்ந்து கொண்டனர். எவரது பார்வையும் தங்களை படமெடுக்காததால் விரலின் ஸ்பரிசங்களால் சிலிர்த்துக்கொண்டார்கள். காதலியின் அழகு பொங்கும் அங்கங்களில் அனுமதியின்றி இடம் பிடித்திருந்த கடல் மண்ணை, அவள் அனுமதியின்றியே அகற்றி, தனது இதயத்தின் லப்-டப் வேகத்தை ஏற்றிக்கொண்டான் காதலன். கூடவே, காதலியின் இதயத் துடிப்பும் தங்கத்தின் விலைபோல் சட்டென்று எகிறியது.

- இப்படியாக, மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க... அவர்களது காதல் பற்றி அறிய சில ஜோடிகளிடம் முயன்றோம். பேட்டி என்று சொன்ன மாத்திரத்தில் அய்யோ... வேண்டாம்... என்று அவசரகதியில் எழுந்து ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

3 ஜோடி மட்டுமே பேட்டிக்கு அரைகுறை மனதோடு ஒத்துக்கொண்டது, அதுவும் பெயர், போட்டோ வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன். நாமும் சரியென்று தலையாட்டிவிட்டு அவர்களிடம் பேச்சை துவங்கினோம்.

முதலில் பேசியவர்கள் ஆகாசும், அமிர்த்தாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அமிர்த்தாவே முதல் ஆளாக பேச்சை ஆரம்பித்தார்.

‘நாங்க இருவருமே சென்னையில் உள்ள பிரபல காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறோம். முதலாம் ஆண்டு படிக்கும்போதே இவன் (இப்படித்தான் ‘மரியாதை‘யோடு? பேசுகிறார்கள்) என்னிடம் காதலை ப்ரபோஸ் பண்ணினான். நான் தான் ஒத்துக்கல. தொடர்ந்து... எங்கே போனாலும் என் பின்னாடியே வந்தான். பார்க்க பரிதாபமா இருந்துச்சு. அதுக்கு அப்புறம்... சரின்னு காதலை ஏத்துக்கிட்டேன்‘ என்ற அமிர்த்தா, ஆகாசின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

‘இவள் சொல்வதை அப்படியே நம்பிடாதீங்க...‘ என்று அடுத்ததாக வாய் திறந்த காதலன் ஆகாஷ், ‘இந்த பொண்ணுங்களே அப்படித்தான் ஸார்... ஐ லவ் யூன்னு சொல்ல வந்தா எட்டி ஓடுவாளுவ. காதல் ஒர்க்கவுட் ஆன பிறகு, பீச்சுக்கு கூட்டிட்டு போ... இ.சி.ஆர். ரோட்ல கடற்கரையோரமா ஆள் நடமாட்டம் அதிகமா இல்லாத நல்ல ரெஸ்டாரண்டுக்கு கூட்டிட்டு போன்னு உசுர எடுக்க ஆரம்பித்து விடுவாளுவ...‘ என்று கலாய்த்தார். பதிலுக்கு அமிர்த்தா செல்லமாக கோபித்துக்கொண்டு, தனது அழகான முகத்தை இன்னும் சிவப்பாக்கிக் கொண்டார்.

சரி... சண்டையெல்லாம் போட வேண்டாம் என்று சமாதானப்படுத்திவிட்டு, அடுத்த ஜோடியை தேடினோம்.

நாம் அருகில் நிற்கிறோம் என்பதுகூட தெரியாமல் கட்டியணைத்துக் கொண்டு கிடந்தனர் அவர்கள். காதலன் மடியில் தன்னை மறந்து படுத்துக்கிடந்தாள் காதலி.

நாம் அவர்களுக்கு நேராக வந்து நின்றதும் ஆடையை ஒதுங்கிக்கிடந்த ஆடையை வேகமாக சரி செய்து கொண்டு எழுந்தனர். பேட்டி என்றதும் வழக்கம்போல் எஸ்கேப் ஆக தயாரானார்கள்.

பெயர், போட்டோ எல்லாம் வராது. உங்கள் காதல் அனுபவத்தை மட்டும் லைட்டா சொல்லுங்க போதும்... என்ற பிறகுதான் நம்மிடம் பேசவே ஆரம்பித்தனர்.

‘பக்கத்து மாவட்டத்தில் உள்ள கிராமம்தான் எங்கள் இருவரது ஊரும். அங்குள்ள கலைக்கல்லு£ரி ஒன்றில் எம்.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறோம். கடந்த 3 வருசமா காதலிச்சிட்டு இருக்கோம். அப்பப்போ காலேஜை கட் அடித்துவிட்டு இங்கே வந்துவிடுவோம். மனம் விட்டு பேசிப்போம்...‘ என்றவர்களிடம், ‘இங்கே காதலர்கள், மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து கொள்வதாக புகார்கள் வருகிறதே...‘ என்று மடக்கினோம்.

‘இதுல என்ன தப்பு இருக்கு... என்று வேகமாக கேட்டவர்கள், காதலர்கள் கட்டிப் பிடிக்கிறதுலேயும், முத்தத்தை பகிர்ந்து கொள்வதிலும் என்ன தப்பு இருக்கு? மத்தவங்க நினைக்கிற மாதிரி நாங்க டைம் பாஸ் காதல் ஜோடி இல்ல. படிப்பு முடிந்த உடனேயே ஒரு வேலையையும் தேடிக்கிட்டு, கல்யாணமும் பண்ணப் போறோம். அப்படி இருக்கும்போது, இப்பவே நாங்க கணவன்&மனைவியா பழகுறதுல என்ன தப்பு இருக்கு...?‘ என்று அவர்கள் நம்மை திருப்பி கேட்க... வாழ்க உங்கள் காதல் என்று வாழ்த்திவிட்டு ஜூட் விட்டோம்.

அடுத்ததாக யாரை மடக்கலாம் என்று பார்வையை சுழற்றியபோது அந்த ஜோடியினர் நம் கண்ணில் சிக்கினார்கள்.

