
அவர் ஒரு சிறந்த ஜோதிடர். ஆனால் குழந்தை இல்லை. பலவித விரதங்கள் மேற்கொண்டதன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்த தந்தையான ஜோதிடர் அதிர்ந்து போனார். சாந்திமுகூர்த்தம் அன்று அவளது கணவர் இறந்து போவான் என்று உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். இருந்தாலும், பாக்கியவதி என்று...