காதலியின் தலையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார் அந்த காதலன். பார்வையை கூர்மையாக்கியபோதுதான் காதலியின் தலையில் அவர் பூ வைப்பது சரி. நல்லவேளை... காதில் பூவை வைக்கவில்லை என்று மனதிற்குள் எண்ணியபடியே அவர்கள் முன் ஆஜரானோம்.

நம்மை நேருக்கு நேராக பார்த்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி. காதலி தலையில் வைத்துக்கொண்டிருந்த 2 முழம் மல்லிகைப்பூ காதலன் கையில் இருந்தது. கூர்ந்து கவனித்தபோது அவரது கை நடுங்குவது நன்றாகவேத் தெரிந்தது. இவருவரும் மாணவ-மாணவிகள் போல் தெரியவில்லை. இருவருமே ஜீன்ஸ், டீ-சர்ட்டில் கலக்கலாக இருந்தார்கள். அந்த பெண் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்சும், இறுக்கமான குட்டை டீ-சர்ட்டும் அவளை அல்ட்ரா மாடர்ன் கேர்ள் என்பதுபோல் காட்டியது.

நம்மை போலீஸ் என்று நினைத்து பயந்துவிட்டார்கள் போலும். ‘நீங்கள் நினைக்கிற மாதிரியான ஆட்கள் இல்லை நாங்கள். உங்களால் எங்களுக்குத்தான் காரியம் ஆகவேண்டும்‘ என்று இறங்கி பேசியபோதுதான், அப்படியா? என்று தெம்புடன் கேட்டார்கள். அவர்களிடம், பேட்டி என்றோம். இவர்களும் நோ போட்டோ, நோ நேம் என்ற எழுதப்படாத அக்ரிமென்ட்டுடன் பேசினார்கள்.

‘நீங்க நினைக்கிற மாதிரி காதல் ஜோடி இல்ல நாங்கள். இன்னிக்கு நாங்க டேட்டிங் வந்து இருக்கோம்...‘ என்று அவர்கள் ஆரம்பித்தபோதே நம் முகத்தில் அதிர்ச்சி. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுவதை அமைதியாக கேட்டோம்.

‘இங்குள்ள ஐ.டி. கம்பெனியில இருவரும் வேலை பார்க்குறோம். சனிக்கிழமையும், சன்டேயும் லீவுங்றதனால இப்படி வெளியே கிளம்பிடுவோம். தியேட்டருக்கு போய் ஆங்கில படம் பார்ப்போம். அப்புறமா பெரிய ஓட்டலுக்கு சாப்பிட போவோம். நைட் ஆனா டிஸ்கோதேவுக்கு போயிடுவோம்...‘ என்று சர்வசாதாரணமாக சொன்னார்கள் அவர்கள்.

இதற்கு மேல் அவர்களிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணியபடியே ஓட்டம் பிடித்தோம்.

கரையோரமாக நின்றிருந்த ஒரு படகுக்கு அருகில் இளைப்பாற ஒதுங்கியபோதுதான் அந்த சத்தம் நம் காதுகளில் மெதுவாக விழுந்தது.
‘ச்சீ... நீங்க ரொம்ப மோசம்...‘ என்றபடியே ஒரு பெண் மெதுவாக சொல்ல... அங்கே சற்று திரும்பிப் பார்த்தோம்.

காதலியை தன் மடியில் கிடத்தி, எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார் அந்த காதலன்?!

சந்திப்பு : நெல்லை விவேகநந்தா

பின்குறிப்பு : இங்கே இடம்பெற்ற படங்களில் உள்ளவர்கள் மெரீனா பீச்சில் காதல் வளர்ப்பவர்களே. ஆனாலும், இவர்களுக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை.
- ஆசிரியர்

Share:

ஒரு யுவதியின் கடிதம்...


அழகான ஆடை
அம்சமான அழகு
ஆராதிக்கப்பட வேண்டும் பிறரால்!

ஆனால்
என்ன நடக்கிறது?

சுதந்திரத் துள்ளலில்
வெளியில் சென்றால்
எத்தனை "பார்வைகள்" - அந்த
பார்வைகளுக்குள் எத்தனை "ஏக்கங்கள்"?

இழுத்துப் போர்த்திச் சென்றால்
அங்கேயும்
அலைபாயும் காமக் கண்கள்...
எங்கே விலகி இருக்கிறது என்ற
அர்ப்பத் தேடல்கள்...

மார்டன் ஆடையில் வந்தால்
ஆடை ஒவ்வொன்றையும்
அப்பட்டமாய் உரிக்கும் பார்வைகள்...

ஷாப்பிங் சென்றால்
விம்மும் அழகை
குறி வைத்து இடிக்கும்
இடி மன்னன்கள்!

பஸ்ஸில் பயணப்பட்டால்
இன்னும் தொல்லை...

உச்சி முதல்
உள்ளங்கால் வரை பார்த்து
காம தாகம் தணிக்கும்
போதை கண்களால்
பேதைகள் நாங்கள்
பெண்ணாய் பிறந்ததற்காய் வருந்துகிறோம்...

ஓட்டலில்
குனிந்து சாப்பிட்டாலும்
தெரியாமல்
உள்ளாடை வெளியில் தெரிந்தாலும்
ஒதுங்கிப்போன துப்பட்டாவை
சரி செய்தாலும்
அங்கேயும் எங்களை
போகிக்கும் பார்வைகள்...

எங்களுக்கு
எப்போது வரும் சுதந்திரம்?
அதற்காக
துணை வருவார்களா,
பிற பெண்ணையெல்லாம்
தாயாய் - சகோதரியாய்
பாவிக்கும் ஆண்கள்...?

- இப்படிக்கு
ஒரு சென்னை யுவதி

- கவிஞர் நெல்லை விவேகநந்தா

Share:

ஞாயிறு, 23 மே, 2010

எய்ட்ஸ் தொற்றுவது எப்படி?

 http://scrapetv.com/News/News%20Pages/Health/Images/aids-ribbon.jpg

உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைந்து, ஓருகட்டத்தில் அந்த சக்தியை முழுமையாக இழக்க வேண்டிய அபாய நிலையை ஏற்படுத்துவதுதான் இந்த நோய்.

இந்த நோயை ஒழிக்க முடியாது என்பதால், அதை கட்டுப்படுத்து வதற்காக அனைத்து உலக நாடுகளும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்து, மாத்திரைகளும் அந்த பணத்தில் இருந்து வழங்கப்படுகின்றன.

இந்த உதவி முழுமையாக எய்ட்ஸ் நோயாளிகளை சென்று சேர்வது இல்லை. பணக்காரன் ஒருவன் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் லட்சக்கணக்கில் செலவு செய்து இதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து, வாழ்நாளை சற்று நீட்டித்துக்கொள்ளலாம்.

அதுவே ஒரு ஏழையாக இருந்தால்...?

அவனுக்கு அன்றாட சாப்பாடே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது தினமும் மருந்து, மாத்திரை வாங்க பணத்திற்கு அவன் எங்கே செல்வான்? அவன் பாடு அந்தோ பரிதாபம்தான்! மரணத்தை எதிர்நோக்க வேண்டியதுதான்.

எங்கள் ஊரிலும் ஒரு பெண் உண்டு. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். அதனால், அவளது வாழ்க்கைப் பாதை மாறியது. பலருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டாள். அதற்கு கிடைத்த பரிசு எய்ட்ஸ்!

2 வருடத்திற்கு முன்பு அந்த பெண்ணை, அவளது வயதான விதவைத் தாயார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தார். யதார்த்தமாக அவர்களை கவனித்தேன். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தாள், எய்ட்ஸ் பாதித்த பெண்.

முன்பு, மிகவும் அழகாக இருந்தவள், இன்று சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில் உணவு கிடைக்காமல் எலும்பும் தோலுமாக காணப்படும் பெண் போன்று காணப்பட்டாள். ஒரு அடி -கூட அவளால் எடுத்து வைக்க முடியவில்லை. அவளது தாய்தான் உதவினார்.

இந்த பெண்ணும் ஏழைதான் என்பதால், அவளது வாழ்க்கையும் சீக்கிரமே முடிந்து போயிற்று. ஆம்... அவள் இறந்துவிட்டாள்.

எய்ட்ஸ் ஒருவருக்கு வந்துவிட்டால் இறப்பு நிச்சயம். வேண்டும் என்றால், மருந்து, மாத்திரைகளைக் கொண்டு அந்த இறப்பை தள்ளிப் போடலாம். அவ்வளவுதான்!

எனக்கு தெரிந்த சித்தா டாக்டர் ஒருவர் உண்டு. பத்திரிகைகளில், எய்ட்ஸ் குணமாகும் அதிசயம்! என்று விளம்பரம் கொடுப்பார். அதைப் பார்த்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைத் தேடி வருவார்கள். சில மூலிகை மருந்துகளை கொடுப்பார். ஒரு வாரம், 2 வாரம் அவரது மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருந்து, சில-பல ஆயிரங்களை  செலவு செய்துவிட்டு செல்வார்கள்.

ஒருநாள் அந்த டாக்டரிடமே கேட்டேன்.

"அது எப்படி எய்ட்ஸ் குணமாகும்? அதற்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையே... நீங்கள் எந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்துகிறீர்கள்?"

"எய்ட்சுக்கு மருந்து இல்லைதான். ஆனால், நம்பிக்கை இருக்கிறது அல்லவா?" என்று திருப்பிக் கேட்டார். நான், புரியாமல் விழித்தேன். அவரே அதை விளக்கினார்.

"எய்ட்ஸ் வந்துவிட்டால் மரணம் நெருங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மரணத்தை நினைத்து பயந்து பயந்து தினமும் செத்துக்கொண்டிருந்தால், 10 வருடத்தில் வரவேண்டிய மரணம் 5 வருடத்திலேயே ஏன்... ஒரு வருடத்தில்கூட வந்துவிடலாம்.

நான் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்தாக கொடுப்பது ஆரோக்கியம் தரக்கூடிய சித்த மருந்துதான். அதை நோயாளியிடம் கொடுத்து, இதை சாப்பிடு. எய்ட்ஸ் குணமாகிவிடும் என்று நான் சொன்னால், அதை அந்த நோயாளி நம்பிக்கையோடு சாப்பிடுவான். அவனுக்கு, நாம் சாக மாட்டோம் என்ற தைரியம் வந்துவிடும். அப்புறம் என்ன... 10 வருடத்தில் இறக்க வேண்டியவன், கூடுதலாக 5 ஆண்டுகள் உயிர் வாழ்வான்..." என்று விளக்கம் கொடுத்தார்.

இதுதான் உண்மை. எய்ட்சை குணப்படுத்த முடியாது. ஆனால், அதனால் வரும் மரணத்தை தள்ளிப் போடலாம்.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தல்
* மருந்து, மாத்திரைகள் முறையாக கிடைக்கச் செய்தல்
* அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுதல்
* நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்
* அவ்வபோது கவுன்சலிங் பெறுதல்
* வாழ்க்கையை மகிழ்ச்சியாக உணருதல்
* சமுதாயத்தால் புறக்கணிக்கப்படாமை
* குறிப்பாக, நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளல்
* வாழும் இடத்தை சுத்தமாக - ஆரோக்கியமாக வைத்திருத்தல்
http://www.topnews.in/files/aids.jpg

- இந்த சூழ்நிலைகள் ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு கிடைத்தால் அவரது மரணத்தை 5 முதல் 10 ஆண்டுகள் வரை தள்ளிப்போடலாம்.

வாழ்ந்து மகிழ வேண்டிய வாழ்க்கையை எளிதில் முடிக்கும் எய்ட்ஸ் நோய்க்கு நாம் பலியாக வேண்டுமா?

என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், செக்ஸ் தேவையை மனைவியுடன் மட்டும் வைத்துக்கொண்டால், இந்த நோயில் இருந்து தப்பிவிடலாம். ஆசை அபரிமிதமாக பொங்கும்போது அதற்கு வடிகாலாக விபச்சார தொழில் செய்யும் பெண்களை தேடிச் செல்வது சில இளைஞர்களது வழக்கம்.

விபச்சார பெண்ணிடம் தங்களது ஆசையை தற்காலிகமாக தணித்துக்கொள்ளும் அந்த இளைஞர்கள், அதன்பின் ஏற்படப் போகும் பாதிப்புகளை அறியத் தவறிவிடுகிறார்கள். எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.

அப்படியே, விபச்சார அழகியுடன் உல்லாசமாக இருக்கும்போது, சில பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம். இந்த பாதுகாப்பு முறைகள் இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

1. எய்ட்ஸை தடுக்கும் முதன்மையான தடுப்பு சாதனம் காண்டம் தான். இதை, மனைவி அல்லாத பிற பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும். அந்த ஆண் அணியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெண், அதை அவர் அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டும். அந்த ஆணுக்கு எய்ட்ஸ் இருந்து, பெண்ணுக்கு எய்ட்ஸ் இல்லாமல் இருந்தால், இந்த பாதுகாப்பற்ற உறவின் மூலம் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வந்துவிடும்.
http://www.popandpolitics.com/wp-content/uploads/2007/10/condom.jpg
2.    அடுத்து மனக் கட்டுப்பாடு. அழகான பெண்ணை பார்த்தால் அவளுடன் பழக வேண்டும் என்ற ஆசை மட்டுமல்ல; அவளுடன் உறவு  வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகூட ஏற்படும். அவளுக்கு எய்ட்ஸ் இருந்தால் நாமும் அந்த நோய்க்கு பலியாகிவிடுவோம். மனதை அடக்க பழகிக்கொண்டால் எய்ட்ஸ் பக்கமே போக வேண்டியது இருக்காது.
அடுத்ததாக, உறவு வைத்துக்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.

எய்ட்ஸ் நோய் பரப்பும் வைரஸ், அது பாதித்த நோயாளியின் ரத்தத்தில் மட்டுமே கலந்து பெருகியிருக்கும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்க எட்டாகி... இப்படி பல்கி பெருகக்கூடியது அதன் இயல்பு.

செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும்போது ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எல்லோருக்கும் அந்தரங்க உறுப்பின் அளவுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில ஆண்களுக்கு ஆணுறுப்பு பெரியதாக இருக்கும், சிலருக்கு சிறிய அளவில் இருக்கும் (செக்ஸ் திருப்திக்கு அளவு முக்கியமே கிடையாது. ஆண் உறுப்பின் விரைப்புதான் முக்கியம். ஏனென்றால், பெண்ணின் அதிகப்படியான உணர்ச்சி நரம்புகள், அவளது அந்தரங்க உறுப்பின் மேல் பகுதியிலேயே உள்ளன. அதை தூண்ட சிறிய விரைப்பான ஆண் உறுப்பே போதுமானது).

இதேபோல், சில பெண்களுக்கு அவர்களது அந்தரங்க உறுப்புகள் பெரியதாக, அதாவது பெண் உறுப்பு துளையின் அளவு பெரியதாக இருக்கும். சில பெண்களுக்கு சிறியதாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரிய ஆணுறுப்பு கொண்டவனும், பெரிய துளையுள்ள பெண்ணுறுப்பு கொண்டவளும் உறவு கொண்டால், அவர்களுக்கு திருப்தியும் கிடைக்கும். ஒருவேளை அவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும்கூட, அது மற்றவருக்கு தொற்றாமல் தவிர்த்துவிடலாம்.

அதாவது, உறவின்போது ரத்தக் கலப்பு ஏற்பட்டால் மட்டுமே, ஒரு எய்ட்ஸ் நோயாளியிடம் இருந்து, எய்ட்ஸ் வைரஸ், அந்த நோய் பாதிப்பு இல்லாதவருக்கு தொற்றிக்கொள்ளும். ரத்த கலப்பு இல்லை என்றால், எய்ட்ஸ் பாதித்தவருடன் உறவு கொண்டாலும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.

அது எப்படி?

ஒரு சிறிய உதாரணம் :

அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ். அவளிடம் உறவு கொள்ள வந்த ஆணுக்கு எய்ட்ஸ் கிடையாது. இருவரும் உறவு வைத்துக்கொள்கிறார்கள். எய்ட்ஸ் உள்ள பெண்ணுக்கு, அந்தரங்க உறுப்பு சிறிய துளை கொண்டது. ஆணின் உறுப்போ பெரியது. முழு விரைப்பில் உள்ள தனது உறுப்பை, அவளது உறுப்புக்குள் முட்டி போராடித்தான் அவள் செலுத்துகிறான். அவளது உறுப்புக்குள் சென்ற அவனது பெரிய ஆணுறுப்பு தொடர்ந்து அவனால் மேலும் கீழுமாக இயங்க வைக்கப்படுகிறது.

அந்த பெண்ணின் உறுப்பு சிறியது என்பதால் அவளுக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. அதேநேரம், அவளது உறுப்பு, பெரிய ஆணுறுப்பை உள் வாங்கிக்கொள்ள முடியாமல் விரிந்து கொடுக்கிறது. அதனால், அவளது உறுப்பில் விரிசல் ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

அதேபோல், ஆணின் உறுப்பும் அந்த பெண்ணின் உறுப்புக்குள் கஷ்டப்பட்டு நுழைந்ததால் அவனது உறுப்பிலும் லேசான காயம் ஏற்பட்டு, ரத்தமும் கசிய ஆரம்பித்துவிடுகிறது.

இப்போது அவளது உறுப்பிலும் ரத்தக்கசிவு. இவனது உறுப்பிலும் ரத்தக்கசிவு. இரண்டு பேரது ரத்தமும் கலக்கிறது. எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் ரத்தத்தில் உள்ள எய்ட்ஸ் வைரஸ், ஆணின் ரத்தம் வெளியாக அவனது உடலுக்குள்ளும் பிரவி விடுகிறது. இதுதான், எய்ட்ஸ் தொற்றிக்கொள்ளும் விதம்.

அதேநேரம், இருவரது அந்தரங்க உறுப்புகளும் சம அளவில், அதாவது பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்திருந்தால், ரத்தக்கசிவு ஏற்படாமல் எய்ட்ஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு நிறைய குறைந்து இருக்கும்.

இப்படி ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் ரத்தக் கசிவோடு சந்தித்துக் கொண்டால்தான் எய்ட்ஸ் தொற்றும் என்பதில்லை. எந்த வகையில் எய்ட்ஸ் பாதித்த ஒருவரது ரத்தம் இன்னொருவருக்கு கலந்தாலும், பாதிப்பு அல்லாதவருக்கு நோய் வந்துவிடும்.

வேறு எப்படியெல்லாம் எய்ட்ஸ் பரவலாம்?

சம்பவம் 1 :
http://abacus-es.net/share/imgfetch/scooter.php?img=thaiscootergirl.jpg
நீங்கள் (ஒரு ஆண்) சாலை வழியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். மொபட்டில் வந்த இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்து கிடக்கிறார். ரத்தம் வழிய வழிய கிடக்கும் அவளுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அவளைப் பார்த்த நீங்கள் பரிதாபப்பட்டு உதவி செய்ய முன்வருகிறீர்கள். உங்களுக்கு ஏற்கனவே நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. சம்பவம் நடந்த அன்று கூட அவ்வாறு நகம் கடிக்கப்போய் நகக்கண்ணில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டது.

அந்த கையோடு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் எய்ட்ஸ் பாதித்த பெண்ணை தூக்குகிறீர்கள். அவளது ரத்தமும், உங்கள் நகக்கண்ணில் கசிந்த ரத்தமும் உங்களுக்கு தெரியாமலேயே கலக்கிறது. அப்பாவியான நீங்களும் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறீர்கள்.

இதனால்தான், ரத்ததானம் கொடுக்கும்போது, அவர்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள்.

பின்குறிப்பு : மேற்படி உதாரணத்தை காரணம் காட்டி, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவருக்கு உதவி செய்யாமல் விட்டு விடாதீர்கள். உங்கள் உடலில் காயம் இருந்தால் மாத்திரம் சற்று விலகி நில்லுங்கள். அதற்காக, விபத்தில் சிக்குபவர்கள் எல்லோருக்கும் எய்ட்ஸ் இருக்கும் என்று கருதக்கூடாது அல்லவா? மேற்படி சம்பவம் நடக்க வாய்ப்புகள் குறைவுதான். அதனால், தைரியமாக மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சம்பவம் 2:

நீங்கள் (ஒரு ஆண்) முடி திருத்தம் செய்ய செல்கிறீர்கள். உங்களுக்கு முன்பு எய்ட்ஸ் பாதித்த ஒருவர் முடிவெட்டி, ஷேவிங் செய்துவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு பயன்படுத்திய பிளேடை, முடி திருத்துபவர் உங்களுக்கும் பயன்படுத்துகிறார். முன்னதாக, எய்ட்ஸ் பாதித்தவரிடம் அவர் பிளேடை பயன்படுத்தியபோது லேசாக நோயாளியை வெட்டிவிடுகிறார். அதனால் ஏற்பட்ட ரத்தம் இந்த பிளேடில் ஒட்டி இருக்கிறது. முடித் திருத்தம் செய்பவர், அதே பிளேடால் உங்களையும் கீறி விடுகிறார். அதாவது, ஷேவிங் செய்யும்போது முகத்தில் காயம் ஏற்படுத்தி விடுகிறார். அதனால், இங்கேயும் எய்ட்ஸ் உள்ள ஒருவரது ரத்தம் எய்ட்ஸ் அல்லாத ஒருவரிடம் கலந்து நோயை ஏற்படுத்தி விடுகிறது.

பின்குறிப்பு : பொதுவாக, எய்ட்ஸ் கிருமி உடலை விட்டு வெளியில் வந்த ஒருசில நிமிடங்களில் இறந்துவிடும். மேற்படி உதாரணத்தில் அதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், குறைவான வாய்ப்புதான். அதற்காக, பீதி கொள்ள தேவையில்லை. ஏன் நமக்கு வம்பு? பேசாமல் புது பிளேடை பயன்படுத்தச் சொல்லுங்கள். அப்படி செய்தால், எய்ட்ஸ் பாதிப்பு மட்டுமின்றி, வேறு எந்த மாதிரியான தோல் நோய் தொற்றுதலில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

சம்பவம் 3:

நீங்கள் ஒரு ஆண். போதை ஊசி போட்டுக்கொள்ளும் வழக்கம் உண்டு. உங்கள் நண்பர்களுடன் ஒரே சிரஞ்சியில் போதை மருந்தை உடலில் செலுத்தி பரிமாறிக்கொள்கிறீர்கள். உங்களுக்கே தெரியாமல், எய்ட்ஸ் பாதித்த விபச்சார பெண் ஒருத்தியுடன் உல்லாசம் அனுபவிக்கப்போய் எய்ட்சை வாங்கிக்கொண்டு வந்த நண்பனும் உங்களுடன் அந்த போதை ஊசியை போட்டுக்கொள்கிறார். இப்போது, எய்ட்ஸ் பாதித்த நண்பருக்கு முன்பு நீங்கள் போதை ஊசியை பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு எய்ட்ஸ் வராது. அவருக்கு பிறகு நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயம் உங்களுக்கு எய்ட்ஸ் வந்துவிடும். அதனால், போதை ஊசி போடும் பழக்கம் எய்ட்ஸ் வருவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மனைவி உடனான செக்ஸ் உறவு மட்டுமே எய்ட்ஸ் ஏற்படாமல் தடுக்கும். அதனால், உஷாராக இருங்கள். ஆசையை மனைவியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எய்ட்ஸ் இல்லா உலகத்தை உருவாக்க துணை நில்லுங்கள்.

- நெல்லை விவேகநந்தா

Share:

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

முதல் நடிகைகள் யார்?


மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவளை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.

இதை புரிந்துகொண்ட பெண், ஆண்கள் எதிரில் எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி நடிக்க ஆரம்பித்தாள். சீனப் பெண்கள் ஒருபடி மேலேப்போய் தங்களுக்கு எழுதப் படிக்கக்கூட தெரியாது என்பதுபோல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல; பல நூற்றாண்டுகளாகவே அவ்வாறு நடித்தார்களாம். அப்போது, அவர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்த எழுத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆண்களுக்கு தெரியாமல் பெண்களே உருவாக்கி கற்ற அந்த எழுத்து வடிவத்தை நுசு என்கிறார்கள். நுசு என்றால் சீன மொழியில் பெண்ணின் எழுத்து என்று அர்த்தமாம்.
Share:

புதன், 14 ஏப்ரல், 2010

பெண்ணை பார்க்கும்போது கிளுகிளுப்பு ஏன்?


ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டிரோன். இதேபோல், பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன். உண்மையில், ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்ரோஸ்டிரோன் உருவானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணின் விந்தகப் பகுதி.

இந்த விந்தகத் திசு டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த திசுவை கொண்டவனை ஆணாக்கி விடுகிறது. அதாவது, ஒரு ஆணை உயரமாக, புஷ்டியாக, வீரம் உள்ளவனாக, கொஞ்சம் வழுக்கைத்தலை கொண்டவனாக, அதிக தசை வலிமை கொண்டவனாக, உடல் தோலில் ரோமங்களை கொண்டவனாக மாற்றுகிறது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது அந்த பெண் கொழுக்மொழுக் உடலை பெறுகிறாள். அவளது மார்பு பெரியதாகும், இடை சிறிதாக இருக்கும் அதேநேரத்தில் இடுப்பு அகலமாகிறது.

இந்த தோற்றத்தில் ஒரு பெண்ணை ஆண் ஆனவன் பார்க்கும்போது கிரங்கி, கிளுகிளுப்பு கொள்கிறான்.

மேலும், இதே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் ஒரு பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எந்த நோய்க்கிருமியும் அவளை நெருங்காமல் இருக்க ஒரு பாதுகாப்பு படலத்தை உடலில் ஏற்படுத்துகிறது.
அதனால் பெண்கள் இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும்.

Share:

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்

கடந்த ஓரிரு வாரமாக எந்த நாளிதழை புரட்டினாலும் போலி மருந்து மாத்திரை பற்றி செய்திகள்.

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தான் வாழ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை ஒருசில படுபாவிகளிடம் ஏற்பட்டிருப்பதைத்தான் இதுபோன்ற செயல்கள் காட்டுகிறது.

சமீபத்தில் சன் நியூஸ் செய்தியால் பரபரப்பாக பேசப்பட்ட சுவாமி நித்யானந்தா, செக்ஸ் வைத்துக்கொண்டது தவறு என்று எல்லா பதிவர்களுமே (நானும் தான்) சாடித் தீர்த்தார்கள். சிலர், 33 வயதே ஆன நித்யானந்தா செக்ஸ் வைத்துக்கொண்டார் என்ற குற்றத்திற்காக (?!) அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கொதித்தெழுந்தார்கள்.

காவி உடை உடுத்தியவன், செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

காவி உடை உடுத்தி சாமியார் ஆன வாலிபன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது என்றால், சாதாரண மனிதன் காலாவதியாக குப்பைக்கு போக வேண்டிய மருந்து - மாத்திரைகளை புதிதாய் லேபிள் ஒட்டி விற்கலாமா?

நித்யானந்தா பற்றி கண்டபடி திட்டித்தீர்த்த பதிவர்கள், இந்த போலி மருந்து விற்பனை விஷயத்தில் மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.

நித்யானந்தா சாமியார் விஷயத்தில் எந்த பெண்ணும் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாக இதுவரை புகார் வரவில்லை. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சியில் இடம்பெற்ற நடிகைகூட, தான் அவருக்கு சேவை செய்ததாகவே குறிப்பிட்டு இருக்கிறார். நித்யானந்தாவும் அது ஒரு வகை ஆராய்ச்சி என்றே சொல்லியுள்ளார்.

ஆக, இவர்கள் வந்த வீடியோ காட்சி தப்பான ஒன்றாக இருந்தாலும்கூட, அவர்கள் இருவரும் விரும்பியே அதை செய்ததால், இதில் தவறு ஒன்றுமே இல்லைதான்.

ஆனால், பக்தர்கள் எல்லாம் கொதித்தெழுந்துவிட்டார்கள். ஆசிரமத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள். அவரது ஆசிரமங்களால் பலன் பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள், மக்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்.

இப்போது இது பிரச்சினை அல்ல. நித்யானந்தா விஷயத்தில் நம் பதிவர்களும், பொதுமக்களும் எழுப்பிய வேகம் போலி மருந்து விஷயத்தில் மட்டும் இல்லை. இது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

ஒருவேளை... போலி மருந்து சாப்பிட்டு யார் செத்தா நமக்கு என்ன? நம்ம வீட்டுக்கும், நம் குடும்பத்திற்கும் ஒன்றும் ஆகவில்லையே... என்ற எண்ணமா?


இல்லை... யார் எக்கேடு கெட்டால் என்ன? நாடு எப்படி நாசமான போனால் என்ன என்ற எண்ணமா?

நீங்கள் போலி மருந்தால் பாதிக்கப்படவில்லை என்பது எப்படித் தெரியுமா? தினமும் பத்திரிகைகளை புரட்டுகிறீர்கள்தானே?


தமிழகம் முழுக்க, ஏன்... கிராமங்களில் கூட குப்பை குப்பையாக காலாவதியான மருந்து மாத்திரைகளை இரவோடு இரவாடு கொண்டிச் சென்றிருக்கிறார்கள், இன்னமும் கொட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

நேற்று (ஏப்ரல் 3&ம் தேதி) சென்னை கூடுவாஞ்சேரி அருகே 2, 3 லாரிகள் நிறைய காலாவதியான மற்றும் போலி மருந்து மாத்திரைகளை இரவோடு இரவாக கொட்டிவிட்டு போய் இருக்கிறார்கள், நாசமாகப் போக வேண்டியவர்கள்.

இந்த பிரச்சினை மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வரவில்லை என்றால், நீங்களும்தான் அந்த போலி மருந்து, மாத்திரையை வாங்கி சாப்பிட்டு இருப்பீர்கள். நானும்தான்!

இந்த விஷயத்தில் இப்போது பெரிய கேளிக்கூத்தே நடக்கிறது.

போலி மருந்து மாத்திரை பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்கிறார்களாம். இவர்கள் விசாரித்து என்ன செய்யப் போகிறார்கள்? ஒன்றுமே ஆகப்போவது கிடையாது.

இந்த போலி மருந்து, மாத்திரைகளை தயாரித்து விற்று, தமிழக மக்களை ஏமாளி ஆக்கி கோடீஸ்வரர்கள் ஆன நாய்களும், அவர்களும் குடும்பமும்தான் நன்றாக இருக்கப்போகிறது.

ஏற்கனவே அவர்கள் பலபேரை போலி மருந்தால் கொன்றும், அரைகுறையாக கொன்றும் பல கோடி சுருட்டிவிட்டார்கள். அந்த பணத்தை தண்ணீராக செலவு செய்து, வழக்கில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள்.

தமிழக மக்களும் ரொம்ப நல்லவர்கள் ஆயிற்றே... இன்னும் 3 மாதம் போனால் இவர்கள் இந்த விஷயத்தையே மறந்துபோய் விடுவார்கள்.

போலி மருந்து விற்று கோடீஸ்வரன் ஆன நாய்கள் சுதந்திரமாக வீதி உலா வருவார்கள். அடுத்த ஆண்டே மீண்டும் தங்கள் வேலையில் இறங்கிவிடுவார்கள்.

இதையெல்லாம் தடுக்க என்ன செய்ய வேண்டும்?



* அரபு நாடுகளில் பின்பற்றப்படும் சட்டம்தான் இந்த ஏமாற்று நாய்களுக்கு லாயக்கு.

* இவர்களை நடுரோட்டில் விட்டு பொதுமக்களாலே கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டும்.

* இவர்கள் குடும்பத்து சொத்துக்கள் அனைத்தையும் அரசே எடுத்துக்கொண்டு, அவர்களை திவால் ஆனவர்களாக அறிவிப்பதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் அரசின் அனைத்து சலுகைகளையும் பறிக்க வேண்டும்.

* முக்கியமாக அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.


இந்த குடும்பத்து பெண்களுக்கு தங்களது கணவன் ஊரை ஏமாற்றிதான் சம்பாதிக்கிறான் என்பது தெரியாமலா இருக்கும்? அதனால், இவர்களும் குற்றத்திற்கு துணை போனவர்களே! 

உங்களுக்கும் எனது பணிவான ஒரு வேண்டுகோள்...

போலிச்சாமியார்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நாம்தான் தேடிப்போய் ஏமாறுகிறோம்.

ஆனால், போலி மருந்து விற்ற பரதேசி நாய்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவர்கள். அதனால், அந்த நாய்களை எதிர்த்து நிறைய எழுதுங்கள். உங்களது எழுத்திலாவது மக்களிடம் விழிப்புணர்வு பிறக்கட்டும்.

Share:

வியாழன், 1 ஏப்ரல், 2010

சுற்றுலா பிறந்த கதை


சுற்றுலா செல்லும் ஆசை எல்லோருக்குமே இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புதான் பலருக்கு கிடைக்காது.

ஆனால், சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் அப்படியே ப்ரெஸ் ஆகிவிடும். புதிதாய் பிறந்த உணர்வுகூட சிலருக்கு ஏற்படும். அதனால் இந்த சம்மரிலாவது அருகே உள்ள கூலான இடங்களுக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வாருங்கள்.

ஆமாம்... சுற்றுலா எப்படி பிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

இப்போது நினைத்த மாத்திரத்தில் விமானத்தில் உலகத்தை சுற்றி வரலாம். ஆனால், அந்த காலத்தில் இதெல்லாம் வெறும் கனவாகத்தான் இருந்தது.

உலக வரலாற்றில் முதன் முதலில் சுற்றுலாவை ஆரம்பித்து வைத்தவர்கள் ஐரோப்பியர்தான். கி.பி.15-ம் நூற்றாண்டில் புதிய நாடுகளை கண்டுபிடிக்கும் பணியில் முதன் முதலாக ஈடுபட்ட அவர்களே, தாங்கள் சார்ந்த மதத்தை பரப்பும் பொருட்டும், வாணிபத்திற்காகவும் கப்பல்களில் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அதுவே சுற்றுலா வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக அமைந்தது.


இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வழியை முதன் முதலில் கண்டறிந்தவர் போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா. இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்த இவர், 1498-ல் இந்தியாவில் கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.

வாஸ்கோடகோமாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவுக்கு வேறு திசையில் வழி காணப்போகிறேன் என்று புறப்பட்டார், உலகம் உருண்டையானதுதான் என்று நம்பிக்கை கொண்ட கொலம்பஸ். ஆனால், அவர் கண்டுபிடித்ததாக அறிவித்தது இந்தியா அல்ல. பின்னாளில், இத்தாலியைச் சேர்ந்த அமெரிக்கோ வெஸ்புகியால் மீண்டும் அந்த பகுதி கண்டறியப்பட்டு, அவரது பெயராலேயே அமெரிக்கா என்று அழைக்கப்பட்டது.

இப்படி பலரும் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து உலக நாடுகளை கண்டுபிடிக்க புறப்பட்டாலும், போர்ச்சுக்கீசிய மாலுமியான மெகல்லன் என்பவரே உலகை முதன் முதலில் சுற்றி வந்த பயணி என்ற பெயரைப் பெறுகிறார்.

அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்காவை அடைந்து, தென் அமெரிக்காவை சுற்றிக்கொண்டு பசிபிக் கடல் வழியாக சென்ற அவர் ஒரு தீவைக் கண்டதும் இறங்கினார். அந்த தீவுக் கூட்டத்திற்கு ‘பிலிப்பைன்ஸ்’ என்று பெயரிட்டார். ஆனால், அந்த தீவில் வாழ்ந்த மக்களுடன் ஏற்பட்ட சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.

அவரது கப்பல்களில் ஒன்றான விக்டோரியா மட்டும் இந்தியப் பெருங்கடலை அடைந்து, ஆப்பிரிக்காவை சுற்றிக்கொண்டு மீண்டும் போர்ச்சுக்கலை அடைந்தது. உலகம் உருண்டையானதுதான் என்பதை மெகல்லனின் இந்த கண்டுபிடிப்பு உணர்த்தியது. உலகத்தை சுற்றிவரும் வழியிலேயே மெகல்லன் கொல்லப்பட்டாலும், அவர் தலைமையில் சென்ற கப்பல் சுற்றி வந்த காரணத்தால், உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார் இவர்.

இதன்பிறகு உலக நாடுகள் இடையே வாணிபத் தொடர்பு அதிகரித்தது. புதிய நாடுகளை காணும் ஆவலில் ஒவ்வொரு நாட்டினரும் சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர். சுற்றுலாத் தொழிலும் பிரபலமாக ஆரம்பித்தது.


இருந்தாலும், உலகில் முதலாவது சுற்றுலா பயண முகவர் என்கிற பெயரை பெறுகிறவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் குக். இவரே உலக சுற்றுலாவின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர்தான், முதலின் முதலில் பொதுமக்களை திரட்டி இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.

கி.பி.1841ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற உலக பொருட்காட்சியைக் காண ஒன்றரை லட்சம் மக்களை அழைத்துச் சென்று அசத்தினார் இவர். இதன்மூலம் அவருக்கு கணிசமான லாபமும் கிடைத்தது. அதன்பிறகு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையே ஒரு தொழிலாக செய்தார்.

சுற்றுலாவின் மூலம் தாமஸ் குக் பிரபலமானதை அடுத்து ஐரோப்பாவின் பிற நாடுகளிலும், அமெரிக்காவிலும் பலர் தாமஸ் குக்கின் சுற்றுலாத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சுற்றுலாவின் வளர்ச்சியும் வேகமெடுத்தது.

மேலும், 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி தொழில்துறையில் மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. முதன் முதலில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பின்னர் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும், அதைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கும் பரவியது.

தொழிற்புரட்சியின் விளைவால் அளவுக்கு மீறி உழைத்து வந்த தொழிலாளர்கள் ஓய்வை விரும்பினர். மனஅழுத்தத்தை குறைத்துக்கொள்ள இயற்கை எழில் சூழ்ந்த வெளியூர்களுக்கு சுற்றுலா சென்றுவர ஆசைப்பட்டனர்.

தொழிற்புரட்சியின் குறிப்பிடத்தக்க விளைவுகளுள் ஒன்றான தொழிற்சங்கங்களின் தோற்றத்தால் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றார்கள். கோரிக்கைக்காக போராடினார்கள். இதன்காரணமாக, அவர்களை கசக்கி பிழிந்து வாங்கப்பட்ட வேலையின் நேரம் குறைந்தது. ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்தது. இந்த சலுகையை அனுபவிக்க அவர்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர்.

உல்லாச சுற்றுலாவுக்கு மட்டுமின்றி உலக மதங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் சிலர் நாடு நாடாக சுற்றுலா செல்ல தொடங்கினார்கள். இன்னும் சிலர் பிற நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள சுற்றுலா புறப்பட்டனர்.

நாளடைவில் நவீன கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து வசதிகள் பெருகிவிட... சுற்றுலா வளர்ச்சியானது ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. இன்று நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் நிலைக்கு வந்துவிட்டோம்.

மேலும், சுற்றுலா பற்றிய சில குறிப்புகள்...

* உலகில் முதன் முதலாக கி.பி.1830ல் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலுக்கும் மான்செஸ்டருக்கும் இடையேதான் ரெயில்பாதை ஆரம்பிக்கப்பட்டது. இது, சுற்றுலா வளர்ச்சி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
* தூங்கும் வசதியுடன் கூடிய ரெயில் வண்டியை அறிமுகம் செய்தவர்கள் அமெரிக்கர்கள். ரெயிலில் தூங்கிக்கொண்டே பயணம் செய்வதற்கு ஒரு நாள் ஒரு இரவுக்கு அவர்கள் வசூலித்தது 2 டாலர்.

* விளம்பரப்படுத்தப்பட்ட உலகின் முதல் சுற்றுலாவைத் தொடங்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டெர்வியசர். மத போதகரான இவர், லீசெஸ்டா என்னும் ஊரில் நடந்த சமயக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 570 பயணிகளை ரெயிலில் அழைத்துச் சென்றார்.

* ஒருவர் தான் வாழ்ந்து வரும் அல்லது பணிபுரிந்து வரும் இடத்தில் இருந்து வெளியிடத்திற்குச் சென்று குறுகிய காலம் தங்கி, அங்கு பல இடங்களுக்கு இன்பப் பயணம் சென்று பார்த்து வருவதுதான் சுற்றுலா என்று, சுற்றுலாவுக்கு விளக்கம் தருகிறது இங்கிலாந்து சுற்றுலாக்கழகம்.
Share: